Tuesday, March 1, 2011

எனக்கு என்ன தெரியும் ( கட்டுரை )


நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்த மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்று எல்லாருக்கும் தெரியும் அவருக்கு அடுத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து இறங்கியவர் Edwin A. Aldrin என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை மெரீனா என்று எல்லாருக்கும் தெரியும்
முதல் பெரிய கடற்கரை எது?
உலகின் நீலமான நதி நைல் என்று எல்லாருக்கும் தெரியும் இரண்டாவது நதி?
உலகின் உயரமான் சிகரம் எவரஸ்ட் சிகரம் என்று எல்லாருக்கும் தெரியும் இரண்டாவது சிகரம் எது?

இவைகள் ஏன் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் வாகனங்களான சைக்கிள்,பைக்,கார் மற்றும் மின்சாரம்,ரேடியோ,தொலைகாட்சி,செல்போன் இவைகளை கண்டு பிடித்தவர்களை தெரிந்து வைத்திருக்கிறோமா?

இந்த பொருட்கள் பழுதானால் அவற்றை எப்படி சரி செய்ய வேண்டும் என்றாவது நமக்கு தெரியுமா?
இவைகளை தெரிந்து கொள்ள நமக்கு விருப்பம் இல்லையா? இருக்கிறது
அதே நேரத்தில் இன்றைய வளர்ந்து வரும் விஞ்யான உலகில் நாம் காலத்தைவிட வேகமாக போகவேண்டியதாகிருக்கிறது இது உண்மைதானே?

நம்மில் எத்தனை பேர் காலை உணவை சரியாக சரியான நேரத்தில் சாப்பிடுகிறோம்?உணவு மட்டுமா?எல்லாமே இன்று நாம் வேகமாகத்தான் செய்து கொண்டிருக்கிறோம் காரணம் தேவைகள் அதிகமாகிவிட்டது அந்த தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் அதற்கு பணம் தேவை அந்த பணத்தை பெற கஷ்டப்பட வேண்டியதாயிருக்கிறது அதற்காக சில நேரங்களில் உறவுகளை பார்ப்பது கூட அரிதாகிறது.


தொடரும்.....

Inak:-)