Thursday, August 5, 2010

எது வாழ்க்கை! (06-06-02)


வாழ்க்கை!
பிறந்தோம் வருகிறோம்
இறக்கிறோம் இதுதான்
வாழ்க்கையா?

வாழ்க்கை
வெறும் மனிதனுக்கு மட்டும்தான்
உரியதா? அல்லது மற்ற
ஜீவராசிகளுக்கும் பொருந்துமா?
தெரியவில்லை எனக்கு

இது ஒரு புறமிருக்க
மனிதனை பற்றியும் அவனது
பிறப்பின் இரகசியங்களைப்பற்றியும்
ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது

கடவுள்தான் இப்புவியில்
மனிதனை படைத்தானென்று
சொல்லிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்

இதில் எது உண்மை!
இது ஒருபுறமிருக்க

ஒரு செல்தான் மூலக்காரணமென்று
அறிவியல் சொல்கிறது

இல்லை இல்லை
எங்கள் கடவுள் தான்
நம்மை படைத்தானென்கிறது
ஒரு கூட்டம்!

இப்படியே காலங்கள்
நகர்ந்து கொண்டிருக்கிறது

இது ஒரு புறமிருக்க

மனித மூளை
அதிக சக்தி வாய்ந்தது போலும்
மற்றவைகளைப் பார்த்து
தன்னை வளரத்துக்கொண்டான்
இன்னும் வளர்த்துக்கொண்டு தான்
இருக்கிறான்

பூமியை ஆராய்ந்தான்
அதன் வடிவத்தை
கண்டுபிடித்தான்
பூமிக்கு ஒரு துணைக்கோளென
சந்திரனை கண்டறிந்தான்
அதில் தனது கால் தடத்தையும்
பதித்தான்

அப்போதும் அவனது தாகம்
தணியவில்லை இன்று
செவ்வாயில் காலடி பதிக்க
முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறான்

இவைகளனைத்தும்
வாழ்க்கையெனும் பாதையில்
இப்புவியில் நடந்து
கொண்டிருக்கின்றன

உண்மையில் வாழ்க்கை என்றால்
என்ன? விடை.....

மனித யுகத்தில்
வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை
எத்தனையோ கோடிகள் ஆனால்
அதில் இன்னும் வாழ்ந்து
கொண்டிருப்பவர் ஒரு சிலரே!

எங்கோ போகிறான்
தோ செய்கிறான்
எதையோ பெறுகிறான்
அதற்குத்தான் மரியாதையும்
தருகிறான்

அதையே உயர்வாகவும்
அதை பெற்றிருப்பவரே
பெரியவரென்றும் சொல்கிறான்
இன்றைய மனிதன்!

அதற்காக ஏமாற்றுகிறான்,
பொய் சொல்கிறான்,
திருடுகிறான்,கொலை செய்கிறான்

அது வேறுதுவுமில்லை
வெறும் வெற்றுக் காகிதத்தில்
அச்சிடப்பட்டுள்ள பணம்

அடே மனிதா
ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தாயா?
உனது வாழ்க்கை தரத்தை

உனது முன்னோர்களின்
வரலாற்றையாவது படித்தாயா?
இல்லையே ஏன்?

நீ உன்னுடைய அதி புத்தியால்
இயந்திரமாயமாக்கப்பட்டுவிட்டாய்
காலத்தைவிட வேகமாக
இயங்கிக்கொண்டிருக்கிராய்

அடே மனிதா
இப் பிரபஞ்சத்தில்
ஒரு பால்வெளித்திரனில்
ஒரு சூரிய குடும்பத்தில்
இந்த புவியில் நீ இருப்பது
மிகப்பெரிய விஷயம்

ஆனால் உன்னுள்தான்
எத்தனை வகைகள்

ஒருபுறம் சுயநலவாதி,
ஒருபுறம் அரசியல்வாதி,
ஒருபுறம் மதவாதி,
ஒருபுறம் தீவிரவாதி,
ஒருபுறம் பயங்கரவாதி

மனிதனே
இப்புவி தோன்றியதற்கு
வரலாறு உண்டு

பல அறிய உயிரினங்கள்
வாழ்ந்ததற்கு வரலாறு உண்டு
அதே உயரினம் அழிந்ததற்கும்
வரலாறு உண்டு

நீ வந்ததற்கு வரலாறு உண்டு
ஆனால் நீ வாழ்ந்ததற்கு வரலாறு
வேண்டுமா?வேண்டாமா?
இயற்கையாய் சாகப் போகிறாயா?

அல்லது பலவிதங்களில் சண்டை போட்டு
ஒட்டு மொத்த மனித இனத்தையே
அழிக்கப்போகிறாயா?
நீயே முடிவு செய்து கொள்

எது வாழ்க்கையென்று?

No comments: