இது நான் கல்லுரியில் வேலை பார்த்தபோது எழுதியது,(28-03-04)அந்த வருடம்அவர்கள் படிப்பு முடிந்து போகிறார்கள் அவர்களின் பிரிவை என்னால்தாங்கிக்கொள்ளமுடியவில்லை காரணம் மிகவும் நல்ல மாணவமாணவிகள்அவர்கள் அதை அப்படியே இங்குஎழுதிய்ருக்கிறேன்.
எங்கே எனை அழைத்த
குரலோசைகள்!
தேடுகிறேன்! தேடுகிறேன்
சுற்றி சு ற்றித் தேடுகிறேன்!
ஒரு வேளை எனது செவிதான்
செவிடானதா?
இல்லை! இல்லை!
ஓசை மட்டும் கேட்கிறது
உருவங்களை காணோம்!
இது என்ன உறவு?
எனக்கு புரியவில்லை
தெரியவில்லை!ஆனால்
தேடுதல் மட்டும் நிற்கவில்லை!
இரவில் சுற்றும் வொவாளைப்போல்
நான் பகலில் சுற்றி சுற்றி
அழைக்கிறேன்! என் பசங்களா!
எங்கே இருக்கீங்க என் பசங்களாவென்று!
எனது அழைப்பு மட்டுமே
திரும்ப கேட்கிறது!
அன்று அவர்கள் கேட்டது
சொன்னது எதுவுமே இன்று
கேட்கவில்லையே ஏன்?
எனை உரிமையோடு அண்ணாவென்று
அழைத்த அந்த உறவுகள் இன்று
எங்கே போயிற்று?
எனை திட்டிய அந்த குரல்கள்
இன்று எங்கே போயிற்று?
எனை தேடியவர்கள் இன்று
எங்கே போனார்கள்?
அன்று அது வேண்டும்
இது வேண்டுமென கேட்டவர்கள்
இன்று எங்கே போனார்கள்?
அண்ணா உங்க செல்போன்ல
ஒரு போன் பண்ணிகிட்டுமான்ன?
இன்று எனது செல்போன்கூட
செத்துப்போயிற்று!
அவர்களுடைய தேவைகள்
பூர்த்தியாகி விட்டது அதனால்
எனது சேவை இனி தேவையில்லை
இதுதான் உண்மை!
உண்மை இதுவானால் அந்த
உறவுகளுக்கு என்ன அர்த்தம்?
எனக்கு தெரியவில்லை!
உண்மையை உறவுகளோடு
புரியவைத்த அவர்களுக்கு
எனது மனமார்ந்த நன்றி!
வாழ்த்துக்கள் அவர்கள்
வாழ்வு சிறக்க!
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment