Tuesday, September 21, 2010

40 மார்க் 01/12/1999


பத்து மாசம் கஷ்டப்பட்டு
நா பெத்த மவன
பரிட்சையில பெயிலாகி
வந்து நிக்கிறியேடா
நா பெத்த மவன!

நாலு பேரு புகழற மாதிரி
நா உன்ன நடந்துக சொல்லல
நாப்பது மார்க் வாங்கி
பாசகதானடா சொன்னே
நா பெத்த மவன!

பலபேரு புகழனாகூட
பரவாயில்ல நாலுபேரு
இகழறமாதிரி
நடந்துகிறியேடா
நா பெத்த மவன!

பல நாலு பட்டினி
கிடந்தது பணத்த
சேத்து உ பரிட்சைக்கு
பணம் கட்டினேன்டா
நா பெத்த மவன!

பள்ளிக்கு போய்
பாடத்த படிச்சு பாசாகம
இப்ப பெயிலாகி நிக்குறியேடா
நா பெத்த மவன!

எனக்கு பெரும
சேக்க சொல்லல
உ வாழ்வு பெருக தானடா
சொல்றேன்
நா பெத்த மவன!

உன்ன தூக்கி தூக்கி
கொஞ்சின என்ன
இப்ப குத்தி குத்தி
வையுறியேடா
நா பெத்த மவன!

பெத்தவ அருமையை
அறியாத மவன நீ
எப்படி வர்றவள
காப்பாத்தாபோற
நா பெத்த மவன!

எனக்கு கொல்லி
போடலனா கூட பரவாயில்ல
உனக்கு நீயே கொல்லி
போட்டுகாதடா நா பெத்த மவன!

என்னதான் நீ என்ன
வைஞ்சாலும் எ மனசு
பொறுத்துக்கு மடா
நா பெத்த மவன!

எப்படிச்சொல்வது? 26/03/2008


கருவறையில் ஈரைந்து
மாதம் கஷ்டப்பட்டு
சுமந்து பெற்று வளர்த்த
தாயிடம் எப்படிச்சொல்வது
நான் செய்த வேலையை
விட்டேன் என்று?

தினந்தோறும் காலையில்
சொல்வளே இரண்டிட்டிலியாவது
சாப்பிட்டுவிட்டு போடாவென்று!

மதியம் இரண்டு மணிக்கு
போன் செய்து கேட்பாளே
சாபிட்டாயாவென்று!

சனிக்கிழமை இரவு
கேட்பாளே நாளைக்கும்
வேலைக்கு போக வேண்டுமாவென்று!

எப்படிச்சொல்வது அவளிடம்
என் தாய் முகத்தை பார்க்கவே
இன்று வெட்கப்படுகிறேன்

இன்றும் எண்ணியிருப்பாள்
மகன் வேலைக்கு சென்றிருக்கிறான் என்று
அவளிடம் எப்படி சொல்வது

நான் செய்த வேலையை
விட்டேன் என்று?








Saturday, September 18, 2010

எங்கு இருக்கிறது?

சங்கம் வைத்து
தமிழ் வளர்த்தது
மதுரையில்!

செம்மொழி மாநாடு
நடத்தி உலக
தமிழர்களை
ஒன்று திரட்டியது
கோவையில்!

அனைத்து பெயர்களும்
தமிழில் போட வேண்டுமென்று
ஆணை பிறபித்தது அரசு,

வரவேற்க வேண்டியது
எல்லாம் தமிழில்தான்
இருக்கிறது
ஆனால் தமிழ் இல்லையே!

தமிழகத்தின் தலை
நகரமாம் சிங்கார சென்னை
அந்த சென்னையில்
தமிழ் இருக்கிறதா?
இதோ ஒரு உதாரணம்

உ. ம்
சீனிவாச எலக்ட்ரிகல்ஸ்
இது தமிழா?
இதில் தமிழ் எழுத்து இருக்கிறது
தமிழ் எங்கு இருக்கிறது?

நீங்கள் கேட்கலாம்
உன் பெயரே தமிழில் இல்லை
அதை மாற்று முதலில் என்று,

மாற்றுகிறேன்

என்று இலங்கையில் வாழும்
என் சகோதர சகோதரிகளின் பிரச்சனை
முடிவுக்கு வருகிறதோ?
அவர்கள் சிந்தும் இரத்தம் என்று நிற்கிறதோ?
என்று அவர்கள் அங்கு நிம்மதியாக
வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்களோ?
அன்றைக்கே நான் எனது பெயரை
தமிழில் மாற்றுகிறேன்
அதுவரை எனது பெயர்
இந்த தளத்தில் Inahk:-) இப்படிதான் இருக்கும்.

Friday, September 17, 2010

வாருங்கள்!

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
என்று பாடினார் அன்று!
குடிக்க குளத்தில்
தண்ணீர் எடுக்க தடை
இருக்கிறது இன்று

உடம்பில் ஓடும் குருதியில்
சாதி தெரியவில்லை
(அடி பட்டபோது உதவி செய்யவும்
அறுவை சிகிச்சையின்
போது மாற்றும் குருதிக்கும்)

குடிக்க
எடுக்கும் குளத்து நீரில்

தெரிகிறது சாதி!
வேடிக்கையாய் இருக்கிறது.
விந்தையான மனிதர்களை
பார்க்கையில்!

பல விந்தணுக்கள்(ஆண்)
ஒரு கருவில்(பெண்) சேர்ந்துதானே
இன்று இந்த மிகப்பெரிய
மனித சமுதாயம்
உருவானது.

இதில் நீங்கள் சொல்லும் சாதி
எங்கிருக்கிறது?
எந்த சாதிக்காரன்
இறந்தாலும் புதைக்க
குழி ஆறடிதானே!?
எரித்தால் ஒரு
கைப்பிடி சாம்பல்தானே!?

இறந்த போது
நாம் என்கிறோம்
இருக்கிறபோது
நீ வேறு நான் வேறு!

சாதிகளை தூக்கி எறிந்துவிட்டு
வாருங்கள் இருக்கிறபோதும் நாம்
நாமாக இருப்போம்!

மனிதனை மனிதனாய் மதிப்போம்
மனித குலம் காப்போம்!

Wednesday, September 15, 2010

காதல்!













பதினெட்டு வயதில்
வருவது பருவ காதல்
இது அழகையும், அளவையும்,
உருவத்தையும் மட்டுமே பார்க்கும்

இருவத்திரெண்டில்
வருவது உள்ளத்தை
மட்டுமே பார்க்கும்
உருவத்தை பார்க்காது

முப்பத்தி ரெண்டில் வருவது
உருவத்தையும் பார்க்காது
உள்ளத்தையும் பார்க்காது
குடும்பத்தின் வளர்ச்சியையும்
எதிர்காலத்தையும் பார்க்கும்

அறுபதுக்கு மேல் வருவது
தன் மடிமீது தவழ ஒன்றும்
தான் மடிசாய ஒன்றையும்
பார்க்கும்.

Tuesday, September 14, 2010

முட்டாள்!

மனிதன் நான்கெழுத்து
சாதி வெறும் இரண்டெழுத்துத்தான் ஆனால் இது எத்தனை பேரை வாழ வைத்திருக்கிறது எத்தனை பேரை கொன்று குவித்திருக்கிறது,எங்கு பிறந்தது இந்த சாதி?
இப்போது நான் இதை ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை,

சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொன்னான் பாரதி ஆனால் இன்றோ இரண்டாயிரம் சாதிகளிருக்கும், நான் கேட்க நினைப்பது இதுதான் இந்த கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?

சாதி சாதி என்று சொல்கிறிர்களே நீங்கள் எந்த சாதியோ அந்த சாதிக்காரன் விளைச்சலில் உருவான உணவையா சாப்பிடுகிறிர்கள்?

நீங்கள் உடுத்தும் உடை உங்கள் சாதிகாரனால் நெய்யபட்டதா?நீங்கள் படித்த பள்ளி, நீங்கள் வேலை செய்யும் இடம், இங்கெல்லாம் உங்கள் சாதிக்காரன் தான் இருக்கிறானா?
நீங்கள் பயன்படுத்தும் வண்டிகள் கார், பைக், சைக்கிள் மற்றும் நீங்கள் பயணம் செய்யும் பேருந்து இரயில் வண்டி ஆகியவை உங்கள் சாதிக்காரன் தயாரித்ததா?

ஒரே சாதியில் திருமணம் செய்ய நினைக்கிறிர்கள் ஐந்து நிமிட சுகத்திற்காக தேடும் வேசி அதே சாதிகார பெண்ணையா தேடுகிறிர்கள்?மனைவி மட்டும் அதே சாதியில் வேண்டும் வேசி மட்டும் வேறு சாதியா?வெட்கமாயில்லை?

உடல் நலம் சரியில்லை என்றால் மருத்துவரை பார்க்கிறிர்கள் அந்த மருத்துவர் உங்கள் சாதிகாரரா?
சாலையில் தீடிரென்று ஏற்பட்ட விபத்தின்போது உங்களை உங்கள் சாதிகாரந்தான் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றாரா? அல்லது சென்றிருக்கிறாரா? அங்கு உங்களுக்கு முதலுதவி அளித்தது உங்கள் சாதியை சார்ந்த மருத்துவர்தானா? அப்போது தேவைப்பட்ட இரத்தம் உங்கள் சாதிக்காரரின் இரத்தம் தான் உங்களுக்கு ஏற்றப்பட்டதா?
நீங்கள் முடி வெட்டுகிறிர்களே அவர் உங்கள் சாதிகாரனா?
நீங்கள் இருக்கும் வீடு, வானொலி, தொலைக்காட்சி, செல்போன்,மின்சாரம் பயன்படுத்தும் சாலை உங்கள் சாதிக்காரன் கட்டியதா?
நீங்கள் பயன் படுத்தும் வங்கி பணம்பெறும் தானியங்கி சாதி பெயரையா போட சொல்கிறது?இப்போது பார்த்து படித்து கொண்டிருக்கும் இந்த கணினியும் இணைய தளமும் சாதி பெயர் போடு என்று சொல்லவில்லை?
type ur user id enter ur password என்றுதான் இருக்கிறது,

அவ்வளவு ஏன் இறந்த பிறகு உங்கள் உடலை தூக்கி சென்று அடக்கம் செய்கிறது வரை உங்கள் சாதிகாரன் தான் செய்கிறானா?

உண்மையான சாதி என்றால் தாயின் கருவறையில் ஆரம்பித்து பூமித்தாயின் கருவறைக்கு (கல்லறை) வரை எல்லாமே அதே சாதியாகத்தான் இருக்கவேண்டும் அதுதான் உண்மையான சாதி அவன்தான் உண்மையான சாதிக்காரன்,

எனக்கு பிறக்கும் குழந்தையை பிரசவம் பார்க்கிறது எனது சாதிக்காரன்,எனது குழந்தை படிக்கும் பள்ளிக்கூடம் மற்றும் அதை கட்டியது எல்லாமே எனது சாதிக்காரன் நான் உடுத்தும் உடை, உண்ணும் உணவு, நான் பயன் படுத்தும் வாகனம் சாலை,வானொலி, தொலைக்காட்சி, செல்போன்,மின்சாரம் இப்படி எல்லாமே எனது சாதிக்காரன் செய்ததாகத்தான் இருக்கவேண்டும்,

இப்படி எந்த சாதிக்காரன் இருக்கிறானோ அவன்தான் அந்த சாதிதான் ஒரு உண்மையான சாதி

அப்படி பார்த்தால் அது மனித சாதி ஒன்றுதான்

ஆனால் ஒரு சிலருடைய சுயநலத்திற்காக இன்னும் சாதியை பயன்படுத்தி மக்களை முட்டாள் ஆக்கப்பட்டுவிட்டனர், முட்டாள் ஆக்குவதை நிறுத்துங்கள்,

சாதியால் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு சிலரே தவிர அந்த ஒட்டு மொத்த சாதி அல்ல,எந்த சாதி கார அரசியல் வாதியும் அரசாங்கம் ஒதுக்கிய அல்லது அரசாங்கம் அமல் படுத்திய எந்த நல திட்டத்தையும் முழுமையாக அந்த சாதிக்கு செய்வது கிடையாது, ஏன் அந்த கட்சியின் தொண்டனுக்கு கூபோய் சேருவது கிடையாது இதுதான் காலம் காலமாக இந்த இந்திய தேசத்தில் நடந்து கொண்டிருப்பது, இதில் அப்படி இல்லை என்று உங்களால் ஏதேனும் ஒரு சாதி தலைவரை சொல்லமுடியுமா? அல்லது முழுமையாக பயனடைந்த ஒரு சாதியை காட்ட முடியுமா?

வாழ்கை ஒருமுறைதான் வரும்,அதில் எதற்காக சாதியாலும் இனத்தாலும் மொழியாலும் பிரிந்து நமது மனித இனத்தை நாமே அழித்து கொள்ள வேண்டும்.

நீங்கள் சொல்லலாம் (கேட்கலாம்) நீயும் நானும் சேர்ந்து சாதியை உடனே ஒழித்து விட முடியாது என்று,நியாயமானதுதான்,முதல் இந்திய சுதந்திரப் போர் நடை பெற்று நூறு ஆண்டுகள் கழித்துதான் நமது இந்திய தேசம் சுதந்திரம் அடைந்தது,அதை ஆரம்பித்தவர்களில் எத்தனை பேர் சுதந்திரம் அடைந்தபோது உயிருடன் இருந்தார்கள் என்று எனக்கு தெரியாது

அதைப்போல இன்று ஒரு சாதி ஒழிப்பு போர் நடந்தால் ஒரு நூறு ஆண்டுகள் கழித்து சாதியில்லா ஒரு தேசம் இருக்கும் அன்று நாம் இருப்போமோ இருக்க மாட்டோமோ ஆனால் நமது தலை முறையினர் சாதியில்லா இந்திய தேசத்தில் கத்தியின்றி இரத்தமின்றி சந்தோசமாக இருப்பார்கள்.

மனிதனை
மனிதனாக மதிப்போம்
மனித குலம் காப்போம்.

தயவு செய்து உங்கள் கருத்துகளை சொல்லவும்.