Monday, May 18, 2009
வேதனைப்படுகிறேன்!
இதை நான் இன்று எழுதவில்லை, 03-03-02 அன்று எழுதியது,அன்று எதோசொல்லவேண்டுபோல் தோன்றியது எழுதினேன் அதை அப்படியே இங்குஎழுதியிருக்கிறேன்
காந்தி பிறந்த மண்ணில்
அகிம்சையை காணவில்லை
வேதனைப்படுகிறேன்
அகிம்சை பிறந்த நாட்டில்
மதவாதிகள் வளர்ந்துவிட்டனர்
எந்த மதமும் தனக்கு
கோவில் வேண்டுமென்று
கேட்கவில்லை!
எந்த கடவுளும் தனக்கு
சிலை வேண்டுமென
சொல்லவில்லை!
எந்த சாமியும் தனக்கு
உருவ வழிபாடு வேண்டுமென்று
கட்டளையிடவில்லை!
அனைத்தையும் நீ யே
செய்துகொண்டு நீ யே
எடுத்துக்கொள்கிறாயே
இது நியாயமா?
இராமர் என்ன
இப்போது எனக்கு கண்டிப்பாக
ஆலயம் வேண்டுமென்று
கேட்டாரா?
அல்லது உயிர் பலியிட்டுத்தான்
எனக்கு ஆலயம் கட்டவேண்டுமென்று
கட்டளையிட்டாரா?
ஏனடா இன்னும்
மதம் மதமென்று
அலைந்து கொண்டிருக்கிறாய்!
ஏ மதிகெட்ட மனிதனே
உனது மதவெறியால்
கோத்ரா இரயில் நிலையம்
வரலாற்றில் இடம் பிடித்தது
போதாதா?
பல உயிர்களை பலிவாங்கியும்
உனது மதவெறி இன்னும்
தனியவில்லையா?
மதங்களின் பெயரால் செலவிடுவதை
மனித குலத்திற்குசெலவிடு!
மதங்களின் பெயரால்
சண்டையிடுவதை நிறுத்து!
மனிதகுலம் சிறக்க பாடுபடு
மனிதனை மனிதனாக மதிப்போம்
மனிதகுலம் காப்போம்!
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment