Thursday, May 28, 2009

எது வாழ்க்கை? (06-06-2002)

வாழ்க்கை!
பிறந்தோம், வளர்கிறோம்,
இறக்கிறோம், இதுதான்
வாழ்க்கையா?

வாழ்க்கை!
வெறும் மனிதனுக்கு மட்டும்தான்
உரியதா?அல்லது மற்ற
ஜீவராசிகளுக்கும் பொருந்துமா?
தெரியவில்லை!

இது ஒருபுறமிருக்க

மனிதனைப் பற்றியும் அவனது
பிறப்பின் இரகசியங்களைப் பற்றியும்
ஒருபுறம் ஆராய்ச்சிகள் நடந்து
கொண்டிருக்கிறது!

ஒரு செல்தான் மூலக்காரனமென்று
சொல்கிறது அறிவியல்

கடவுள்தான் இப் புவியில்
மனிதனை படைத்தானென்று
சொல்லிக்கொண்டிருக்கிறது
ஒரு கூட்டம்!

இதில் எது உண்மை?
இது ஒருபுறமிருக்க

இப்படியே காலங்கள்
நகர்ந்துகொண்டிருக்கிறது!

மனிதனின் மூளை
அதி சக்திவாய்ந்தது போலும்!
மற்றவைகளைப் பார்த்து
தன்னை வளர்த்துக் கொண்டான்!
இன்னும் வளர்த்துக்கொண்டுதான்
இருக்கிறான்!

பூமியை ஆராய்ந்தான்
அதன் வடிவத்தைக்கண்டுபிடித்தான்!
பூமிக்கு ஒரு துணைக் கோளென
சந்திரனை கண்டறிந்தான்
அதில் தனது கால் தடத்தையும்
பதித்தான்!

அப்போதும் அவனது தாகம்
தனியவில்லை!இன்று
செவ்வாயில் காலடி பதிக்க
முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறான்

இது ஒருபுறமிருக்க

இவைகளனைத்தும்
வாழ்க்கையெனும் பாதையிலே
இப்புவியில் நடந்து கொண்டிருக்கிறது!

உண்மையில் வாழ்க்கை என்றால் என்ன?
விடை ......

மனிதயுகத்தில்
வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை
எத்தனையோ கோடிகள் ஆனால்
அதில் இன்னும் வாழ்ந்து
கொண்டிருப்பவர் ஒரு சிலரே!

எங்கோ போகிறான் ஏதோ செய்கிறான்
எதையோ பெறுகிறான் அதற்குத்தான் மரியாதையும்
தருகிறான் அதையே உயர்வாகவும் அதை
பெற்றிருப்பவர் தான் பெரியவ்ரென்றும்
அதுதான் வாழ்க்கை என்றும்
சொல்கிறான் இன்றைய மனிதன்!

அது வேறெதுவுமில்லை
வெறும் வெற்றுக்காகித்திதில்
அச்சிடப்பட்டுள்ள பணம்!

அடே மனிதா!
ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தாயா?
உனது வாழ்க்கை தரத்தை!
உனது முன்னோர்களின்
வரலாற்றையாவது படித்தாயா?

நீ இப்போது உன்னுடைய
அதி புத்தியால் இயந்திரம்யமாக்கப்ப்ட்டாய்
காலத்தைவிட நீ வேகமாக
இயங்கிக்கொண்டிறுக்கிறாய்!

அடே மனிதா!
இப்பிரபஞ்சத்தில்
ஒரு பால்வெளித்திரனில்
ஒரு சூரிய குடும்பத்தில்
இப்புவியில் நீ இருப்பது
மிகப்பெரிய விஷயம்

ஆனால் உன்னுள்தான்
எத்தனை வகைகள்
அரசியல்வாதி,மதவாதி,
பயங்கரவாதி,திவிரவாதி,
சுயநலவாதி

மனிதா! வாழ்க்கை ஒருமுறைதான் வரும்
அந்த வாழ்க்கையில் வாழ்க்கையைப்பற்றி
தெரியாமல் வாழ்பபோகிறாயா?
அல்லது தெரிந்து வாழ்பபோகிறாயா?
அல்லது நீ இறந்தும் வாழ்பபோகிறாயா?

மனிதா!
மீண்டுமொருமுறை
நினைவுபடுத்துகிறேன்!

இப்புவி தோன்றியதற்கு
வரலாறு உண்டு!
பல அரிய உயிரினங்கள்
வாழ்ந்ததற்கும் வரலாறு உண்டு

அதே உயிரினங்கள்
அழிந்த்த்ற்கும் உண்டு வரலாறு!

நீ வந்ததற்கும் உண்டு உனது
பிறப்பு சான்றிதல்
அதே சமயத்தில்
நீ வாழ்ந்ததற்கு ஒரு சான்று
வேண்டுமா? வேண்டாமா?

நீயே முடிவு செய்துகொள்
எது வாழ்க்கையென்று!

Inak:-)























vazhkkaiyenrum




















No comments: