Wednesday, December 30, 2009

எல்லாமிருந்தும்!

எனது தாத்தா,
பாட்டன் ,பூட்டன்
அவர்கள் அனுபவித்ததை விட

இன்று நான்
அதிகமாகவே
அனுபவிக்கிறேன்!

ஆம்! அன்று
தொலைக்காட்சிப்பெட்டி,
கணிணி, செல்போன்
இல்லை

பல அடுக்குமாடி
குடியிருப்புகள்
இல்லை,

வகைவகையான
உணவு வகைகள்
இல்லை

பலவிதமான
உடைகள் இல்லை

வீ ட்டை சுற்றிலும்
தோட்டங்கள் இருந்தது
துய்மையான காற்று
கிடைத்தது,

நிறைய விளைச்சல்
நிலங்கள் இருந்தது
தண்ணிர் பிரச்சனை
இல்லை விவசாயம்
செழிப்புடன் நடந்தது,

இயற்கையான
உரங்கள் எளிமையாக
கிடைத்தது

மருத்துவமனைகள் குறைவு
எளிதில் அறுவைசிகிச்சை
செய்யும் அளவிற்கு
நோய்களும் இல்லை!

தார் சாலைகள் குறைவு,
போக்குவரத்தும் குறைவு
மண் சாலைகள் அதிகம்
ஆனால் தூசிகள் இல்லை

இன்று எல்லாம் இருக்கிறது
ஆனால் விவசாயம் செய்ய
நிலங்கள் இல்லை,

இருக்கின்ற விளைச்சல்
நிலங்களுக்கு தேவையான
பாசன நீர் இல்லை

இல்லாமல் போனது
இவைகள் மட்டுமல்ல
இயற்கையும் இன்று
சிறிது சிறிதாக
அழிந்துகொண்டிருக்கிறது

அவர்கள் குறைவான
வசதிகளோடு நோயில்லாமல்
அதிககாலம் வாழ்ந்தார்கள்

நானோ எல்லாமிருந்தும்
மருந்துகளுடன் வாழ்கையை
நடத்திக்கொண்டிருக்கிறேன்!

என்னால் எனது
பாட்டனை பார்க்கமுடிந்தது
ஆனால் நான் எனது
பேரனை பார்ப்பேனா?
பார்க்கமுடியுமா?


Inak:-)




No comments: