Thursday, June 18, 2009

எனை சிந்திக்க வைத்தவர்கள்!

வணக்கம்!

நம்முடைய வாழ்கையில் நாம் தினந்தோறும் பலரை சந்திக்கிறோம் அப்படி சந்தித்தவர்கள் பின்னாலில் சிறந்த தோழனாக,தோழியாக,சகோதரனாக, சகோதரியாக,காதலனாக,காதலியாக மாறியிருக்கலாம்,மாறலாம் அப்படி எனது வாழ்க்கையில் நான் சந்தித்தவர்களைப்பற்றித்தான் இங்கு சொல்கிறேன்,யார் அவர்கள்? சொல்கிறேன் பொறுமையாக படித்துப்பாருங்கள்

இது உங்களுக்கு சுகமாகவோ,சோகமாகவோ இருக்கிறதாவென்று எனக்கு தெரியவில்லை ஆனால் எனக்கு சுகமாகவும் சோகமாகவும் இருந்தது,

சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்...... ...










Thursday, June 11, 2009

அழைப்பிதழ் (சிறுகதை)

வெகு நேரமாக தேடிக்கொண்டிருந்தான் சுகுமார் அவனுக்கு திருப்தியாக கிடைக்கவில்லை இறுதியில் ஒரு அட்டையை தேர்ந்தெடுத்தான் ஆம் அவன் தேடிக்கொண்டிருந்தது திருமண அழைப்பிதழ் கடையில்,இருந்தஉதவியாளரிடம்
இந்த அட்டை எனக்கு வேண்டுமென்றான் கடைக்காரர் எத்தனை அழைப்பிதழ் வேண்டுமென்று கேட்டார் இவன் வெறும் 6 அழைப்பிதழ் தான் வேண்டுமென்றான் சரி அங்க போய் பணத்த கொடுத்துட்டு வாங்க என்றார் அந்த உதவியாளர்
சுகுமார் கேட்டான் நீங்களே அச்சடித்து கொடுப்பிர்களா என்று கேட்டான் அதற்கு உதவியாளர் கொடுப்போம் என்று சொன்னார் அதன் விபரங்களை அங்கு போய் கேளுங்கள் என்று சொன்னார் சுகுமாரும் அங்கு சென்றான் இந்த விபரங்களை இந்த அட்டையில் அடித்து தரவேண்டுமென்று சொன்னான்

அவர் அதை ஒருமுறை படித்து பர்ர்த்தார் அதில் இருந்தவை

இறப்பு அழைப்பிதழ்

அன்புடையீர், நிகழும் மங்களகரமான விரோதி வருடம் வைகாசி மாதம் 21 ஆம் தேதி ( 04-06-2009) வியாழக்கிழமை சுக்ல பட்சம் சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.30 மணிக்குமேல் 11.30 மணிக்குள் திருவள்ளூர் மாவட்டம் திருநல்லூர் திரு.குமாரசாமி அவர்களின் மகன் திருநிறைச்செல்வன்சுகுமாரன்ஆகிய நான் இறக்க உள்ளதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ் வருகை தந்து எனது ஆன்மா சாந்தியடைய செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்

அவருக்கு ஒன்றும் புரியவில்லை இதையா அச்சடிக்க வேண்டுமென்றுகேட்டார்
சுகுமார் ஆமாம் என்று சொன்னான்
அவருக்கு ஒன்றும் புரியவில்லை அவரும் சரி என்று சொல்லிவிட்டு அச்சடிக்க ஆரம்பித்தார்.

குறிப்பு:
தற்கொலை செய்வதும் தற்கொலை செய்ய துண்டுவதும் நமது இந்திய சட்டப்படி குற்றமாகும்.

Inak:-)















மல்லிப்பூ வாசம் (சிறு கதை)



இன்று ஒரு நேர்முகத்தேர்வுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன்
பொதுவாக நான் எங்கு சென்றாலும் Bike தான் போவேன் ஆனால் இன்று பேருந்தில் சென்றேன்,அதனால் திரும்ப வரும்போதும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்றேன் திடிரென்று ஒரு வாசம் என்னை ஈர்த்தது
நானும் என்னை அறியாமல் வாசம் வந்த இடத்தை நோக்கி நடந்தேன் கடைசியில் அது ஒரு பூக்கடை ஆம் ஒரு பெண்மணி பூக்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தார் அது எல்லாமே மல்லிகைப்பூ எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை ஆம் மனைவி இருந்தால் அவளது கூந்தலை மல்லிகைப்பூவால் நிரப்பி இருப்பேன்,காதலி இருந்தால் அவளது கூந்தலை
வாசத்தால் நிரப்பி இருப்பேன்,ஒரு தங்கை இருந்திருந்தால் பூ வாங்கி கொடுத்து அன்பான வார்த்தைகளை கேட்டிருப்பேன் என்ன செய்வது
என்னால் மல்லிப்பூ வாசத்தை நுகரத்தான் முடிந்தது நுகர்வோராக இருந்து வாங்கமுடியவில்லை.

Inak:-)

Tuesday, June 9, 2009

வினாடி!


நான் எனது
அன்றாட வேலைகளை
செய்ய மறந்தாலும்
மறந்திருப்பேன்!

ஆனால்!
என்னவளைப் பற்றி
ஒரு வினாடிகூட
நினைக்கமாலிருந்ததில்லை!

காரணம் அவள்
எனது இதயமாயிற்றே!

Inak:-)

குறிப்பு:
என்னவள் என்பது My Baby My heart

Monday, June 8, 2009

புரியாத புதிர்!

எனது பெற்றோர்க்கு
நானொரு புரியாத புதிர்
காரணம்!

என்னவள் என்னிடம்
பேசினால் குளிர்ந்த
காற்றாயிருப்பேன்i!

என்னவள் என்னிடம்
பேசாதபோது
அனல் காற்றாயிருப்பேன்!

என்னவளை நான்
சந்தித்தப்பிறகு
திடீரென பெய்யும்
மழையாய்யிருப்பேன்!

இது புரியாத புதிராகவே
தெரிகிறது எனது
பெற்றோர்க்கு!

Inak:-)

குறிப்பு:
என்னவள் என்பது My Baby My Heart!











சின்னத்திரை!

சின்னத்திரை!
எனது சிறு வயதில்
ஒரு வெள்ளித்திரை!

இன்றைய சிறுவர்களுக்கு
ஒரு சுட்டி வண்ணத்திரை!

இன்றைய
இளயசமுதாயத்திற்கு
அவர்களின் திறமையை
வெளிக்கொன்டுவரும்
ஒரு புல்வெளித்திரை!

நடுத்தர வயதினருக்கு
அவர்களின் கவலையை
மறக்கச்செய்யும் செய்யும் ஒரு
நகைச்சுவைத்திரை!

இன்றைய
முதியவர்களுக்கு
இருந்த இடத்திலேயே
ஆரோகியம் தரும் ஒரு
கண்ணீர்த்திரை!

Inak:-)








Sunday, June 7, 2009

ஒற்றுமை!

எனக்கு
சுதந்திர இந்தியாவைவிட
அடிமைப்பட்டிருந்த
இந்தியாவே பிடிக்கும்

காரணம்!
அன்று நல்ல நேர்மையான
தலைவர்கள் இருந்தார்கள்,

அவர்களின் இலக்கு
விடுதலை பெறவேண்டும்
என்பதே!

ஆனால்!
இன்று உள்ள தலைவர்களோ
ஒற்றுமையுடன் இருக்கிறார்கள்!

அது கூட்டணி வைப்பதில்தானே
தவிர மக்களின் நலனுக்காக அல்ல!

Inak:-)



அறிவாயோ!


பெண்ணே
!
உனக்கு நினைவிருக்கிறதா?
இந்த தேதியை?(31-05)

சென்ற வருடம் இதே
தேதியில்தான் (31-05)
நானுன்னை பார்க்க வந்தேன்!

நான் மட்டும்வரவில்லை
எனது அன்னையையும் கூட
அழைத்துவந்தேன்!

வெறும்கையுடன் வரவில்லை
உனக்கு பிடித்தமாங்கனியை
கொண்டு வந்தேன்!

ஆனால் அன்று நீ இல்லை
உன்வீட்டில் ஆனால் !
அன்று எங்களை
அருமையாக வரவேற்றார்
உன் சகோதரர்!

நீ அறிவாயோ? என்னவோ எனக்கு
தெரியவில்லை அன்று உனது வீட்டு
காலிங் பெல்லை நான் அடித்தபோது
எனது இதய துடிப்பை!

நீ தான் கதவை திறப்பாய் என்று
எண்ணியிருந்தேன் அன்று!
ஆனால் திறந்தது உனது சகோதரர்!

அதை நான் எதிர்பார்க்கவில்லை
அதே நேரத்தில் அவரது உபசரிப்பு
மிகவும் அருமையாக இருந்தது

உனக்கு தெரியுமே என்னவோ
எனக்கு தெரியவில்லை?
அன்று திடிரென்று நல்ல மழை பெய்தது
காரணம் எனது கண்ணிரை எனது
அன்னை பார்க்க கூடாதென்பத்ர்காக
அன்று மழை பெய்தது!

இயற்கை புரிந்து கொண்ட என்னை,
நான் உன் மிது வைத்திருக்கும் அன்பை!
நீ இன்னமும் அறியவில்லையே !
என்பதனை நினைக்கும் போது
எனது இதயம் வழிக்கிறது
இன்னமும்!

Inak:-)

Saturday, June 6, 2009

எறிந்துவிட்டேன்!

ஒரு செல்போனின்
சிம் கார்டில் மொத்தம்
250 எண்களை சேமித்து
வைக்கலாம்

அது வெறும் எண்கள்
மட்டுமல்ல அதில்
நண்பர்கள்,உறவினர்கள்,
அலுவலகத்தினர்

இப்படி அனைவரின்
தொலைபேசி எண்கள்
இருக்கும்!

அதுபோலத்தான்
எனது செல்போனிலும்
இருந்தது!

ஆனால்! நான்
என்னவள் என்னை
அழைக்கவில்லை
என்பதற்காக எனது
செல்போனை நான்
துக்கி எறிந்துவிட்டேன்!

எனக்கு என்னவளின்
அழைப்புதான் தேவை
அவளுக்காக வைத்த
அழைப்பு சத்தம்தான்
ஒலிக்கவேண்டும்!

எனது இதயமே என்னவளின்
பெயரைத்தான்
உச்சரித்துக்கொண்டிருக்கிறது
ஆம்! My Baby My Heart

Inak:-)

படைப்பு!

மனித வாழ்க்கை
நிரந்தரமற்றது!

ஆனால்
அவன்பயன்படுத்தும்
செல் போனின் சிம் கார்டு
வாழ்நாள் முழுவதும்
இன்கம்மிங்!

இதுதான் மனித
படைப்போ?

Inak:-)




அழியாதது!


காதல்
புனிதமானதுதான்
பருவ மகனும், பருவ மகளும்
காதலிக்காதவரை!

நட்பும் அழியாததுதான்
நண்பர்களிடம் பணம்
பரிமாராதவரை!

மனித உடலும் அழியாததுதான்
இறந்தபிறகு உடலை
எரிக்காதவரை!

Inak:-)



















Friday, June 5, 2009

பிடிக்காதவை!

எனக்கு பிடிக்காதவை!
நீ,நான்,தாய்,தந்தை,
அண்ணன்,அக்கா,
தங்கை,நண்பன்,

எனக்கு பிடித்தவை!
நாம்,நாங்கள்,நீங்கள்,
தாய்மார்கள்,தந்தைமார்கள்,
அண்ணன்மார்கள்,
அக்காமார்கள்,தங்கைமார்கள்,
நண்பர்கள்.

Inak:-)

படிப்பு!

பாடத்தை
புரிந்து படிப்பவன்
முதல் மார்க் வாங்குகிறான்!

தெரிந்து படிப்பவன்
தேர்ச்சி பெறுகிறான்!

தெரியாமல் படிப்பவன்
தோல்வி அடைகிறான்!

Inak:-)


Wednesday, June 3, 2009

வணங்குகிறேன்! (30-09-2001)

வெள்ளையனின்
கைப்பிடிக்குள்ளிருந்து
தேசத்தை விடுவித்த
மகாத்மாவே!

இந்த விடுதலைக்காக
எத்தனை இயக்கங்கள்!
எத்தனை போராட்டங்கள்!
எத்தனை பயணங்கள்!
எத்தனை சிறைவாசம்!

அனைத்தையும் தாங்கிக்கொண்டு
அகிம்சை வழியில் நடந்த
அன்னலே!

வெள்ளையனின் தடிகள்
அடிமேல் அடி விழுந்தும்
தேசிய கொடியை உயிர் மூச்சாய்
தாங்கிய நாட்டுப்பற்று கொண்டவரே

விடுதலை பெற்றுத்தந்தும்
பதவி வேண்டாம் மக்களன்பு
ஒன்றே போதுமென்று வாழ்ந்தவரே!

தாங்கள் இன்றும்
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறிர்கள் ஆம்!

பணத்திற்காக எதையும்
செய்யும் பணக்கூட்டத்தின்
நடுவில் ஆம்! அந்த
பணத்தில்தான் உங்களது
உருவம் பொறிக்கப்பட்டுள்ளதே!

பதவிக்காக தங்கள்
பிறந்தநாளன்று மகாத்மாவின்
சிலைக்கு மாலை அணிவித்து
மக்களை மயக்கும் அரசியல்
கூட்டத்திற்குள்!

கொள்கைகளை வகுத்து
அதன்படி நடந்திர்கள்
ஆனால்! இன்று
அரசியலுக்காக புதுப்புது
கொள்கைகளை வகுக்கிறது
இன்றைய அரசியல் கூட்டம்!

அகிம்சை ஒன்றே
குறிக்கோளாய் வாழ்ந்திர்கள்
ஆனால் பதவி ஒன்றே
குறிக்கோளென்கிறது
இந்த கூட்டம்!

இந்த இனிய நாளென்று (02-10-2001)
தங்களது சிலைக்கு மாலை அணிவித்தால்
எங்கு இவன் மாலை அணிவித்து
புதுக் கட்சியை உருவாக்கிவிடுவனோவென
அஞ்சுகிறது ஒரு கூட்டம்!

இது இன்றைய நமது
இந்திய தேசத்தின் நிலை

எனைப்பார்த்து யாரும்
அஞ்சவேண்டாம்
எனவே தங்களை எனது
மனதிற்குள் வணங்குகிறேன்!

வாழ்க பாரதம்!
வளர்க
அகிம்சை!
வந்தே மாதரம்!


Inak:-)


Tuesday, June 2, 2009

காப்போம்!

ஒரு உயிருள்ள
உடலை கொடுக்க
இருவர் தேவை!

அந்த உயிர் வாழும்போது
பல உயிர்களை
காப்பற்றலாம்!

ஆம்!
இரத்ததானம்
செய்வதின் முலம்

இறந்தபிறகும்
பல உயிர்களை
காப்பற்றலாம்!

ஆம்!
உடல்தானம்
செய்வதின் முலம்

இறந்த பிறகு
உடல் வெறும் மண்ணுக்குள்
செல்வதைவிட பல
மனித உயிர்களை
காக்க பயன்படட்டும்!

உடல்தானம் செய்வோம்
மனிதகுலம் காப்போம்!

Inak:-)

தியாகிகள்!

போர்கலத்தில் போரிட்டு
உயிர்விடும் போர்வீ ரர்கள்
மட்டும் தியாகிகளா?

மானத்தோடு வாழவேண்டும்
என்பதற்காகவும்,

மற்றவர்களின் மானம்
காக்கப்படவேண்டும்
என்பதற்காகவும் தன்உயிரை
தானே மாய்த்துக்கொல்பவர்களும்
தியாகிகளே!

குறிப்பு:
தற்கொலை செய்வதும் தற்கொலை செய்ய துண்டுவதும் நமது இந்திய சட்டப்படி குற்றமாகும்.


Inak:-)

Monday, June 1, 2009

மருத்துவர்!

பெண்ணே!
என்னை சிரிக்கவைத்தாய்
சிந்திக்கவும் வைத்தாய்!

அழவைத்தாய்
ஆறுதலும் சொன்னாய்!

தூங்கவைத்தாய்
தூக்கத்தையும்
கெடுத்தாய்!

ஆனால்!

இன்று தனியே புலம்ப
வைத்து விட்டாயே
மனநலமருத்துவரிடம்!

Inak:-)



முடிவு!

மாற்றம் தேவைதான்
மனித வாழ்க்கைக்கு!

அந்த மாற்றம் ஒன்றின்
முடிவின் மூலமாகத்தான்
இருக்கமுடியும்!

முடிவும் ஒன்றின்
ஆரம்பமாகத்தான்
இருக்கும், இருக்கவும்
வேண்டும்!

அந்த ஆரம்பம் பலருக்கு
நன்மை தரக்கூடியதாக
இருந்தால்தான் அந்த
முடிவு முழுமை பெற்றதாக
இருக்கமுடியும்!

ஆம்!என்னவளுக்காக நான்
செய்துகொண்ட மாற்றம்
என்னுடைய செல்போன்
என்னை மாற்றிக்கொண்டது!

எனக்காக என்னவள்
மாற்றிக்கொள்ளவேண்டாமென
நான் முடிவு செய்தேன்!

இந்த எனது முடிவு
என்னவளுக்கு ஒரு மகிழ்ச்சியை
கொடுக்கும்!

Inak:-)