Saturday, August 28, 2010

நவீன புத்தர்!


புத்தர்
ஊருக்கு வெளியே இருந்த அரச மரத்தடியில் தியானத்தில் இருந்தார்

ஒரு பெண் தனது ஐந்து வயது மகனுடன் வந்தார்

ஐயா எனது மகனுக்கு பள்ளியில் இடம் கிடைக்க வில்லை தாங்கள்தான் சிபாரிசுசெய்யவேண்டும் என்று சொன்னார்


புத்தர் என்னமா சொல்கிறாய் பாரதி கண்ட கனவு நினைவாகி விட்டது ஆனால்உனது மகனுக்கு பள்ளியில் இடம் கிடைக்க வில்லை என்று சொல்கிறாய்? அதற்கு நான் சிபாரிசு செய்ய வேண்டுமா?

பெண்மணி ஐயா பாரதியின் எந்த கனவு நிறைவேறியிருக்கிறது?
தெருவெங்கும் பாடசாலைகள் அமைப்போம் என்று சொன்னார்,இன்றுதெருவெங்கும் பாடசாலைகள் இருக்கிறது ஆனால் அவைகள் கல்வியை ஒருசேவையாக செய்யவில்லை அதை ஒரு வியாபாரமாக செய்கிறார்கள்


சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொன்னார், இன்று அந்த சாதியால் தான் எனது மகனைபள்ளியில் சேர்க்க முடியவில்லை


மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையை போக்குவோம் என்று சொன்னார்
இன்றோ பெண்களை ஒரு காட்சி பொருளாகவும் காமத்தை துண்டும் ஒருபொருளாகவும் பயன் படுத்துகிறார்கள்


இதுதான் பாரதி கண்ட கனவா ஐயா?

பெண்ணே இதற்கு நவீன பாரதிதான் பதில் சொல்ல வேண்டும் சரி உனது பிரச்சணையை சொல்,

பெண்மணி ஐயா எனது மகனுக்கு சாதி சான்றிதழ் இல்லை அதைகொண்டுவந்தால்தான் சேர்ப்போம் என்று சொல்லிவிட்டனர்

சரி பெண்ணே அதற்கு காலதாமதமாகும்,முதலில் நீ உன் மகனை பள்ளியில்சேர்த்துவிட்டு வா அவர்களிடம் இன்னும் ஓரிரு நாட்களில் தருகிறேன் என்றுசொல் என்று சொன்னார்,

அதன்படி அந்த பெண்மணி தனது மகனை பள்ளியில் சேர்த்துவிட்டு வந்தார்


ஐயா தாங்கள் சொன்னபடி நான் எனது மகனை ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டேன்இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் ஐயா என்றாள்

புத்தர் பெண்ணே நான் சொல்வதை கவனமாக கேள் அதன்படி இருவரைஅழைத்து வா அப்படி நீ அழைத்து வந்தால் கண்டிப்பாக உனது பிரச்சனை ஒருமுடிவுக்கு வந்துவிடும்,

சொல்லுங்கள் ஐயா செய்கிறேன் என்றாள்

பெண்ணே எவரொருவர் வீட்டில் தான் அல்லது எனது குடும்பம் இந்த சாதி எனஎந்தவித சான்றிதழும் வாங்காமல் இருக்கிறாரோ அவர்களில் ஒரே ஒருவர்


மற்றும் புறத்தால் எவரொருவர் இன்ன மதம் இன்ன இனம் (பார்வையில்இந்து,கிருத்துவர்,இஸ்லாமியர்,
சீக்கியர்,கறுப்பர்,வெள்ளையர்)என எளிதில்
கண்டு கொள்ள முடியாமல் சொல்ல முடியாமல் இருக்கிறாரோ

அவரை அழைத்து வா என்று சொன்னார்.

பெண்மணி ஐயா இவர்களை நான் எங்கு போய் தேடுவது?

இந்த உலகம் முழுக்க எங்கு வேண்டுமானாலும்
போய்
தேடி அழைத்துவா என்றார்.

சிறிது நாட்கள் கழித்து பெண்மணி வந்தாள்
என்னமா அழைத்து வந்தாயா?
ஐயாஎனது நீங்கள் சொல்லியது போல் எவரும் இல்லை


பெண்ணே இதுதான் நீ வசிக்கும் இன்றைய உலகம்

உனக்கு அடிபட்ட போதுதான் நீ வலிக்கிறது என சொல்கிறாய்

அதையே அங்கு போகாதே அதை செய்யாதே என மேதைகளும் மகான்களும்சொன்னபோது கேட்கமருத்து விட்டாய்

இப்போது நீயே சொல்கிறாய் பாரதி கண்ட கனவு வேருவிதமாகத்தான் நிறைவேறியிருக்கிறது என்று


ஏன் உனக்கு தோன்றவில்லை நாம் ஒரு விதையாக மாறக்கூடாதென்று,
அப்படி நீ எண்ணியிருந்தால் உதவி கேட்டு என்னிடம் வந்திருக்க மாட்டாய்


ஐயா அப்படியென்றால் முடிவு என்ன?

இதற்கு என்னால் முடிவு சொல்ல முடியாது ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகசொல்லமுடியும் மனிதன் இயற்கையாய் அழிவதை விடசாதியாலும்,இனத்தாலும், மதத்தாலும் சண்டையிட்டு அழியபோவது உண்மை.

குறிப்பு:

இது வெகு காலமா எனது மனதில் ஓடிக்கொண்டிருந்த ஒன்று

புத்தரை பற்றி நான் இரண்டாம் வகுப்பில் படித்திருக்கிறேன் அதில் சொல்லப்பட்ட ஒரு விஷயம் என்னை சிந்திக்க வைத்தது ஆம் அதில் ஒரு பெண் தனது இறந்த மகனின் சடலத்தை புத்தரிடம் கொண்டு வந்து
ஐயா எனது மகனை உயிர்பித்து கொடுங்கள் என்று சொல்வார் அதற்கு புத்தர்
பெண்ணே சாவேதும் அறியாத வீட்டில் இருந்து சிறு கடுகேனும் கொண்டுவா உன் மகனை நான் உயிர்த்தெழ செய்கிறேன் என்று சொல்லுவார்

அந்த பாடல் வரி இன்னும் உயிரோடு இருந்திருக்கிறது எனது உள்ளத்தில் அதுதான் இன்று நவீன புத்தராக வந்திருக்கிறது இதில் இன்னும் சொல்ல நினைத்தேன் ஆனால் இதுவே போதுமென தோன்றியது

உங்கள் கருத்துக்கள் அவசியம் தேவை.

3 comments:

Vaskan.S said...

Very Good. 2 Spelling Mistake.

Msc said...

supper kavithai

Anonymous said...

காட்சி பொருளா? காமப் பொருளா ??
சாதி இனம் மதம் கானா ஒற்றுமை
பெண்ணை பார்ப்பதில் மட்டும் ......
நீ வசிக்கும் உலகும் இதுதான் பெண்ணே..!!!???
ஹாய் மனை வாங்கி வீடு கட்டி கார் வாங்க காசோலை தரும்
வங்கி விவசாயம் இனி செய்ய தருமா?
ஏற்ற தாழ்வு ..இப்பூவுலகு....என்ன கண்டாய் பெண்ணே..? பெருங்கடலும் சிறு துளியில் துவங்கும்
பெருவட்டமும் சிறு புள்ளியில் துவங்கும்
மனித வாழ்கையும் நம்பிக்கையில்.. ஊக்கத்தில் தான்!
பசியுடன் செல்லும் பறவையும் உண்டு திரும்பும் ...விலங்கும்
அப்படியே...
மரத்தின் பலம் வேரில்! யானைக்கு பலம் துதிக்கை..
மனிதனுக்கு நம்பிக்கை. ...
விடாதே ...நம்பி எழு..முயற்சி முழுமை உறும்..!!
SASIKALA..sasiandsasi200@gmail.com