ஊனம்!
பிறக்கும்போது
நான் ஊனமாக பிறக்கவில்லை!
நான் வாழும்போது
ஊனமானேன்!
ஆம்!
பார்வையற்றவர் பாதையை
கடக்கும்போது அவருக்கு உதவாமல்
நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததால்
குருடனானேன்!
பெற்றோரின் அறிவுரையை
கேட்காமல் போனபோது
செவிடனானேன்!
சாலையில் சென்றபோது
கண்முன் எதிர்பாராமல்
நடந்த விபத்தின்போது
ஓடிச்சென்று உதவாமல் போனபோது
நானும் ஊனமானேன்!
எனது ஐம்புலன்கள்
ஆரோக்கியமாக இருந்தும்
நான் ஊனமானேன்!
நீங்களும் என்னைப்போல்தானா?
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment