சொல்ல விரும்பிய விஷயங்கள்!
இதை எழுத நினைத்தது சில மாதங்களுக்கு முன்பு ஆனால் இப்போதுதான்ஆரம்பித்திருக்கிறேன்.
மனிதராக பிறந்த எல்லோருக்கும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த,சந்தித்த அனுபவித்த,கஷ்டப்பட்ட விசயங்களை யாருடனேனும்சொல்லவேண்டுமென்கிற எண்ணம் ஆசையாகவோ, விருப்பமாகவோஇருக்கும்,இருந்திருக்கிறது, (இதில் எந்தவித மாற்றமும் இல்லையே)
சிறு குழந்தை அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ தான் பார்த்த அல்லதுமகிழ்ந்த விசயங்களை சொல்லுவார்கள், பள்ளிப்பருவத்தில் பள்ளியில்நடந்தவற்றை சொல்லுவார்கள்,தனது வீட்டில் நடந்தவற்றை தனது பள்ளிநண்பர்களிடம் சொல்லுவார்கள்,பண்டிகையின் போது பெற்றோர் எடுத்துகொடுத்த புது துணி புது சட்டை இவற்றைப்பற்றி பேசுவார்கள்,பகிர்ந்துகொள்வார்கள்,
அதே கல்லுரிப்பருவத்தில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தான் பார்த்தபெண்ணையோ ஆணையோப் பற்றி யாரிடமேனும் சொல்லவேண்டுமென்ற எண்ணமிருந்திருக்கும்,சொல்லியுமிருந்திருப்பார்கள்,
புதிதாக திருமணமான பெண் அவளது கணவரைப்பற்றி தனது அம்மாவிடம்சொல்லவேண்டுமென்ற ஆசை இருந்திருக்கும்,
கணவனுக்கும் தனது மனைவியிடம் தன்னைப்பற்றி சொல்லவேண்டுமென்றஆசை இருந்திருக்கும்,இது போல மனைவியும் எண்ணியிருப்பாள்,
ஒருசிலர் தனது அனுபவங்களை கவிதைகளாக,கட்டுரைகளாக,சிறுகதைகளாகசொல்லியிருக்கிறார்கள் அதன் மூலமாக நல்ல கதைகள், கவிதைகள்,கட்டுரைகள், நல்ல திரைப்படங்கள், நல்ல பாடல்கள், உருவாகிருக்கின்றன,
ஒருசிலர் தன்னைப்பற்றி சொல்ல விருப்பபட்டதால்தான் சுயசரிதைகள்வந்திருக்கின்றன,
இங்கு நான் சொல்ல விரும்பிய விஷயம்? யாரிடம் சொல்லவேண்டும்?எதற்காகசொல்லவேண்டும்? என்கிற ஒரு கேள்வி என்னுள் எழுகிறது!இருந்தபோதிலும்
சொல்லவேண்டுமென்கிற எண்ணம், விருப்பம் மட்டும் என்னைவிட்டபாடில்லை,இருந்தபோதிலும் மனது சொல்கிறது சொல்லிவிடுவென்று
எனவே சொல்கிறேன் நான் சொல்ல விரும்பிய விஷயத்தை
நான் சொல்லவிரும்பியது என்னைப்பற்றி, நான் வாழ்ந்து வந்த வாழ்க்கைமுறையைப் பற்றி, எனது பழக்க வழக்கங்களைப்பற்றி..
சொல்லவிரும்பிய அந்த நபர் ஒருவேளை எனக்கு திருமணமென ஒன்று நடந்தால், எனது வாழ்க்கை துணைவியாக வரும் ஒரு பெண்ணிடம்தான்..
ஏன் அந்தப்பெண்ணிடம் எல்லாவற்றையும் சொல்லவேண்டும்? திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் வெறும் சுகத்திற்காக மட்டும் அல்ல அவள்தான் வாழ்க்கைத்துணைவி, வாழ்க்கைத்துணைவி என்றால் என்ன?
தொடரும்.....
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment