Tuesday, August 4, 2009

நான் எதிர்பார்த்தது!


மன்னிக்கவும்
நான் எதிர்பார்த்தது என்று சொல்லியதற்கு,
எதிர்பார்க்கிற அளவிற்கு நான் ஒன்னும் சிறந்தவனில்லை
இருந்தபோதிலும் மனது சொல்ல நினைத்ததை சொல்லுகிறேன்

இது விஜய் தொலைகாட்சியில் நடந்து முடிந்த ஒரு
கலந்துரையாடலைப் பற்றியது

இரண்டு நிகழ்ச்சிகள்
முதல்
கலந்துரையாடல் நாடகத்தன்மை தேவையா தேவையில்லையா?

இதில் தேவையில்லை என்று பேசிய ஒருவர்
என்னால் எந்த ஒரு கம்பெனியிலும் ஆறு மாதத்திற்கு மேல் நிரந்தரமாக வேலை செய்யமுடியவில்லை காரணம் அங்கு தேவைப்படுகிறது நாடகம் என்று சொன்னார் அவரை நான் பாராட்டுகிறேன்

அதே சமயத்தில் அவர் அடுத்த நிறுவனத்திற்கு வேலைக்கு மனு போடும்போது அவருடைய Bio Data வில் என்ன காரணம் சொல்லி நிரப்புவார்?
கண்டிப்பாக அதில் எதாவது ஒரு பொய்யை சொல்லித்தான் நிரப்பவேண்டும் அதுதான் நாடகம் இந்த நாடகம் அவருக்கு ஒரு வேலையை தருகிரதுதானே?
இதை அன்று யாரும் கேட்கவில்லை.

இரணடாவது ஆடம்பர திருமணம் தேவைதானா?

நிறைய பேர் நன்றாகவே பேசினார்கள்
நான்
எதிர்பார்த்தது ஆடம்பர திருமணத்தை இப்படியும் செய்யலாமே!

இன்று நமது நாட்டில் நிறைய காப்பகங்கள் இருக்கின்றன,எத்தனையோ பேர் நோய்வாய் பட்டு சிகிச்சைக்கு பணமில்லாமல் சரியான நேரத்தில் சிகிச்சை செய்ய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,
திருமண நாளன்றோ அல்லது அதற்கு முதலோ இவர்களில் யாருக்காவது செய்யலாமே,
திருமணம் ஆடம்பரமாக செய்யவேண்டும் அதற்கு நிறைய பணம் செலவு செய்யவேண்டும் அந்த பணத்தை இதுபோல் செலவு செய்யலாமே நிறைய பேர் அதன் மூலம் பயன் பெறுவார்களே!

இவற்றைத்தான் நான் எதிர்பார்த்தேன்

இதில் ஏதேனும் தவறு இருப்பின் தயவு செய்து சொல்லுங்கள்!


Inak2721@yahoo.com

Inak:-)

No comments: