Monday, May 4, 2009

வாய்மை!

இதை நான் இரண்டு வருடங்களுக்கு முன்னாள் எழுதி துண்டு பிரசுரமாக நான் வசித்த பகுதியில் ஒட்டினேன்,காரணம் அந்த பகுதிக்கு 20 வருடகாலமாக பட்டா வழங்கப்படாமல் இருந்தது அதை எப்படியாவது அவர்களுக்கு நினைவு படுத்த்வேண்டும்போல் தோன்றியது அன்று நான் பயன்படுத்தியது பேனாவும் வெள்ளைப்ப் பேப்ப்ரும்தான் ஒரு வருத்தப்படவேண்டிய விஷயம் இன்றும்
பட்டா கிடைக்கவில்லை.


வாய்மை!

ளிகைக்டைக்குச்சென்று
காய்கறி வாங்கினேன்
கடைக்காரர் சில்லறை
இல்லையென்றார்

சில்லறைக்கேற்றவாறு
சிறு பச்சை மிளகாயை
வாங்கிக்கொண்டேன்

இரண்டு சக்கர வாகனத்தை
சரிசெய்து வந்தேன் ஒரு வாரத்தில்
மீண்டும் பழுதடைந்தது
அதே மெக்கானிக்கிடம் கொடுத்து
கொடுத்த பணத்திற்குள்ளேயே
சரி செய்தேன்

எனது மனது கேட்கிறது
சில்லரைகளை சேமித்த நீ
சில இலட்சங்களை இழந்து
கொண்டிருக்கிறாயேயென்றது
புரியவில்லையென்றேன்

நீ வசிக்கும் வீட்டின்
நில மதிப்பைவிட அதிகமாக
வரி செலுத்துவது உனக்கு
தெரியவில்லையா? என்றது

பழுதடைந் வண்டிக்கு காரணம்
நேற்று போட்ட சாலை
இன்று குண்டும் குழியுமாக
ஆனதை நீ அறியவில்லையா?

ஓட்டுப்போடுகிறாய்
ஒழுங்காக வரியும் கட்டுகிறாய் இவற்றை
கேட்கும் உரிமை இல்லையா?உனக்கு
அல்லது வாய்மை இல்லையா?

எனக்கு புரியவில்லை
உங்களுக்கு?

Inak:-)

No comments: