Monday, June 1, 2009

முடியாது!


வாழ்கையில் முடியாதென்று
எதுவுமே கிடையாது!

ஆனால்!
என்னவளைப் பற்றியும்
அவள் என்மீது
வைத்திருக்கும்
அன்பைப் பற்றியும்
வர்ணித்து கவிதை எழுத
முடியாது!

இருவரும் ச்ந்திக்காதபோது
எங்களின் உள்ளம்தான்
பேசும்!

இருவரும் சந்திக்கும்போது
எங்களின் இரு கண்கள்
மட்டுமே வார்த்தைகளை
பரிமாறிக்கொள்ளும்!

இப்படி உள்ளமும் கண்களும்
பரிமாறிக்கொள்ளும்
உணர்வுப்பூர்வமான
உன்னதமான அன்பை!காதலை!
எப்படி வெறும் வார்த்தைகளால்
வர்ணித்து கவிதை
எழுதமுடியும்?

Inak:-)

(குறிப்பு)
எனக்கு காதலி கிடையாது!

No comments: