Thursday, June 10, 2010

மதிப்போம் (03-03-2002)


இதை
நான் எழுதி பல வருடங்கள் ஆகிறது இன்று உங்கள் பார்வைக்காக

மனிதனே!
உனக்கென்ன வேண்டும்
ஏன் மிருகங்களைப் போல்
நடந்து கொள்கிறாய்?

உனது செய்கையால்
மிருகத்திற்கும் மனிதனுக்கும்
இருந்த வித்தியாசம்
இப்போது இல்லை!

காந்தி பிறந்த மண்ணில்
அகிம்சையை காணவில்லை
வேதைப்ப்டுகிறேன்

மனித நேயம் வளர்த்த
நாட்டில் மதவாதிகள்
வளர்ந்துவிட்டனர்
களை எடுக்க வேண்டும்
கண்டிப்பாக களை
எடுத்தாக வேண்டும்

ஆம் மதங்களை
துண்டும் மனிதனை

எந்த மதமும் தனக்கு
கோவில் வேண்டுமென்று
கூறவில்லை

எந்த கடவுளும் தனக்கு
சிலை வேண்டுமென்று
சொல்லவில்லை

எந்த சாமியும் தனக்கு
உருவ வழிபாடும்
உயிர்பழியும் வேண்டுமென்று
கட்டளையிடவில்லை

அனைத்தையும் நீயே
போட்டுக்கொண்டு நீயே
எடுத்துக்கொள்கிறாயே
இது நியாயமா? இது
தவறென்பதை நீ இன்னும்
உணரவில்லையா?

இராமர் என்ன இப்போது
தனக்கு கண்டிப்பாக
ஆலயம் வேண்டுமென்று
கேட்டாரா?

அல்லது உயிர்ப்பழியிட்டுத்தான்
ஆலயம் கட்டவேண்டுமென்று
கட்டளையிட்டாரா?

ஏனடா இன்னும்
மதம் மதம் என்று
அலைந்து கொண்டிருக்கிறாய்

மதிகெட்ட மனிதனே
உனது மத வெறியால்
கோத்ரா இரயில் விபத்து
வரலாற்றில் இடம்
பிடித்தது போதாதா?

பல உயிர்களை பலி வாங்கியும்
உனது மதவெறி
இன்னும் நிற்கவில்லையா?

உன்னையெல்லாம்
மனிதனென்று சொல்லவே
வெட்கப்படுகிறேன்

மனித உருவத்தில்
இருக்கும் மத பித்தனே
மதம் மனிதனுக்காக அன்றி
மனிதன் மதத்திற்காக அல்ல
இதை நீ இன்னும் உணரவில்லையா?

மதங்களின் பெயரால்
செலவிடுவதை மனித
குலத்திற்கு செலவிடு

மனிதனை மனிதனாக
மதிக்க கற்றுக்கொள்

மதங்களின் பெயரால்
சண்டையிடுவதை நிறுத்து
மனிதகுலம் சிறக்க பாடுபடு

மனிதனை மனிதனாக மதிப்போம்
மனிதகுலம் காப்போம்!


Inak:-) (இனாக்)

Wednesday, June 2, 2010

தேவை!

நான் பிறந்தபோது
பணம் கொடுக்கப்பட்டதா?
என தெரியாது

ஆனால் நான்
இறந்தபிறகு
எனது பிணத்தை
புதைக்கவோ எரிக்கவோ
தேவை பணம்!

Inak:-)