Tuesday, September 21, 2010
40 மார்க் 01/12/1999
பத்து மாசம் கஷ்டப்பட்டு
நா பெத்த மவன
பரிட்சையில பெயிலாகி
வந்து நிக்கிறியேடா
நா பெத்த மவன!
நாலு பேரு புகழற மாதிரி
நா உன்ன நடந்துக சொல்லல
நாப்பது மார்க் வாங்கி
பாசகதானடா சொன்னே
நா பெத்த மவன!
பலபேரு புகழனாகூட
பரவாயில்ல நாலுபேரு
இகழறமாதிரி
நடந்துகிறியேடா
நா பெத்த மவன!
பல நாலு பட்டினி
கிடந்தது பணத்த
சேத்து உ பரிட்சைக்கு
பணம் கட்டினேன்டா
நா பெத்த மவன!
பள்ளிக்கு போய்
பாடத்த படிச்சு பாசாகம
இப்ப பெயிலாகி நிக்குறியேடா
நா பெத்த மவன!
எனக்கு பெரும
சேக்க சொல்லல
உ வாழ்வு பெருக தானடா
சொல்றேன்
நா பெத்த மவன!
உன்ன தூக்கி தூக்கி
கொஞ்சின என்ன
இப்ப குத்தி குத்தி
வையுறியேடா
நா பெத்த மவன!
பெத்தவ அருமையை
அறியாத மவன நீ
எப்படி வர்றவள
காப்பாத்தாபோற
நா பெத்த மவன!
எனக்கு கொல்லி
போடலனா கூட பரவாயில்ல
உனக்கு நீயே கொல்லி
போட்டுகாதடா நா பெத்த மவன!
என்னதான் நீ என்ன
வைஞ்சாலும் எ மனசு
பொறுத்துக்கு மடா
நா பெத்த மவன!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment