Tuesday, March 31, 2009

மறந்துவிட்டேன்!


எல்லோருடைய
வாழ்க்கையிலும் நடந்த மறக்கமுடியாத நிகழ்வுகள்,விழாக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள நினைப்பார்கள், நானும் எனது வாழ்வில் நடந்த ஒரு விழாவை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்,


இந்நாள் என்வாழ்வில்
மறக்கமுடியாத நாள்!

இன்று நான் எதிர்பார்க்கவில்லை
இத்தனை பேர் வருவார்களென்று!
ஆடல் பாடல் இல்லாமல்
அமைதியாக நடைபெற்றது

உற்றார்களை விட உறவினர்களே
அதிகமாக வந்திருந்தனர்!
எனக்கு அறிமுகமில்லாதவர்களும்
வந்திருந்தனர்!


வந்தவர்களை பார்க்க ஆசைதான்
ஆனால் முடியவில்லை!

எனது தாய் எனை விட்டுச்செல்லாமல்
எனத்ருகிலேயே இருக்கிறார்கள்!
இருந்தாலும் முடிந்தவரை
நான் பார்க்கிறேன்!

வந்தவர்கள் அனைவரும்
வெறும்கையுடன் யாரும்
வரவில்லை கையில்
மாலையுடன் வந்தார்கள்!

இதற்குமுன் நான் மாலை
அணிந்ததில்லை ஆனால் இன்று
நிறைய மாலை எனக்கு கிடைத்தது

ஆம்! இன்று எனது உடல் இறந்துவிட்டது
இறந்த எனது உடலை பார்க்கத்தான்
அத்தனைபேரும் வந்திருக்கிறார்கள்

சரி வந்தவர்கள் எனைப்பற்றி
என்ன பேசிக்கொள்கிறார்கள்?

அவற்றில் சிலவற்றை
மட்டும் சொல்கிறேன்,

எனது தாய்
நான் பெத்த மகனே எனைவிட்டு
போக உனக்கு எப்படிடா மனசு வந்தது
உன்ன பத்துமாசம் கஷ்டப்பட்டு சுமந்தேனே
இத்க்குதானா?எனக்கு
கொல்லிபோடாமா என்ன உனக்கு
கொல்லி போட வைச்சிடியேடா

உனக்கு கல்யாணம் பண்ணிவைக்க
ஆசைபட்டேன் ஆனால்
காரியம் செய்ய வைச்சிடியேடா

நீ இல்லாம நம்ம பிங்கி சாப்பிடாது
அத விட்டு போக எப்படிடா
உனக்கு மனசு வந்தது
உன்கூடதான துங்கும் இப்ப
உன் தலைமாட்டுல வந்து
படுத்திருக்கு பாருடா!

தந்தையும் தம்பியும்
அமைதியாக இருக்கிறார்கள்

நண்பர்கள் பேசிக்கொண்டது

எப்படிடா?
இரயில அடிப்பட்டு இறந்துட்டான்,
தண்ணியடிசிட்டுபோயியா
தெரியலடா,காலையில
அவன் தண்ணி அடிக்க்கமாட்டன்,

என்கூ அவன் பேசியே
ஒருவருடமிருக்கும்,
உன்கூமட்டுமில்ல
எங்கள்கிட்டையும்தான்
என்னடா சொல்றிங்க
ஆமாண்டா அவன் யாருகூடையும்
முதல்லமாதிரி பேசுறது கிடையாது

மற்றவர்கள்

இப்பதான் பொண்ணு பாத்துக்கிட்டிருந்தார்கள்
அதுக்குள்ள இதுமாதிரி நடந்துபோச்சு

சரி அடுத்து வந்தவர்களை பார்ப்போம்

எனது புதிய நண்பர் வந்திருக்கிறார்,அதற்கு காரணம் எனது செல்போனில் நான் கடைசியாக பேசியதால் ,ஆம்! எனது உடலை கண்டெடுத்து பரிசோதித்தபோது எனது செல்போனிலிருந்து கடைசியாக அழைக்கப்பட்ட எண்களை தொடர்புகொண்டு விசாரித்ததால் அவர்கள் வந்திருக்கிறார்கள் ஒருவர் எனது Baby My Heart, இன்னொருவர் இம்சை இவர் சென்னை FM யில் RJ வாக பணியாற்றுகிறார்,


எனது Baby My Heart,
எனது உடலுக்கு மாலை போடுகிறார்,

அம்மா நீ அடிக்கடி கேட்ப்பியே உன் Baby பாக்கணும் எப்படா அவங்க வீட்டுக்கு கூட்டிட்டுப்போவன்னு இதோ பாரும்மா இவங்கதான் என் Baby பாரும்மா என பாக்க வந்திருக்காங்க, அம்மா பாரும்மா என் Baby ஐயோ நான் சொல்லுறது உங்களுக்கு கேட்கலையே, நான் என்ன செய்வது கடவுளே நீ யாவது சொல்லுப்பா,

இம்சை உங்களுக்கும் நான் இதுவரைக்கும் என் Baby அறிமுகப்படுத்தியது கிடையாது என் உடலுக்கு மாலை போட்டாங்களே அவங்கதான் பாருப்பா என்னப்பா நான் பேசுறது உங்க யாருக்கும் கேட்கலையா?
Hello Baby உங்களுக்கும் நான் பேசுறது கேட்கலையா?

Hello இம்சை
என்னப்பா எல்லாரும் சோகமா இருக்காங்க பேசுப்பா Hey நீ அடிக்கடி சொல்லுவியே கலாய்க்கலாம் , கலக்கலாம், கவலைய மறக்க்கலாம்னு இப்ப பேசுப்பா அட போப்பா பேசவேண்டிய நேரத்துல பேசமாட்டுற,


என்ன செய்கிறார்கள் அங்கு இரங்கல் செய்தி போஸ்டர்ரை ஓட்டுகிறார்கள்,
அட என்ன கொடுமையடா இது நான் இருக்கும்போதுதான் சாதி ஒருசிலருக்கு தேவைப்பட்டது, நான் இறந்தபிறகுமா கடவுளே என்ன கொடுமையிது,போஸ்டர் ஓட்டியத்ர்க்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன், ஆனால் அதிலும் சாதி பெயரை யார் போடசொன்னர்கள்?

நண்பர்களே ஒருவன் பிறக்கும்போது என்ன மதம், என்ன சாதி, என்ன இனம் என தெரிந்து பிறப்பதில்லை,பிறந்தபிறகுதான் அனைத்தையும் சொல்கிறிர்கள்,அவன் இறக்கும்போதுமா? நீங்கள் திருந்தமாட்டிர்களா?

உடலை கொண்டுபோகப்போகிறார்கள்

நான் பெத்த மகனே உன்ன மடியில்
வைச்சு கொஞ்சினது உன்ன மண்ணுக்கு
அனுப்பவா?என் பிள்ளைய
கொண்டுப்ப்போகாதிர்கள்!

ஒருவழியாக உடலை அடக்கம்
செய்யப்போகிறார்கள் என்ன
ஒரு அருமையான காட்சியிது!


யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்
எல்லாம் முடிந்துவிட்டது,
ஆம் உடல் ஆறடி குழிக்குள்
புதைக்கப்பட்டது,

இவைகளனைத்தையும்
பாத்துக்கொண்டிருக்கிறேன் நான்

சரி விபத்தில் இறந்துவிட்டேன்
எல்லாம் முடிந்துவிட்டது,
பெற்றவர்கள் கொஞ்சநாட்களுக்கு
வருத்தப்படுவார்கள் பிறகு எல்லாம்
சரியாகிவிடும்

ஆனால் நான் செய்ய மறந்தவைகள் சில உள்ளன
ஆம் உடலை வெறும் மண்ணுக்கு கொடுத்துவிட்டேனே
உடலுறுப்புக்களை தானம் செய்ய மறந்துவிட்டேனே,
இருக்கும்போது பிறர்க்கு உதவி செய்தேனோ இல்லையோ? இறந்தபிறகும் ஒன்றும் செய்யாமல் போனேனே!

நான் இருந்தும் வாழவில்லை இறந்தும் வாழவில்லை ,
தவறு செய்துவிட்டேன் என் உடலால் எத்தனை பேர் வாழ்ந்திருப்பார்கள் யாருக்குமே எதுவுமே கொடுக்காமல் போனேனே!


இங்கு நான் சொல்ல விரும்புவது என்னைப்போல யாரும் மறந்து விடாதிர்கள்,

மனித பிறவி ஒருமுறைதான் வரும் அதில் நாம் இருக்கும்போது வாழ்கிறோமோ இல்லையோ? நாம் இறந்தபிறகாவது நமது உடல் உருப்புக்கலாவது வாழட்டும்!

அதனால் பலருக்கு நன்மைகிடைக்கும்,முடிந்தவரை எல்லோரும் உடலுறுப்பு தானம் செய்யுங்கள்.

மக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள்.

அப்போதுதான் எனது ஆன்மா சாந்தி அடையும் அதுவரை உங்களை சுத்திவரும்.

வாழ்க மனித நேயம்!
வளர்க் உடலுறுப்பு தானம்!

Inak:-)


















































Monday, March 30, 2009

கடைசி ஆசை!

பெண்ணே!
நீ பேசுவாய்யென
காத்திருந்தேன்!

காலங்கள்தான் கடந்தது
உன்னிடமிருந்து இதுவரை
எந்த அழைப்பும் வரவில்லை!

நான் அழைத்தலோ நீயும்
பேசமறுக்கிறாய்!

நான் வைத்திருந்த உன்
புகைப்படங்களையும்
அழித்துவிட்டாய்!

உன்னைபிடித்த எனை
உனக்கு பிடிக்காதபோது நான்
இருக்கவிரும்பவில்லை!

ஆனால் எனதுள்ளத்தில் உள்ள
உன் நினைவுகளை
உன்னால் அழிக்கமுடியாது

அதுவும் உனக்கு
பிடிக்காத்தென்பதால்
இந்த முடிவு

இதனால் நீ மனநிம்மதி அடைவாய்

நானிறந்தபிறகு
என்னுடலை பார்க்க வருவாயா?
என்னுடலுக்கு மாலை போடுவாயா?

அந்த செலவையும் நானுனக்கு
வைக்கவிரும்பவில்லை

காரணம் உனது செல்போனுக்கு
நான் ஏற்கனவே Top Up செய்துள்ளேன்!

ஒருசொட்டு கண்ணிராவது
சிந்துவாயா?கண்ணிரில்
கஞ்சத்தனம் காட்டாதே!

அழுதால் உடலுக்கு நல்லது!
இதை நான் சொல்லவில்லை
மருத்துவம் சொல்கிறது


எனது கடைசி ஆசை
நீ உனது செல்போனிலிருந்து
எனது செல்போனுக்கு
ஒருபோதும் அழைக்காதே!

காரணம் உனக்காக
நான் வைத்திருக்கும்
அழைப்பு சத்தம் எனை மீண்டும்
உயிர்த்தெழசெய்து விடும்!

அதுவே உனக்கு மீண்டும்
தொல்லையாகிவிடும்!

இனி எனது தொல்லையில்லாமல்
நிம்மதியாக இருக்கலாம்!

உனது நிம்மதிதான்
எனது மகிழ்ச்சி!
Inak:-)




























குற்றவாளி!

தெரியாமல் செய்வது குற்றம்!
தெரிந்து செய்தால் அது தவறு!

இப்புவியில் மனிதனாக பிறப்பது
தவறென்று தெரிந்தும் பிறந்தது
குற்றம்தானே ஆனால் இதை
நான் செய்யவில்லை!

வள்ர்சிஎன்பது தானாக
இருக்கவேண்டும் அதை நானாக
வளர்த்துக்கொண்டது குற்றம்தானே!

அடித்தால் திரும்ப அடிக்கவேண்டுமென
தெரிந்தும் அடி வாங்கியது குற்றம்தானே!

பொய் சொல்லவேண்டிய இடத்தில்
உண்மை பேசியது குற்றம்தானே!

இப்புவியில் மனிதனை மனிதனாக
மதிக்கக்கூடாதென தெரிந்தும்
மதித்து நடந்தது குற்றம்தானே!

இவ்வளவு குற்றங்களை
புரிந்த நான் பயங்கர
குற்றவாளி தானே !

Inak:-)

Sunday, March 29, 2009

வேண்டும்!

மாசற்ற நிலம் வேண்டும்!
கதிரவன் சுடச்சுட அடித்தாலும்
வற்றாத நீர்நிலைகள் வேண்டும்!

குளிர்ந்த காற்று வீசாவிட்டாலும்
மழையை தரக்கூடிய கருமேகங்கள்
வேண்டும்!

மழை தன்னை பார்க்காவிட்டாலும்
பசுமை மாறாத மரங்கள் வேண்டும்
மனிதன் கைபடாத பொருள் வேண்டும்
பணத்தை பார்க்காத கண்கள் வேண்டும்!

அன்பு ஒன்றே போதுமென சொல்லும்
உள்ளங்கள் வேண்டும்
சுயநலமற்ற மக்கள் வேண்டும்!

இவைகள் கிடைக்கவிட்டாலும்
உண்மையான பண்பை மறவாத
மனிதன் வேண்டும்!

Inahk:-)

பண்பு!

ஒவ்வொரு ஊரிலும்
மகப்பேறு மருத்துவமனை
இருக்கிறதோ இல்லையோ!
மயானபூமி இருக்கிறது

ஒவ்வொரு ஊரிலும்
மனிதன் வ்சிக்கிறனோ
இல்லையோ! மதங்களின்
வெளிப்பாடுகள் (கோவில்கள்)
இருக்கிறது!


இவைகளிருந்து என்ன பயன்
மனிதனிடம் உண்மையான
பண்பில்லையே!


#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#
(குறிப்பு)
மனிதனின் உண்மையான பண்பு
பிறர்க்கு நன்மை செய்வதே!
#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#

Inahk:-)

போர்களம்!

அரசர்கள் காலத்தில்
போரிடுவதர்க்கென்று
ஓரிடம் அதன்பெயர்தான்
போர்களம்!

அரசனும் படைத்தளபதியும்
படைவீ ரர்களும் போரிட்டு
உயர்த்தியாகம் செய்து
நாட்டிற்கு பெருமை
சேர்த்தனர் அன்று!

இன்றைய மனிதன்
மதத்தையே போர்களமாக
பயன்படுத்தி மனித உயிர்களை
கொன்று குவித்து மனித குலத்தையே
நாசப்படுதுகிறான்!

இதுதான் இன்றைய
மனிதன் நாட்டிற்கு
சேர்க்கும் பெருமையோ?

__ ** __ ** __ ** __ ** __ ** __ ** __ ** __ **
மதம் மனிதனுக்காக அன்றி
மனிதன் மதத்திற்காக அல்ல
(கம்பர்)

மதங்களின் பெயரால் சண்டையிட்டுக்கொளவது
மதங்களையே அவமதிப்பதாகும்
( இரவீ ந்திநாத் தாகூர் )
__ ** __ ** __ ** __ ** __ ** __ ** __ ** __ **
Inak:-)