Friday, September 17, 2010

வாருங்கள்!

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
என்று பாடினார் அன்று!
குடிக்க குளத்தில்
தண்ணீர் எடுக்க தடை
இருக்கிறது இன்று

உடம்பில் ஓடும் குருதியில்
சாதி தெரியவில்லை
(அடி பட்டபோது உதவி செய்யவும்
அறுவை சிகிச்சையின்
போது மாற்றும் குருதிக்கும்)

குடிக்க
எடுக்கும் குளத்து நீரில்

தெரிகிறது சாதி!
வேடிக்கையாய் இருக்கிறது.
விந்தையான மனிதர்களை
பார்க்கையில்!

பல விந்தணுக்கள்(ஆண்)
ஒரு கருவில்(பெண்) சேர்ந்துதானே
இன்று இந்த மிகப்பெரிய
மனித சமுதாயம்
உருவானது.

இதில் நீங்கள் சொல்லும் சாதி
எங்கிருக்கிறது?
எந்த சாதிக்காரன்
இறந்தாலும் புதைக்க
குழி ஆறடிதானே!?
எரித்தால் ஒரு
கைப்பிடி சாம்பல்தானே!?

இறந்த போது
நாம் என்கிறோம்
இருக்கிறபோது
நீ வேறு நான் வேறு!

சாதிகளை தூக்கி எறிந்துவிட்டு
வாருங்கள் இருக்கிறபோதும் நாம்
நாமாக இருப்போம்!

மனிதனை மனிதனாய் மதிப்போம்
மனித குலம் காப்போம்!

No comments: