இதை நான் எழுதியது 01-10-01, அன்று எனக்கு எப்படியாவது எதாவதுசொல்லவேண்டுபோலிருந்தது அதை எப்படியோ எழுதினேன் அதைத்தான்இங்கும் எழுதியிருக்கிறேன் ஆனால் இன்றும் தேடிக்கொண்டுதான்இருக்கிறார்கள் .
பின்லேடனே ஒருநிமிடம்!
நீ முன்னே வைத்த காலை
பின்னே வை!
உனது கோரிக்கை
உனக்கு வேண்டுமானால்
நியாயமானதாக படலாம்
அதே சமயத்தில்
அதன் விளைவுகளை நீ
பார்க்கலையா?
நீ கருவறையிலிருக்கும்போது
எந்த மதமென்பதை அறிந்தாயா?
நமது சகோதர சகோதரிகளை
கல்லறைக்கு அனுப்புகிறாயே
இதைத்தான் உனது மதம்
உனக்கு கற்றுக் கொடுத்ததா?
எந்த மதமும் இதுபோல்
சொன்னதாக எனக்கு
தெரியவில்லை!
மதம் மனிதனுக்காக அன்றி
மனிதன் மதத்திற்காக அல்ல
இதை நீ படிக்க்விலையா?
உலகமே உன்னை
விரட்டுகிறது நீயும்
ஓடிஓடி ஒழிந்து
கொண்டிருக்கிறாய்
உனது ஓட்டம் நிற்கவேண்டுமானால்
நீ முன்னே வைத்த காலை பின்னே
வைப்பதைத் தவிர வேறு வழியில்லை
மதங்களின் பெயரால்
சண்டையிடுவதை நிறுத்து!
மனிதனை மனிதனாக
மதிக்க கற்றுக்கொள்!
உன்னை விரட்டுவதை
உலகம் நிறுத்தும்
மனிதகுலம் காக்க போரிடு
உலகம் உன்னை போற்றும்!
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment