வெள்ளையனின்
கைப்பிடிக்குள்ளிருந்து
தேசத்தை விடுவித்த
மகாத்மாவே!
இந்த விடுதலைக்காக
எத்தனை இயக்கங்கள்!
எத்தனை போராட்டங்கள்!
எத்தனை பயணங்கள்!
எத்தனை சிறைவாசம்!
அனைத்தையும் தாங்கிக்கொண்டு
அகிம்சை வழியில் நடந்த
அன்னலே!
வெள்ளையனின் தடிகள்
அடிமேல் அடி விழுந்தும்
தேசிய கொடியை உயிர் மூச்சாய்
தாங்கிய நாட்டுப்பற்று கொண்டவரே
விடுதலை பெற்றுத்தந்தும்
பதவி வேண்டாம் மக்களன்பு
ஒன்றே போதுமென்று வாழ்ந்தவரே!
தாங்கள் இன்றும்
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறிர்கள் ஆம்!
பணத்திற்காக எதையும்
செய்யும் பணக்கூட்டத்தின்
நடுவில் ஆம்! அந்த
பணத்தில்தான் உங்களது
உருவம் பொறிக்கப்பட்டுள்ளதே!
பதவிக்காக தங்கள்
பிறந்தநாளன்று மகாத்மாவின்
சிலைக்கு மாலை அணிவித்து
மக்களை மயக்கும் அரசியல்
கூட்டத்திற்குள்!
கொள்கைகளை வகுத்து
அதன்படி நடந்திர்கள்
ஆனால்! இன்று
அரசியலுக்காக புதுப்புது
கொள்கைகளை வகுக்கிறது
இன்றைய அரசியல் கூட்டம்!
அகிம்சை ஒன்றே
குறிக்கோளாய் வாழ்ந்திர்கள்
ஆனால் பதவி ஒன்றே
குறிக்கோளென்கிறது
இந்த கூட்டம்!
இந்த இனிய நாளென்று (02-10-2001)
தங்களது சிலைக்கு மாலை அணிவித்தால்
எங்கு இவன் மாலை அணிவித்து
புதுக் கட்சியை உருவாக்கிவிடுவனோவென
அஞ்சுகிறது ஒரு கூட்டம்!
இது இன்றைய நமது
இந்திய தேசத்தின் நிலை
எனைப்பார்த்து யாரும்
அஞ்சவேண்டாம்
எனவே தங்களை எனது
மனதிற்குள் வணங்குகிறேன்!
வாழ்க பாரதம்!
வளர்க அகிம்சை!
வந்தே மாதரம்!
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment