Monday, May 18, 2009

Birthday Message!


இது என்னோட நண்பன் ஒருவருக்காக எழுதிய வாழ்த்துச்செய்தி 13-03-02 அன்றுஎழுதியது அப்படியே இங்கு எழுதியிருக்கிறேன்

Hello! Mr.
Today s ur Birthday (14-03-02)
so உங்களுக்கு வாழ்த்து
சொல்ல வேண்டுமா?

உங்களை வாழ்த்த நான் யார்?
உங்களை வாழ்த்த எனக்கு
தகுதியிருக்கிறதா?

இருந்தபோதிலும் நான்
கற்றதை வாழ்த்தாக
சொல்கிறேன் உங்களுக்காக!

பிறந்தநாளுக்கு அன்பளிப்பு
வாங்கி கொடுப்பதைவிட
நல்ல விஷயங்களை சொல்வதையே
நான் சிறந்த பரிசுப்பொருளாக
இருக்குமென நினைக்கிறேன்


Hello Mr.
வாழ்க்கை நமக்கு கிடைத்த
ஒரு அறிய பொக்கிசம்
அதை நாம் எப்படி எடுத்துக்
கொள்கிறோமோ அதைப்பொருத்துதான்
அதன் தன்மை அமையும்!

வெறும் கல்தான்! அது
சிற்பியின் கையில் கிடைத்தால்
அழகிய சிலையாக,
அறிய சிற்பமாக மாறுகிறது,
அதே கல் சிறுவனிடம்
கிடைத்தால் மாங்காய்
எரியத்தான் போகிறது!

வெறும்கல்தானே என்று
சும்மாயிருந்தால் அது கடைசிவரை
கல்லாகத்தான் இருக்கும்

வாழ்க்கையின் வெற்றி
போராடுவதில்தான் இருக்கிறது
அதற்காக போராட்டமே
வழ்க்கையாகிவிடகூடாது

எனைப்பொருத்தவரை
வெற்றி என்பது ஒருநிமிட
நிம்மதி பெருமூச்சி அந்த
மூச்சி இறக்கும்போது
கிடைத்தாலும் அது வெற்றியே!

எதையும் தனித்து செய்!

தோல்வியை அனுபவமாக கொள்!
வெற்றியை பகிர்ந்துகொள்!

தனித்து போராடுவதில்தான்
திறமை இருக்கிறது

தன்னம்பிக்கை கொள்!
தன்னம்பிக்கை இல்லாதவன்
கைகாலிருந்தும் ஊனமாவான்!

அதற்காக யாரையும்
நம்பவேண்டமென சொல்லவில்லை
முதலில் உன்னை
நீ நம்பு!

வயதிற்கு ஏறுகிற சக்திதான் உண்டு
இறங்குகிற சக்தி கிடையாது
இது இயற்கையின் நியதி!

இன்றுமுதல் வந்த வயதிற்கு
நீ என்ன செய்யப்போகிறாய்
என்பதில்தான்
இருக்கிறது!

அதுதான் இந்த நாளுக்கு
நீ கொடுக்கும் மதிப்பு!

வாழ்க்கையை புரிந்து
நடந்து கொள்!

இருக்கும்போது வாழ்வதைவிட
இறந்தபிறகும் வாழ்வதில்தான்
ஒருவருடைய வாழ்க்கை இருக்கிறது!

இந்த நாள் இனிதே
அமைய வாழ்த்த தகுதியில்லை
இறைவனை வேண்டுகிறேன்

என்றும்
அன்புடன்

Inak:-)





No comments: