Wednesday, August 26, 2009

வயது14!


இது ஒரு பழைய பாடல் அதை எழுதியவர் யார் என்று எனக்கு இன்னும்தெரியவில்லை ஆனால் அதன் வரிகளை மாற்றி எழுதியிருக்கிறேன், அந்த பாடலின் உண்மையான வயது எனக்கு தெரியவில்லை இதன் வயது 14,

ஆம்! இதுதான் நான் முதன் முதலாக எழுதிய ஒன்று 1995 ஆம் வருடம் நான்பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது எழுதினேன் அப்போது ஒருமுறைபள்ளியில் பாடியிருக்கிறேன் அதன் பிறகு இதுவரை பாடவில்லை,இரண்டுவருடத்திற்கு முன்னாள் சென்னையில் உள்ள ஒரு சில FM நிலையங்களில்வாய்ப்பு கேட்டு சென்றேன் ஆனால் கிடைக்கவில்லை பரவாயில்லை அன்றுபாடியிருந்தாலும் சென்னை மட்டுமே கேட்டிருக்கும் ஆனால் இன்று உலகத்தில்உள்ள தமிழர்கள் படிப்பார்கள் அந்த பாடல் இதுதான்

அடிக்காதே தம்பி பிட்டை அடிக்காதே!
அடிக்காதே தம்பி பிட்டை அடிக்காதே
பரிட்சையை நினைத்து பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

அடிக்காதே தம்பி பிட்டை அடிக்காதே!

சிந்தித்துப்பார்த்து செய்கையை மாற்றி
ஒழுங்கா படிக்கோ கத்துக்கோ
பாடத்தை முறைய படிக்க கத்துக்கோ
தெரிந்து தெரியாம அடிச்சிருந்தா
அத திரும்பவும் அடிக்காம பாத்துக்கோ!

அடிக்காதே தம்பி பிட்டை அடிக்காதே!

திட்டம்போட்டு அடிக்கிற கூட்டம்
அடித்துக்கொண்டே இருக்குது
பிட்டை அடித்துக்கொண்டே இருக்குது!
அதை சட்டம் போட்டு தடுக்குற ஸ்குவாடும்
தடுத்துக்கொண்டே இருக்குது
ஸ்குவாடும் தடுத்துக்கொண்டே இருக்குது!
அடிப்பவனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால்
பிட்டு அடிப்பவனாய் பார்த்து திருந்தாவிட்டால்
பிட்டை ஒழிக்கமுடியாது!

அடிக்காதே தம்பி பிட்டை அடிக்காதே!

படிக்குற காலம் நெருங்குவதால்
இனி அடிக்குற அவசியம் இருக்காது!
இனி அடிக்குற அவசியம் இருக்காது
பாடம் கவனிப்பதேல்லாம் போதுவாய்ப்போனால்
பாடம் கவனிப்பதேல்லாம் போதுவாய்ப்போனால்
திரும்ப படிக்குற வேலையும் இருக்காது!

எடுக்குற நோக்கம் உறுதியாகிட்டால்
மார்க்கு எடுக்குற நோக்கம் உறுதியாகிட்டால்
இரவில் தூக்கம் வராது
மனம் உள்ளம் என்றும் தூங்காது!

அடிக்காதே தம்பி பிட்டை அடிக்காதே!

Inak:-)

No comments: