Wednesday, December 30, 2009

எல்லாமிருந்தும்!

எனது தாத்தா,
பாட்டன் ,பூட்டன்
அவர்கள் அனுபவித்ததை விட

இன்று நான்
அதிகமாகவே
அனுபவிக்கிறேன்!

ஆம்! அன்று
தொலைக்காட்சிப்பெட்டி,
கணிணி, செல்போன்
இல்லை

பல அடுக்குமாடி
குடியிருப்புகள்
இல்லை,

வகைவகையான
உணவு வகைகள்
இல்லை

பலவிதமான
உடைகள் இல்லை

வீ ட்டை சுற்றிலும்
தோட்டங்கள் இருந்தது
துய்மையான காற்று
கிடைத்தது,

நிறைய விளைச்சல்
நிலங்கள் இருந்தது
தண்ணிர் பிரச்சனை
இல்லை விவசாயம்
செழிப்புடன் நடந்தது,

இயற்கையான
உரங்கள் எளிமையாக
கிடைத்தது

மருத்துவமனைகள் குறைவு
எளிதில் அறுவைசிகிச்சை
செய்யும் அளவிற்கு
நோய்களும் இல்லை!

தார் சாலைகள் குறைவு,
போக்குவரத்தும் குறைவு
மண் சாலைகள் அதிகம்
ஆனால் தூசிகள் இல்லை

இன்று எல்லாம் இருக்கிறது
ஆனால் விவசாயம் செய்ய
நிலங்கள் இல்லை,

இருக்கின்ற விளைச்சல்
நிலங்களுக்கு தேவையான
பாசன நீர் இல்லை

இல்லாமல் போனது
இவைகள் மட்டுமல்ல
இயற்கையும் இன்று
சிறிது சிறிதாக
அழிந்துகொண்டிருக்கிறது

அவர்கள் குறைவான
வசதிகளோடு நோயில்லாமல்
அதிககாலம் வாழ்ந்தார்கள்

நானோ எல்லாமிருந்தும்
மருந்துகளுடன் வாழ்கையை
நடத்திக்கொண்டிருக்கிறேன்!

என்னால் எனது
பாட்டனை பார்க்கமுடிந்தது
ஆனால் நான் எனது
பேரனை பார்ப்பேனா?
பார்க்கமுடியுமா?


Inak:-)




Saturday, December 26, 2009

புதிய உறுதிமொழி!


மாநகர பேருந்து பயணம்
அதிகபட்சமாக 2 மணிநேரம்

இதில் கூட்டம் அதிகமாக
இறுப்பது ஒருமணிநேரம்

அதிலும் அதிக
கூட்டமிருப்பது
ஒரு அரைமணிநேரம்

இந்த அரைமணி நேரம்தான்
ஒரு மனிதனை மிருகமாக
மாற்றுகிறது

ஆம்!
சகபயணியின் கையோ,
காலோ தெரியாமல்
பட்டபோது அவன்
நடந்துகொள்ளும் விதம்
மிருகமே தோற்றுவிடும்!

எப்படியெல்லாம் பேசுகிறான்
எப்படியெல்லாம்
நடந்துகொள்கிறான்!

இவர்களையெல்லாம்
இந்திய பாகிஸ்தான்
எல்லையில் கொண்டுபோய்
விடவேண்டும்,

இவர்களை
நமது இந்திய
இராணுவம் மறந்துபோய்
சேர்க்காமல் விட்டிருக்கிறார்கள்!

நமது உடன்பிறந்த அண்ணனோ,
தம்பியோ,அக்காவோ,தங்கையோ
அல்லது நமது உறவினர்களின்
கையோ, காலோ பட்டால்
இப்படித்தான் நடந்துகொள்வோமா?

நமது தேசத்தின் உறுதிமொழி
இன்னும் காகிதத்தில்தான்
இருக்கிறது உண்மையான
சகோதரத்துவம் இன்னும்
இல்லை இந்த தேசத்தில்!

இனி எல்லா பேருந்துகளிலும்
இருக்கவேண்டிய உறுதிமொழி
இதுதான்

புதிய உறுதிமொழி!

இது எனது பேருந்து,இதில் பயணிப்போர் என் உடன் பிறந்த சோதரர்கள்,
தங்கைகள்,அக்காக்கள்,எனை பெற்றெடுத்த பெற்றோர் மற்றும் எனது மாமியார், மாமனார் மற்றும் எனது எல்லா உறவினர்களும் இந்த பேருந்தில்தான் பயணம்
செய்கிறார்கள் அவர்களுக்கு இடையுறு தராமல் நான் பயணம் செய்வேன் என நான் உறுதி கூறுகிறேன்,இவர்களின் கையோ, காலோ பட்டால் அது எனக்கு எந்தவித பாதிப்பையும் தராது.

Inak:-)

Monday, December 21, 2009

எதை அழிப்பது?

வேலை இல்லையென்று
யார்சொன்னது?

வேலை இருக்கிறது
செய்யயாரும் இல்லையா?

வேலை செய்ய
ஆயிரம்பேர் இருக்கிறார்கள்
ஆனால் ஊதியம்தான்
இல்லை!

ஆம்!
கல்விக்கேற்ற வேலை இல்லை
வேலைக்கேற்ற ஊதியம் இல்லை,
திறமைக்கும், அனுபவத்திற்கும்
மரியாதையும் இல்லை!

ஆம் எனது 33 வயதில்
நான் வாங்கிய ஊதியம்
மாதம் ரூபாய் 3500,

இதை ஒரு குறையாக நான்
ஒருபோதும் எண்ணியதில்லை!

இது எனக்கு மட்டும் அல்ல
நமது இந்திய தேசத்தில்
என்னைப்போல்
ஆயிரக்கணக்கானோரின்
நிலைமையும் இதுதான்

இந்த நிலைமை
தொடருமேயானால்
நமது நாடு எப்படி
ஒரு வல்லரசாக
மாறும்?

தனி ஒருவருக்கு
உணவில்லையெனில் ஜகத்தை
அழித்திடுவோம் என்று பாடினான்
பாரதி அன்று!

இன்று தனி ஒருவருக்கு வேலைக்கேற்ற
ஊதியம் இல்லையெனில் எதை அழிப்பது?


இதையும் கவனியுங்கள்!

நமது இந்திய தேசத்தில் இன்று விரல்விட்டு எண்ணமுடியாத அளவிற்கு கட்சிகள் பெருகிவிட்டன,இருகின்றன,அதுமட்டுமா?எத்தனை தொழிற்சங்கங்கள் இருக்கின்றன,கட்சிகளும் இவர்களும் அரசாங்க தொழிலாலர்களுக்காகத்தான் போராடுகிறார்களே தவிர தனியார் நிறுவனங்களில் நடப்பவற்றை எவரேனும் கவனிக்கிறார்களா?அப்படியே அதற்காக குரல் கொடுத்திருந்தாலும் அதன் மூலம் தங்களுக்கு ஏதாவது ஆதாயம் இருப்பதால்தான் செய்கிறார்களே தவிர உண்மையான நோக்கத்துடன் யாரும் குரல் கொடுப்பதில்லை இதுதானே உண்மை,

எப்பொழுது இவர்களால் தனியொரு மனிதனுக்கு நியாயமாய்
கிடைக்கவேண்டியவை கிடைக்கவில்லையோ அப்பொழுதே இவர்கள் இருப்பது அவசியமில்லை.

Inak:-)













இன்னொருவள்!

எனக்கு வேலை இல்லாதபோது
என்னைவிட
அதிகமாக
வருத்தப்பட்டது
என்னவள்!

அதே
நேரத்தில் எனக்கு
வேலை கிடைக்கவேண்டுமென
என்னக்காக
வேலை தேடியதும்
என்னவள்தான்!

என்னவளைபோல்
இன்னொருவள் கண்டிப்பாக
கிடைக்கமாட்டாள் எனக்கு!

என்னவள்
எனக்கு
கிடைத்ததற்கு
நான் கடவுளுக்கு
நன்றி சொல்ல வேண்டும் !

குறிப்பு: என்னவள் My Baby My Heart அவர்கள்!
Inak:-)

Monday, December 14, 2009

ஏற்றுக்கொள்கிறேன்!

என்னவளிடம் நான்
பொய் சொல்லி விட்டேனென்று
என்னிடம் பேசமாட்டேனென்று
சொல்லிவிட்டாள்!

நான் சொன்னது பொய்தான்
அதை உண்மையுடன்
ஏற்றுக்கொள்கிறேன்!

காரணம் என்னவளின் நட்பு
என் உயிர், என் உடலை விட்டு
பிரியும் வரை இருக்க வேண்டும்
என்பதற்காகத்தான்
சொன்னேனேதவிர,

ஒருபோதும் என்னவளை
ஏமாற்றவேண்டும் அவள்
மனதை காயபடுத்தவேண்டும்
என்பதற்காக அல்ல.

தயவு செய்து இதை
என்னவளிடம் எடுத்துச்
சொல்லுங்கள்!

குறிப்பு: என்னவள் என்பது My Baby My Heart அவர்கள்!

Inak:-)

Friday, December 11, 2009

சலவை!

என்னவள் அவளிடம்
ஒரு மாதம் பேசக்கூடாதென்று
அன்பால் கட்டளை போட்டாள்!

எனது மூலையை
சலவை செய்தால் தான்
அது நடக்கும்,அதற்கு நான்
முழுமையாக மூச்சின்றி
உறங்கினால் தான்
முடியும்
! (இறந்தால்தான்)

எனவே நான் எனது
முடியை முழு சலவை
(மொட்டை)செய்துகொண்டேன்!

குறிப்பு: இங்கு என்னவள் My Baby My Heart அவர்கள்

Inak:-)

Thursday, November 19, 2009

தெரியவில்லை!

நான் மனிதனாக
வாழ விருப்பப்பட்டேன்!

வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
ஆனால் நான் யாரென்று
எனக்கே தெரியவில்லை!

காரணம் எப்படிப்பட்ட
மனிதனாக வாழவேண்டுமென
தெரியாமல் என்னை
செதுக்கியிருக்கிறேன்!

Inak:-)

சொல்ல விரும்பிய விஷயங்கள்!

சொல்ல விரும்பிய விஷயங்கள்!
இதை எழுத நினைத்தது சில மாதங்களுக்கு முன்பு ஆனால் இப்போதுதான்ஆரம்பித்திருக்கிறேன்.

மனிதராக பிறந்த எல்லோருக்கும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த,சந்தித்த அனுபவித்த,கஷ்டப்பட்ட விசயங்களை யாருடனேனும்சொல்லவேண்டுமென்கிற எண்ணம் ஆசையாகவோ, விருப்பமாகவோஇருக்கும்,இருந்திருக்கிறது, (இதில் எந்தவித மாற்றமும் இல்லையே)

சிறு குழந்தை அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ தான் பார்த்த அல்லதுமகிழ்ந்த விசயங்களை சொல்லுவார்கள், பள்ளிப்பருவத்தில் பள்ளியில்நடந்தவற்றை சொல்லுவார்கள்,தனது வீட்டில் நடந்தவற்றை தனது பள்ளிநண்பர்களிடம் சொல்லுவார்கள்,பண்டிகையின் போது பெற்றோர் எடுத்துகொடுத்த புது துணி புது சட்டை இவற்றைப்பற்றி
பேசுவார்கள்,பகிர்ந்துகொள்வார்கள்,

அதே கல்லுரிப்பருவத்தில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தான் பார்த்தபெண்ணையோ ஆணையோப் பற்றி யாரிடமேனும் சொல்லவேண்டுமென்ற எண்ணமிருந்திருக்கும்,சொல்லியுமிருந்திருப்பார்கள்,

புதிதாக திருமணமான பெண் அவளது கணவரைப்பற்றி தனது அம்மாவிடம்சொல்லவேண்டுமென்ற ஆசை இருந்திருக்கும்,
கணவனுக்கும் தனது மனைவியிடம் தன்னைப்பற்றி சொல்லவேண்டுமென்றஆசை இருந்திருக்கும்,இது போல மனைவியும் எண்ணியிருப்பாள்,

ஒருசிலர் தனது அனுபவங்களை கவிதைகளாக,கட்டுரைகளாக,சிறுகதைகளாகசொல்லியிருக்கிறார்கள் அதன் மூலமாக நல்ல கதைகள், கவிதைகள்,கட்டுரைகள், நல்ல திரைப்படங்கள், நல்ல பாடல்கள், உருவாகிருக்கின்றன,

ஒருசிலர் தன்னைப்பற்றி சொல்ல விருப்பபட்டதால்தான் சுயசரிதைகள்வந்திருக்கின்றன,

இங்கு நான் சொல்ல விரும்பிய விஷயம்? யாரிடம் சொல்லவேண்டும்?எதற்காகசொல்லவேண்டும்? என்கிற ஒரு கேள்வி என்னுள் எழுகிறது!இருந்தபோதிலும்
சொல்லவேண்டுமென்கிற எண்ணம், விருப்பம் மட்டும் என்னைவிட்டபாடில்லை,இருந்தபோதிலும் மனது சொல்கிறது சொல்லிவிடுவென்று
எனவே சொல்கிறேன் நான் சொல்ல விரும்பிய விஷயத்தை

நான் சொல்லவிரும்பியது என்னைப்பற்றி, நான் வாழ்ந்து வந்த வாழ்க்கைமுறையைப் பற்றி, எனது பழக்க வழக்கங்களைப்பற்றி..

சொல்லவிரும்பிய அந்த நபர் ஒருவேளை எனக்கு திருமணமென ஒன்று நடந்தால், எனது வாழ்க்கை துணைவியாக வரும் ஒரு பெண்ணிடம்தான்..

ஏன் அந்தப்பெண்ணிடம் எல்லாவற்றையும் சொல்லவேண்டும்? திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் வெறும் சுகத்திற்காக மட்டும் அல்ல அவள்தான் வாழ்க்கைத்துணைவி, வாழ்க்கைத்துணைவி என்றால் என்ன?

தொடரும்.....

Inak:-)

Wednesday, November 18, 2009

காலம் இரண்டு!

உலக வரலாற்றில்
காலம் இரண்டு
பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது

அவை கிமு,கிபி என்று
அதுபோல எனது
வாழ்கையிலும்
இரண்டு காலங்கள் உண்டு

அவை நான்
என்னவளை
பார்ப்பதற்கு முன்பு!(BB)
என்னவளைப்
பார்த்த பின்பு!(AB)

குறிப்பு: என்னவள் My Baby My Heart அவர்கள்

Inak:-)

Tuesday, November 10, 2009

வருத்தம்!

எனது திருமணத்தைப்பற்றியும்,
எனைப் பார்த்த பெண்வீட்டார்
எனை வேண்டாமென
சொன்னதற்காகவும்,
ஒரு போதும் நான்
வருத்தப்பட்டது கிடையாது!

காரணம் அவர்களைவிட
அளவுக்கதிகமாக என்னவளின்
அன்பிருப்பதால்!

இருந்தபோதிலும்

நான் என்னவளைப்பற்றியும்,
என்னவள் என்மீது காட்டும்
அன்பைப்பற்றியும்
எங்களின் நடப்பைப்பற்றியும்,

எப்பொழுதும் இடைவிடாமல்
(Non Stop FM) சொல்ல
ஒருத்தி கிடைக்காமல்
போய்விடுவலோவென
அஞ்சுகிறேன்!


குறிப்பு : இங்கு என்னவள் MyBaby MyHeart அவர்கள்

Inak:-)

Monday, November 9, 2009

வேண்டுகிறேன்!


மழையே நீ இயற்கையின்
வரப்பிரசாதம்!

மண்ணுக்கு வளத்தை
கொடுத்து,மரம் செடி கொடிகளுக்கு
செழிப்பையும் கொடுத்து,
அனைத்து உயிர்களின்
தாகத்தையும் போக்குகிறாய்!

உன்னை நான்
பெய்யவேண்டாமென
சொல்லவில்லை!

என்னவளின் குயிலினினும்
மேலான இனிய குரலை
கேட்கமுடியவில்லை
உன்னால்!

எனவே மாலைபொழுதில் மட்டும்
பெய்யவேண்டாமென
கேட்டுக்கொள்கிறேன்!

உன்னால் உலகிற்கு
நன்மையுண்டு அதே நேரத்தில்
எங்கள் இருவருக்கும் ஒரு
சிறு இடைவெளி
அந்த இடைவெளி
உன்னால் வரவேண்டாமென
வேண்டுகிறேன்!

மழையே எனது வேண்டுதல்
உனக்கு கேட்காமல்
போகலாம் ஆனால் என்னால்
என்னவளின் குயிலினினும்
மேலான இனிய
குரலை கேட்காமல்
இருக்கமுடியாது!

குறிப்பு: இங்கு என்னவள் My Baby My Heart அவர்கள்

ஒரு வியப்பான விஷயம்!
இன்று (09-11-2009)மழை பெய்யவில்லை


Inak:-)

Thursday, August 27, 2009

இயற்கை!


விரும்பியதும் தேடியதும்
விரும்பியபோதும்
தேடியபோதும்
கிடைக்காதபோது

அதை நாம் வெறுத்து
மறந்தபோது நம்மை
தேடிவரும் இது இயற்கை!

அதை ஏற்றுக்கொள்கிறோமா?
இல்லையா? என்பதுதான்
வாழ்க்கை!

Inak:-)