Tuesday, May 19, 2009
ஆசைப்படுகிறேன்!
நான் பிறந்த நிலையை
பார்க்க ஆசைதான்!
தலைப்பிள்ளையைப் பெற்றெடுத்த
பெற்றோரின் ம்கிழ்ச்சியைப்ப்
பார்க்க ஆசைதான்!
தாலாட்டிய தாயின் நிலையைப்ப்
பார்க்க ஆசைதான்!
தூக்கி நெஞ்சிலனைத்த
தாத்தா பாட்டியின்
மகிழ்ச்சியைப் பார்க்க
ஆசைதான்!
நான் தவழ்ந்த நிலையைப்
பார்க்க ஆசைதான்!
நான் நடந்த விதத்தைப்
பார்க்க ஆசைதான்!
சிறுவயதில் நான் ஆடிய
ஆட்டத்தைப் பார்க்க
ஆசைதான்!
என் முதல் வகுப்பு
அனுபவத்தை நினைக்க
ஆசைதான்!
அன்று நான் வாங்கிய
மதிப்பெண்ணை திரும்பப்
பார்க்க ஆசைதான்
என் இளவயது மீண்டும்
வர ஆசைதான்!
என் உயிரற்ற உடலை
பார்க்க ஆசைதான்
ஆனால்!
தலைப்பிள்ளையைப் பெற்றெடுத்த
பெற்றோரின் துன்பத்தை என்
ஆன்மா கூட பார்க்ககூடாதென
ஆசைப்படுகிறேன்!
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
This is Good and great
Post a Comment