Tuesday, August 31, 2010

ஆறறிவு!


விதை
காற்றடித்தால்
பறந்துபோகும்,

அது
விதைக்கப்பட்டாலோ
அல்லது தானாக
விதையிடப்பட்டாலோ

ஒரு செடியாக,
வாசனை
தரும் மலராக,
பூ மாலையாக,
கனியாக,
நிழல் தரும் மரமாக,
வனமாக,வனவிலங்குகளின்
புகலிடமாக, மழை தரும்
இயற்கை அரணாக
விளங்குகிறது,

ஆறடி உயரமும்
ஆறறிவும் படைத்த மனிதன்
மதம்,இனம்,மொழி,
சாதி,தீவிரவாதம்,
பயங்கரவாதம் என பிரிந்து
தானும் அழிந்து
பல அப்பாவிகளையும்
கொன்று குவித்து

அறிவியலெனும் பெயரால்
இயற்கையையும்
அழிக்கிறான்.

விதைக்கு இருக்கும்
அறிவு கூ ஆறறிவு
படைத்த மனிதனுக்கில்லையே!

6 comments:

Vaskan.S said...

Super.

Unknown said...

roomba nalla iruku keep it.

Asat said...

nice keep it up

kk1977 said...

Very nice !!!

Sumankavi said...

விதைக்கு இருக்கும்
அறிவு கூட ஆறறிவு
படைத்த மனிதனுக்கில்லையே!

நண்பா! உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் விதைக்கு சுயமாக முடிவெடுக்கும் அறிவு இல்லை. விதைக்கு மட்டுமல்ல இந்த ஒட்டு மொத்த இயற்கைக்கே இல்லை. இதை நான் ஒரு கவிதை போல் சொல்வதுண்டு "மூளையைப் படைத்த இயற்க்கைக்கு மூளையில்லை". இதை ஆழமாகப் புரிந்து கொள்ள்ளுங்கள்.
அனால் அப்படி ஒரு மூளை இருப்பதாகவும் அதுதான் நம்மைப் படைத்ததாகவும் நினைக்கும் கற்பனை தான் கடவுளையும் அதைச் சார்ந்த மதத்தையும் உருவாக்கியது. எனவே கடவுளை மறுக்கும் மதத்தை ஒழித்துக்கட்டும் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம் வாழ்த்துக்கள்.

பொருளே முதலில் இருந்தது என்பது
பொருள் முதல் வாதம். - அந்தப்
பொருளை இயக்கும் அறிவைப் படைத்தது
மனிதனின் பிடிவாதம்.
- சுமன்கவி

தஞ்சை மைந்தன் said...

//////////ஆறடி உயரமும்
ஆறறிவும் படைத்த மனிதன்
மதம்,இனம்,மொழி,
சாதி,தீவிரவாதம்,
பயங்கரவாதம் என பிரிந்து
தானும் அழிந்து
பல அப்பாவிகளையும்
கொன்று குவித்து////////

ஒரு சிறிய விதை தான் மிகப் பெரிய ஆலமரத்தின் தொடக்கம் அதேபோல் ஒரு தனிமனித மாற்றம் தான் சமுதாய மாற்றத்தின் தொடக்கம்.............................நான் மாறினால் இந்த உலகம் மாறபோகிறதா என்று கேட்காமல் இந்த உலகம் மாறினாலும் மாறாவிட்டாலும் நான் என்னை மாற்றிக்கொண்டு மரத்தையோ, விலங்குகளையோ, அடுத்தவனையோ கெடுக்காமல், நசுக்காமல், மனிதநேயத்தோடு வாழ்வேன் என்று உறுதிகொண்டு சமுதாய மாற்றத்திற்கு விதை இடுவோம்