Saturday, April 18, 2009

எனை சந்தித்த 7 நாட்கள்!


எனை
சந்தித்த 7 நாட்கள்!
( உண்மை சம்பவம் )

நான்
சந்தித்த நாட்கள் என்று சொல்வதைவிட
எனை சந்தித்த நாட்கள் என்றுதான் சொல்லவேண்டும்
ஆம்! யாரிடமும் சொல்ல முடியாத் ஒரு விஷயத்தால் நான் அடைந்த மனவேதனை எனை மிகவும் துன்புறுத்தியது அதன் விளைவாக நான் செய்த செயல்தான்,

உண்மையில் இதை நான் யாரிடமும் சொல்லக்கூடாது
ஏன் சொல்லக்கூடாது?எதை சொல்லக்கூடாது?
என்று எனக்குள் நான் சொல்லிப்பார்க்கிறேன்
சொல்லக்கூடாது என்று சொல்வதற்கு என்ன காரணம்?

ஆம் எனக்கு ஒரு தோழி உண்டு, அவளை தோழி என்று சொல்வதா? சகோதரி என்று சொல்லுவதா?துணைவி என்று சொல்வதா? காதலி என்று சொல்வதா? இல்லை எனது வாழ்கை என்று சொல்வதா? எனக்கு தெரியவில்லை ஆனால் நான் அவளை எனது இதயம் என்றுதான் அவளிடம் சொன்னேன்,நான் அவளை செல்லமாக Baby என்றுதான் அழைப்பேன்,

எனது இதயம் முழுவதும் அவள்தான் நிறைந்திருக்கிறாள்,எனது இதயத்தின் நான்கு அறைகளையும் நான் அவளுக்காக விட்டுவிட்டேன் காரணம் நான் அவள் மீது வைத்திருக்கும் அன்பு,அந்த அன்பை வெறும் வார்த்தைகளால் சொல்லமுடியாது.இன்னும் சொல்லப்போனால் இதுவரை யாருமே இதுபோல் இருந்ததும் கிடையாது,காரணம் அவள் நடந்துகொண்டவிதம் அப்படி!

அப்படிப்பட்டவள் என்னிடம் பேசாமல் போனால் ஒருநாள்,அந்த ஒருநாள் ஒருமாதமானது, என்னால் முடியவில்லை, யாரிடமும் சொல்லமுடியவில்லை காரணம் மற்றவர்களிடம் நான் அவளைப்பற்றி ரொம்ப பெருமையாக சொல்லியிருந்தேன்,

யாரிடமும் சொல்லமுடியாததால்,என்னால்சாப்பிடமுடியவில்லை யாரிடமும் பேசமுடியவில்லை, பேசவும்பிடிக்கவில்லை,வாழ்கையும் வெறுத்துப்போனது,என்ன செய்வதென்று தெரியாமல் அழைந்தேன்,

அப்படிபட்ட நேரத்தில்தான் நான் வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டில் சொல்லாமல் கிளம்பிவிட்டேன்,எங்கு செல்வதென்று தெரியாமல் கிளம்பிபோனேன்,

முதல்நாள் நான் சென்ற இடம் எனது சொந்த ஊர் மதுரை,அங்கு சென்றும் மனது அமைதியாகவில்லை மறுநாள் காலையில் அங்கிருந்து கிளம்பினேன்

(
இது இரண்டாம் நாள்)

இதற்குள் எனது தந்தை என்னை காணவில்லை என்று காவல் துறையில் புகார் செய்திருக்கிறார் இது எனக்கு தெரியாது

காவல் துறையினர் எனை தேடுகின்றனர்,
ஒரு இடத்தில் NH 45B திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சி Bypass காவல்துறையினர் எனை விசாரித்தனர் நான் எவ்வளவு சொல்லியும் எனை அவர்கள் விடவில்லை கடைசியில் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் எனை தங்கவைத்தனர் எனது பெற்றோர் வந்தபின்னர்தான் அவர்களிடம்தான் எனை ஒப்படைப்போம் என்று சொல்லிவிட்டார்கள்,

எனக்கு ஒன்றும் புரியவில்லை,நானோ ஏற்கனவே நொந்துபோய் இருந்தேன் இதுவேற என்ன செய்வதென்றும் தெரியவில்லை,

என்னிடம் பணமும் இல்லை இருந்த பணத்திற்கு வண்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டேன்,இரவு ஆரம்பித்தது சாப்பாடு வேண்டுமா? பிரியாணி வேண்டுமா? என்று கேட்டார்கள்,

உண்மையில் நான் மூன்று வேலை சாபிட்டே வெகு நாட்களாகியது காரணம் எனது Baby தினந்தோறும் என்னை கேட்பாள் ஒழுங்காக சாபிட்டாயா என்று,அவள் கேட்காததால் என்னால் சாப்பிடவும் முடியவில்லை,

அவர்களிடம் நான் Toilet போகவேண்டும் என்று சொன்னேன் காவல்துறையினரோ ரொம்ப எச்சரிக்கையாக என்னுடன் ஒருவரை அனுப்பினார்கள்,நானோ இங்கிருந்து எப்படியாவது போகவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன்,

அப்போது நேரம் இரவு 08:30 மணியிருக்கும் என்னுடன் வந்தவரிடம் நான் ஒரு சிகரட் வேண்டும் நான் Toilet போகும்போது சிகரட் பிடிப்பது வழக்கம் என்று சொன்னேன் அவரோ சிறிது நேரம் கழித்துதான் சரி என்று சொல்லி வாங்கிவர சென்றார்,

நான் இதுதான் சரியான நேரம் என்று எண்ணி ஒரே ஓட்டம் பிடித்தேன், எங்கு போகிறேன் என்றே தெரியவில்லை, எப்படியோ ஒருவழியாக காவல்நிலையத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன், இருந்தாலும் அவர்கள் தேடுவார்கள் என்கிற பயம்,ஒரு லாரி நின்றுகொண்டிருந்தது யாருக்கும் தெரியாமல் ஏறி படுத்துக்கொண்டேன்,


சரியான சாப்பாடு இல்லாததால் மயக்கத்தில் நல்ல தூக்கம் வரவே தூங்கிவிட்டேன் அது தூக்கமா மயக்கமா என்று கூட எனக்கு தெரியாது,திடிரென்று விழித்துப்பார்கிறேன் மறுநாள் நேரமும் தெரியவில்லை,இது எந்த இடம் என்றுகூட தெரியவில்லை, லாரி சென்றுகொண்டிருக்கிறது ஒருவழியாக ஒரு இடத்தில் நின்றது சட்டென்று இரங்கி ஒழிந்துகொண்டேன் ஒரு ஓரமாக,

பயங்கர குளிர் அடித்தது அங்கு,
எனது செல்போனை ஆன் செய்து பார்க்கிறேன் நேரம் விடியற்காலை மணி 04:18 சிறிது தூரம் நடந்து சென்றேன், ஒரு பேருந்து நிறுத்தம் வந்தது அருகில் இரண்டு டீ கடைகள் இருந்தது, அங்கு சென்று அண்ணே இது எந்த ஒரு என்று கேட்டேன் அவர்கள் சொன்னார்கள் இது கேரளா என்று, எனக்கு ஒன்றுமே புரியவில்லை,நான் திரும்ப கேட்டேன் அண்ணே இந்த ஊரு பேரு என்ன வென்று குமுளி என்று சொன்னார்கள்,


(
இது மூன்றாம் நாள்)

நேரமோ விடியற்காலை என்னசெய்வதென்று தெரியவில்லை படுக்கவேண்டும்போல தோன்றியது அருகில் ஒரு பேருந்து நிறுத்தம் இருந்தது அங்கு சென்று படுத்துக்கொண்டேன்,


காலை மணி 06:18 க்கு எழுந்தேன் என்ன செய்வதென்று தெரியவில்லை ஒரே குழப்பம் ஒரு டி குடித்தேன் அப்போது கூட்டம் கூட்டமாக சென்றார்கள்
டி கடைக்காரரை கேட்டேன் அவர்கள் எங்கு போகிறார்களென்று,

அவர் சொன்னார் வேலைக்கு போகிறார்கள்,
நான் கேட்டேன் என்ன வேலை எவ்வளவு சம்பளம்?
அவர் சொன்னார் ஒரு நாளைக்கு 200 முதல் 250 வரை கொடுப்பார்கள் என்றார்

நான் அவரிடம் கேட்டேன் எனக்கும் ஒரு வேலை வேண்டும் யாரிடம் கேட்கவேண்டும்

அவங்க
கூ போனா அவங்களே சொல்லுவாங்க என்று சொன்னார்

நானும் சென்றேன் ஒருவரிடம் போய் எனக்கும் ஒரு வேல கொடுங்க என்று கேட்டேன்

அவர் உனக்கு என்ன வேலை செய்ய தெரியுமென்று கேட்டார்
நான் சொல்லுரவேலைய ஒழுங்கா செய்வேன் என்று சொன்னேன்

சரி கொஞ்ச நேரம் இரு என்று சொன்னார்

ஒரு அரைமணி நேரம் கழித்து ஒருவருடன் என்னை அனுப்பி வைத்தார்

ஒருவழியாக ஒரு வேலை கிடைத்தது ரொம்ப கஷ்டமான வேலை கிடையாது ஒரு கட்டடத்தில் இருந்த தேவையற்ற பொருட்களைப் பிரித்து எடுக்கவேண்டும் நானும் என்னுடன் இருந்த ஒருவரும் சேர்ந்து செய்தோம்

மதியம் மணி 01:00 என்னுடன் இருந்தவர் வாப்பா சாப்பிட்டு வரலாம் என்று சொன்னார்

நானோ எனக்கு வேண்டாம் நீங்க போய் சாப்பிட்டு வாங்க என்று சொன்னேன் காரணம் என்னிடம் காசு இல்லை சாப்பிடவும் மனமில்லை அதனால் நான் போகவில்லை,அவர் வரும் வரை அங்கேயே உட்கார்ந்திருந்தேன்,

அப்போது நான் எனது நிலைமையை நினதுப்பார்தேன் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து என்னமோ படித்து எவ்வளோ வேலை செய்து கடைசியில்
நமது நிலைமை இப்படியாகிவிட்டதே ஆனால் நான் எப்பொழுதுமே எந்த வேலையை செய்வதற்கும் கஷ்டப்பட்டது கிடையாது எந்த வேலையையும் இழிவாக நினைத்த்துகிடையாது Pena,Test Tube, Culture, Petriplate,Diagnostic Lab, College, Office, Marketing,Tester, computer, Tv இதில் இன்று
கட்டிட வேலையும் சேர்ந்துவிட்டது ஒருவிதத்தில் இதுவும் எனக்கு பெருமையாகத்தான் தோன்றியது ,

அப்போது எனக்கு ஒன்று தோன்றியது நான்கு மொழிகளை தெரிந்த ஒரு மனிதரை
நான்கு மனிதருக்கு சமம் என்று சொல்வார்கள் அப்படியானால் இத்தனை வேலைகளை தெரிந்த என்னை என்னவென்று சொல்வார்கள் பைத்தியமென்றுதான் சொல்வார்கள் காரணம் இத்தனைகளையும் தெரிந்த நான் ஒரு இடத்திலும் இல்லாமல் போனதால்.


அவர் 02:00 மணிக்கு வந்தார்,திரும்ப வேலையை ஆரம்பித்தோம் ,ஒரு வழியாக வேலை முடிந்தது மாலை 06:00 மணி சம்பழ்மும் கொடுத்தார்கள்
ஆம் அன்று நான் வாங்கிய சம்பழம் 200/- அதில் முதலில் ஒரு துண்டை வாங்கினேன் காரணம் விரித்து படுப்பதற்கு வேண்டும் விலை 22/-,என்னுடன் வந்தவரிடம் படுப்பதற்கு ஒரு இடம் வேண்டும் என்று சொன்னேன் அவரும் ஒரு இடத்தை காண்பித்து இந்த இடம் எந்த தொந்தரவும் இருக்காது என்று சொன்னார் வெளிச்சம் கிடையாது ஒரே இருட்டாக இருந்தது,

ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம் அது,நானும் பரவாயில்லை என்று சொன்னேன் பிறகு அவர் சாப்பிட கூப்பிட்டார் நான் எனக்கு வேண்டாம் ரொம்ப நன்றி என்று சொன்னேன் அவரிடம் நாளைக்கும் வேலை வேண்டும் எப்போது உங்களை பார்க்கலாம் எங்கு பார்க்க வரனும் என்று கேட்டேன் அவர் காலை 07:00 மணிக்கு BusStand க்கு வந்துடுப்பா என்று சொன்னார் நானும் சரி என்று சொன்னேன்,

இருந்தபோதிலும் எனக்கு ஏதோ ஒரு குறை இருப்பதுபோல தோன்றியது ஆம் நான் எனது Baby My Heart அவர்களுக்கு sms,offline msge அனுப்பி ரொம்ப நாளாச்சு அதனால் ஒரு Internet Centerபோனேன்,அவர்களுக்கு என்ன அனுப்பினேன் என்பதை இங்கு நான் சொல்ல விரும்பவில்லை,பிறகு படுக்க சென்றேன்.

இரவு கழிந்தது மறுநாள் (நான்காவது நாள்)

காலையில் எழுந்தேன் சுற்றும் முற்றும் பார்த்தேன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை காரணம் நான் படுத்திருந்த இடம் அப்படி இருந்தது ஆம் அது ஒரு காலத்தில் இறந்தவரை எரிக்கும் இடமாக இருந்திருக்கிறது, அப்போதுதான் நான் எனது வீட்டை நினைத்து பார்த்தேன் பரவாயில்லை இதுவும் ஒரு அனுபம் என்று எண்ணிக்கொண்டேன்,

பல்துலக்கவேண்டும், குளிக்கவேண்டும் என்னசெய்வதென்று தெரியவில்லை நேராக BusStand டிற்கு போனேன் ஒரு கடைக்கு சென்று
Tooth Brush,Small Closep Tootpast, Small Bothing சோப்பு இவைகளை வாங்கினேன் நேராக
BusStand டிற்கு போனேன் அங்கு குளிப்பதற்கு 3 ரூபா கொடுத்தேன் குளித்து முடித்துவிட்டு வேலைக்கு போக காத்திருந்தேன், நேரமாகியது ஆனால் யாரும் வரவில்லை ஒரு கடையில் கேட்டேன் அவர் சொன்னார் இன்று Gud Friday அதனால் இன்று இங்கு யாரும் வரமாட்டார்கள் என்று சொன்னார்,

எனக்கு
என்ன செய்வதென்று தெரியவில்லை நாளை வரை எப்படி என்ற கேள்விக்குறி தோன்றியது,என்ன செய்வது என்று யோசிக்கையில் அருகில் தான் தேக்கடி சரி அங்கு செல்வோம் என்று எண்ணினேன் இங்கிருந்து 5 Km தூரம்தான் அதனால் நடந்தே சென்றேன், போகும்போது தோன்றியது போட்டிருக்கும் துணிகளை துவக்கலாம் என்று,

அங்கு
ஒரு சிலர் துணி துவைத்த்டுக்கொண்டிருந்தார்கள் அவர்களிடம் சென்று சிறிது துவைக்கும் Soap கேட்டேன் கொடுத்தார்கள் துண்டை கட்டிக்கொண்டு துணிகளை துவைத்துமுடித்து உலரவைத்தேன்,

ஒரு
மணி நேரம் கழித்து தேக்கடி Dam க்கு சென்றேன் அங்கு அமர்ந்து வந்தவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன்,அங்கு நிறைய குரங்குகள் இருந்தது அவைகள் செய்த குறும்புகளை ரசித்துக்கொண்டிருந்தேன் நேரம்போனதே தெரியவில்லை,யோசித்துப்பார்த்தேன் வேற வேலை தேடலாம்மென்று தோன்றியது திரும்ப கிளம்பினேன் ,

அப்போது மணி மதியம் 01:15 திரும்ப நடந்து வர ஆரம்பித்தேன் திடிரென்று ஒருவர் எனை பார்த்து எங்கிருந்து வர என்று கேட்டார் நான் சொன்னேன் வேலை தேடி வந்திருக்கிறேன் என்று அவர் சரி கொஞ்சநேரம் இங்கேயே நில்லு ஒருவர் வருவார் அவரிடம் சொல்லி உனக்கு ஒரு வேலை வாங்கி தருகிறேன் என்று சொன்னார்,நானும் சரி என்று சொன்னேன்

சிறிதுநேரத்தில்
போலீஸ் வந்தது அவர்கள் எனை விசாரித்தார்கள் நானும் சொன்னேன் சென்னையில் இருந்து வருகிறேன் வேலைதேடி இங்கு வந்தேன் என்று அவர்கள் நேராக எனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றார்கள் அங்கு சென்றவுடன் ஒருவர் யாரிடமோ பேசினார் அப்போதுதான் எனக்கு தெரிந்தது எல்லாம் எனது அப்பா செய்த வேலைஎன்று,

நான்
அவர்களிடம் எவ்வளவோ சொன்னேன் நான் வேலை தேடித்தான் வந்தேன் எனை விட்டுவிடுங்கள் என்று அவர்கள் உனது வீட்டிலிருந்து வருவார்கள் அதுவரைக்கும் உன்னை விடக்கூடாது என்று சொல்லிய்ருக்கிறார்கள் என்று சொன்னார்,எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை,ஆனால் அவர்கள் எனை எப்படி கண்டு பிடித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது,

வேறு வழியல்லாமல் கேரளா காவல் நிலையத்தில் காலத்தை கழிக்கவேண்டிய நிலைமை அன்று,

அங்கு அவர்கள் எனை எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை,சாப்பிடாமல் இருக்கக்கூடாது என்றார்கள் ஒரு காவல் நிலையம் போல் எனக்கு அது தோன்றவில்லை காரணம் அவர்கள் எனை கவனித்தவிதம் அப்படி,

முதல் நாள்தான் எனக்கு ஒரு ஜெயில் போல தோன்றியது,
அங்கு Tv இருந்தது எனக்கு பிடித்த சேனலை பார்க்கலாம்,அவர்கள் நான் துங்குவத்ர்க்கு ஒரு மெத்தையுடன் உள்ள ஒரு கட்டிலை கொடுத்தார்கள்,காலை எனை யாரும் எழுப்பமாட்டார்கள் நான் எழுந்திருக்கும்வரை எனை தொந்தரவும் செய்யமாட்டார்கள்,

நான்
எழுந்தவுடன் ஒரு டி வந்துவிடும் காலை Tifen மதியம் வ்கைவையான சாப்பாடு இரவு சுடச்சுட Tifen, அதுமட்டுமில்லாமல் நான் எது கேட்டாலும் வாங்கி கொடுத்தார்கள் Tamil News Paper,Ananda Vigadan, Junier Vigadan, cigrette
ஆனால் வெளியே மட்டும் அனுப்பமாட்டார்கள்


அங்கேயும் நான் சும்மா இருக்கவில்லை அங்கு ஒரு computer இருந்த்து அங்கு உள்ளவர்களுக்கு எனக்கு தெரிந்ததை சொல்லிக்கொடுத்தேன், அவர்கள் என்னை பாராட்டினார்கள்,எனக்கு மலையாளம் சரியாக தெரியாது அதனால் நான் ஆங்கிலத்தில்தான் பேசினேன் அவர்கள் எனது ஆங்கில திறமையை பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள்,

இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தது மூன்றாம் நாள் ஒருவழியாக எனது தம்பி வந்தான் எனை அழைத்துச்செல்ல ஒருவழியாக நானும் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்,

அங்கிருந்து வரும்போது அவர்களின் தொலைபேசி எண்களை வாங்கி வந்தேன்,

நான் இவ்வாறு நடந்து கொண்டதற்கு காரணம் ஒருவித மன அழுத்தம் இப்போதும் சொல்கிறேன் எனக்கு எனது Baby My Heart அவர்கள்தான் எல்லாமே அதன் பிறகுதான் மற்றவை மற்றவர்கள்,

அவர்கள்
என்னிடம் பேசாமல் போனதற்கு காரணம் நான் நல்லா இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் அதை நான் சரியாக புரிந்துகொள்ளாதது எனது தவறு,இருந்த போதிலும் எனக்கு ரொம்ப மனவருத்தத்தை கொடுத்ததால் அவ்வாறு செய்துவிட்டேன்,

இதனால் எனது பெற்றோர்க்கும் கஷ்டம் எனது தம்பிக்கும் கஷ்டம் எனை தேடிய காவல் துறைக்கும் கஷ்டம் காரணம் அவர்களுக்கு இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு எனை தேடினார்கள்

இதிலிருந்து நான் தெரிந்துகொண்டது எந்த ஒரு விசயமானாலும் யாரிடமாவது சொல்லிவிடவேண்டும்,

இதுநாள் வரை நான் ஏன் சென்றேன் என்று யாரிடமும் சொல்லவில்லை சொல்லவும் பிடிக்கவில்லை அதனால்தான் எனக்குள் நான் சொல்லிக்கொள்கிறேன்,இப்போது என்மனதிற்கு மிகப்பெரிய் ஆறுதலாக இருக்கிறது.

இருந்தபோதிலும் எனது Baby My Heart என்னுடன் பேசுவார்கள் என்கிற நம்பிக்கையில் விடைபெறுகிறேன். ..

இதைப்படிப்பவர்களாகிய உங்களுக்கு ஏதாவது கஷ்டம் இருப்பின் தயவு செய்து யாரிடமாவது எப்படியாவது சொல்லிவிடுங்கள்! தயவு செய்து என்னைப்போல் நடந்து கொள்ளாதிர்கள்!

Inak:-)























No comments: