Friday, May 29, 2009

தேவை!

கல்வெட்டு
கற்காலத்தின் பொக்கிஷம்!

கணிணி கலியுகத்தின்
வரப்பிரசாதம்!

கல்வெட்டு கற்கால
மனிதனைப் பற்றி
அறிய உதவியது!

கணிணி நிகழ்காலத்தின்
நிஜங்களை அறிய
உதவியது!

கல்வெட்டு கடல் கடந்து
வந்தவர்களையும்
அறிய உதவியது!

கணிணி அண்டவெளியை
ஆராய்ச்சி செய்ய உதவுகிறது!

கல்வெட்டிற்கு
கரண்ட்டு (மின்சாரம்)
தேவையில்லை!
கணிணிக்கு கரண்ட்டு தேவை!

Inak:-)

Thursday, May 28, 2009

மனமில்லை!

உனை பிடித்த என்னை
உனக்கு பிடிக்காதபோது
நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை!

எனக்கு எனை அழித்துக்கொள்ளவும்
மனமில்லை காரணம்
நான் இறந்தபிறகு உன்னை
யார் கவனிப்பார்கள்!

எனவேதான் நான்
எனது உயிரணுக்களை
அழித்துககொண்டேன்!

Inak:-)

எது வாழ்க்கை? (06-06-2002)

வாழ்க்கை!
பிறந்தோம், வளர்கிறோம்,
இறக்கிறோம், இதுதான்
வாழ்க்கையா?

வாழ்க்கை!
வெறும் மனிதனுக்கு மட்டும்தான்
உரியதா?அல்லது மற்ற
ஜீவராசிகளுக்கும் பொருந்துமா?
தெரியவில்லை!

இது ஒருபுறமிருக்க

மனிதனைப் பற்றியும் அவனது
பிறப்பின் இரகசியங்களைப் பற்றியும்
ஒருபுறம் ஆராய்ச்சிகள் நடந்து
கொண்டிருக்கிறது!

ஒரு செல்தான் மூலக்காரனமென்று
சொல்கிறது அறிவியல்

கடவுள்தான் இப் புவியில்
மனிதனை படைத்தானென்று
சொல்லிக்கொண்டிருக்கிறது
ஒரு கூட்டம்!

இதில் எது உண்மை?
இது ஒருபுறமிருக்க

இப்படியே காலங்கள்
நகர்ந்துகொண்டிருக்கிறது!

மனிதனின் மூளை
அதி சக்திவாய்ந்தது போலும்!
மற்றவைகளைப் பார்த்து
தன்னை வளர்த்துக் கொண்டான்!
இன்னும் வளர்த்துக்கொண்டுதான்
இருக்கிறான்!

பூமியை ஆராய்ந்தான்
அதன் வடிவத்தைக்கண்டுபிடித்தான்!
பூமிக்கு ஒரு துணைக் கோளென
சந்திரனை கண்டறிந்தான்
அதில் தனது கால் தடத்தையும்
பதித்தான்!

அப்போதும் அவனது தாகம்
தனியவில்லை!இன்று
செவ்வாயில் காலடி பதிக்க
முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறான்

இது ஒருபுறமிருக்க

இவைகளனைத்தும்
வாழ்க்கையெனும் பாதையிலே
இப்புவியில் நடந்து கொண்டிருக்கிறது!

உண்மையில் வாழ்க்கை என்றால் என்ன?
விடை ......

மனிதயுகத்தில்
வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை
எத்தனையோ கோடிகள் ஆனால்
அதில் இன்னும் வாழ்ந்து
கொண்டிருப்பவர் ஒரு சிலரே!

எங்கோ போகிறான் ஏதோ செய்கிறான்
எதையோ பெறுகிறான் அதற்குத்தான் மரியாதையும்
தருகிறான் அதையே உயர்வாகவும் அதை
பெற்றிருப்பவர் தான் பெரியவ்ரென்றும்
அதுதான் வாழ்க்கை என்றும்
சொல்கிறான் இன்றைய மனிதன்!

அது வேறெதுவுமில்லை
வெறும் வெற்றுக்காகித்திதில்
அச்சிடப்பட்டுள்ள பணம்!

அடே மனிதா!
ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தாயா?
உனது வாழ்க்கை தரத்தை!
உனது முன்னோர்களின்
வரலாற்றையாவது படித்தாயா?

நீ இப்போது உன்னுடைய
அதி புத்தியால் இயந்திரம்யமாக்கப்ப்ட்டாய்
காலத்தைவிட நீ வேகமாக
இயங்கிக்கொண்டிறுக்கிறாய்!

அடே மனிதா!
இப்பிரபஞ்சத்தில்
ஒரு பால்வெளித்திரனில்
ஒரு சூரிய குடும்பத்தில்
இப்புவியில் நீ இருப்பது
மிகப்பெரிய விஷயம்

ஆனால் உன்னுள்தான்
எத்தனை வகைகள்
அரசியல்வாதி,மதவாதி,
பயங்கரவாதி,திவிரவாதி,
சுயநலவாதி

மனிதா! வாழ்க்கை ஒருமுறைதான் வரும்
அந்த வாழ்க்கையில் வாழ்க்கையைப்பற்றி
தெரியாமல் வாழ்பபோகிறாயா?
அல்லது தெரிந்து வாழ்பபோகிறாயா?
அல்லது நீ இறந்தும் வாழ்பபோகிறாயா?

மனிதா!
மீண்டுமொருமுறை
நினைவுபடுத்துகிறேன்!

இப்புவி தோன்றியதற்கு
வரலாறு உண்டு!
பல அரிய உயிரினங்கள்
வாழ்ந்ததற்கும் வரலாறு உண்டு

அதே உயிரினங்கள்
அழிந்த்த்ற்கும் உண்டு வரலாறு!

நீ வந்ததற்கும் உண்டு உனது
பிறப்பு சான்றிதல்
அதே சமயத்தில்
நீ வாழ்ந்ததற்கு ஒரு சான்று
வேண்டுமா? வேண்டாமா?

நீயே முடிவு செய்துகொள்
எது வாழ்க்கையென்று!

Inak:-)























vazhkkaiyenrum




















Tuesday, May 19, 2009

ஆசைப்படுகிறேன்!



நான் பிறந்த நிலையை
பார்க்க ஆசைதான்!

லைப்பிள்ளையைப் பெற்றெடுத்த
பெற்றோரின் ம்கிழ்ச்சியைப்ப்
பார்க்க ஆசைதான்!

தாலாட்டிய தாயின் நிலையைப்ப்
பார்க்க ஆசைதான்!

தூக்கி நெஞ்சிலனைத்த
தாத்தா பாட்டியின்
மகிழ்ச்சியைப் பார்க்க
ஆசைதான்!

நான் தவழ்ந்த நிலையைப்
பார்க்க ஆசைதான்!

நான் நடந்த விதத்தைப்
பார்க்க ஆசைதான்!

சிறுவயதில் நான் ஆடிய
ஆட்டத்தைப் பார்க்க
ஆசைதான்!

என் முதல் வகுப்பு
அனுபவத்தை நினைக்க
ஆசைதான்!

அன்று நான் வாங்கிய
மதிப்பெண்ணை திரும்பப்
பார்க்க ஆசைதான்

என் இளவயது மீண்டும்
வர ஆசைதான்!

என் உயிரற்ற உடலை
பார்க்க ஆசைதான்

ஆனால்!
லைப்பிள்ளையைப் பெற்றெடுத்த
பெற்றோரின் துன்பத்தை என்
ஆன்மா கூ பார்க்ககூடாதென
ஆசைப்படுகிறேன்!


Inak:-)

இதுதான் உண்மை!

இது நான் கல்லுரியில் வேலை பார்த்தபோது எழுதியது,(28-03-04)அந்த வருடம்அவர்கள் படிப்பு முடிந்து போகிறார்கள் அவர்களின் பிரிவை என்னால்தாங்கிக்கொள்ளமுடியவில்லை காரணம் மிகவும் நல்ல மாணவமாணவிகள்அவர்கள் அதை அப்படியே இங்குஎழுதிய்ருக்கிறேன்.


எங்கே எனை அழைத்த
குரலோசைகள்!

தேடுகிறேன்! தேடுகிறேன்
சுற்றி சு ற்றித் தேடுகிறேன்!

ஒரு வேளை எனது செவிதான்
செவிடானதா?

இல்லை! இல்லை!

ஓசை மட்டும் கேட்கிறது
உருவங்களை காணோம்!

இது என்ன உறவு?
எனக்கு புரியவில்லை
தெரியவில்லை!ஆனால்
தேடுதல் மட்டும் நிற்கவில்லை!

இரவில் சுற்றும் வொவாளைப்போல்
நான் பகலில் சுற்றி சுற்றி
அழைக்கிறேன்! என் பசங்களா!
எங்கே இருக்கீங்க என் பசங்களாவென்று!

எனது அழைப்பு மட்டுமே
திரும்ப கேட்கிறது!

அன்று அவர்கள் கேட்டது
சொன்னது எதுவுமே இன்று
கேட்கவில்லையே ஏன்?

எனை உரிமையோடு அண்ணாவென்று
அழைத்த அந்த உறவுகள் இன்று
எங்கே போயிற்று?

எனை திட்டிய அந்த குரல்கள்
இன்று எங்கே போயிற்று?

எனை தேடியவர்கள் இன்று
எங்கே போனார்கள்?

அன்று அது வேண்டும்
இது வேண்டுமென கேட்டவர்கள்
இன்று எங்கே போனார்கள்?

அண்ணா உங்க செல்போன்ல
ஒரு போன் பண்ணிகிட்டுமான்ன?

இன்று எனது செல்போன்கூ
செத்துப்போயிற்று!

அவர்களுடைய தேவைகள்
பூர்த்தியாகி விட்டது அதனால்
எனது சேவை இனி தேவையில்லை
இதுதான் உண்மை!

உண்மை இதுவானால் அந்த
உறவுகளுக்கு என்ன அர்த்தம்?
எனக்கு தெரியவில்லை!

உண்மையை உறவுகளோடு
புரியவைத்த அவர்களுக்கு
எனது மனமார்ந்த நன்றி!

வாழ்த்துக்கள் அவர்கள்
வாழ்வு சிறக்க!

Inak:-)

Monday, May 18, 2009

Birthday Message!


இது என்னோட நண்பன் ஒருவருக்காக எழுதிய வாழ்த்துச்செய்தி 13-03-02 அன்றுஎழுதியது அப்படியே இங்கு எழுதியிருக்கிறேன்

Hello! Mr.
Today s ur Birthday (14-03-02)
so உங்களுக்கு வாழ்த்து
சொல்ல வேண்டுமா?

உங்களை வாழ்த்த நான் யார்?
உங்களை வாழ்த்த எனக்கு
தகுதியிருக்கிறதா?

இருந்தபோதிலும் நான்
கற்றதை வாழ்த்தாக
சொல்கிறேன் உங்களுக்காக!

பிறந்தநாளுக்கு அன்பளிப்பு
வாங்கி கொடுப்பதைவிட
நல்ல விஷயங்களை சொல்வதையே
நான் சிறந்த பரிசுப்பொருளாக
இருக்குமென நினைக்கிறேன்


Hello Mr.
வாழ்க்கை நமக்கு கிடைத்த
ஒரு அறிய பொக்கிசம்
அதை நாம் எப்படி எடுத்துக்
கொள்கிறோமோ அதைப்பொருத்துதான்
அதன் தன்மை அமையும்!

வெறும் கல்தான்! அது
சிற்பியின் கையில் கிடைத்தால்
அழகிய சிலையாக,
அறிய சிற்பமாக மாறுகிறது,
அதே கல் சிறுவனிடம்
கிடைத்தால் மாங்காய்
எரியத்தான் போகிறது!

வெறும்கல்தானே என்று
சும்மாயிருந்தால் அது கடைசிவரை
கல்லாகத்தான் இருக்கும்

வாழ்க்கையின் வெற்றி
போராடுவதில்தான் இருக்கிறது
அதற்காக போராட்டமே
வழ்க்கையாகிவிடகூடாது

எனைப்பொருத்தவரை
வெற்றி என்பது ஒருநிமிட
நிம்மதி பெருமூச்சி அந்த
மூச்சி இறக்கும்போது
கிடைத்தாலும் அது வெற்றியே!

எதையும் தனித்து செய்!

தோல்வியை அனுபவமாக கொள்!
வெற்றியை பகிர்ந்துகொள்!

தனித்து போராடுவதில்தான்
திறமை இருக்கிறது

தன்னம்பிக்கை கொள்!
தன்னம்பிக்கை இல்லாதவன்
கைகாலிருந்தும் ஊனமாவான்!

அதற்காக யாரையும்
நம்பவேண்டமென சொல்லவில்லை
முதலில் உன்னை
நீ நம்பு!

வயதிற்கு ஏறுகிற சக்திதான் உண்டு
இறங்குகிற சக்தி கிடையாது
இது இயற்கையின் நியதி!

இன்றுமுதல் வந்த வயதிற்கு
நீ என்ன செய்யப்போகிறாய்
என்பதில்தான்
இருக்கிறது!

அதுதான் இந்த நாளுக்கு
நீ கொடுக்கும் மதிப்பு!

வாழ்க்கையை புரிந்து
நடந்து கொள்!

இருக்கும்போது வாழ்வதைவிட
இறந்தபிறகும் வாழ்வதில்தான்
ஒருவருடைய வாழ்க்கை இருக்கிறது!

இந்த நாள் இனிதே
அமைய வாழ்த்த தகுதியில்லை
இறைவனை வேண்டுகிறேன்

என்றும்
அன்புடன்

Inak:-)





வேதனைப்படுகிறேன்!


இதை நான் இன்று எழுதவில்லை, 03-03-02 அன்று எழுதியது,அன்று எதோசொல்லவேண்டுபோல் தோன்றியது எழுதினேன் அதை அப்படியே இங்குஎழுதியிருக்கிறேன்


காந்தி பிறந்த மண்ணில்
அகிம்சையை காணவில்லை
வேதனைப்படுகிறேன்

அகிம்சை பிறந்த நாட்டில்
மதவாதிகள் வளர்ந்துவிட்டனர்

எந்த மதமும் தனக்கு
கோவில் வேண்டுமென்று
கேட்கவில்லை!

எந்த கடவுளும் தனக்கு
சிலை வேண்டுமென
சொல்லவில்லை!

எந்த சாமியும் தனக்கு
உருவ வழிபாடு வேண்டுமென்று
கட்டளையிடவில்லை!

அனைத்தையும் நீ யே
செய்துகொண்டு நீ யே
எடுத்துக்கொள்கிறாயே
இது நியாயமா?

இராமர் என்ன
இப்போது எனக்கு கண்டிப்பாக
ஆலயம் வேண்டுமென்று
கேட்டாரா?

அல்லது உயிர் பலியிட்டுத்தான்
எனக்கு ஆலயம் கட்டவேண்டுமென்று
கட்டளையிட்டாரா?

ஏனடா இன்னும்
மதம் மதமென்று
அலைந்து கொண்டிருக்கிறாய்!

மதிகெட்ட மனிதனே
உனது மதவெறியால்
கோத்ரா இரயில் நிலையம்
வரலாற்றில் இடம் பிடித்தது
போதாதா?

பல உயிர்களை பலிவாங்கியும்
உனது மதவெறி இன்னும்
னியவில்லையா?

மதங்களின் பெயரால் செலவிடுவதை
மனித குலத்திற்குசெலவிடு!

மதங்களின் பெயரால்
சண்டையிடுவதை நிறுத்து!
மனிதகுலம் சிறக்க பாடுபடு

மனிதனை மனிதனாக மதிப்போம்
மனிதகுலம் காப்போம்!


Inak:-)














Sunday, May 17, 2009

நிறுத்து!

இதை நான் எழுதியது 01-10-01, அன்று எனக்கு எப்படியாவது எதாவதுசொல்லவேண்டுபோலிருந்தது அதை எப்படியோ எழுதினேன் அதைத்தான்இங்கும் எழுதியிருக்கிறேன் ஆனால் இன்றும் தேடிக்கொண்டுதான்இருக்கிறார்கள் .

பின்லேடனே ஒருநிமிடம்!
நீ முன்னே வைத்த காலை
பின்னே வை!

உனது கோரிக்கை
உனக்கு வேண்டுமானால்
நியாயமானதாக படலாம்

அதே சமயத்தில்
அதன் விளைவுகளை நீ
பார்க்கலையா?

நீ கருவறையிலிருக்கும்போது
எந்த மதமென்பதை அறிந்தாயா?

நமது சகோதர சகோதரிகளை
கல்லறைக்கு அனுப்புகிறாயே
இதைத்தான் உனது மதம்
உனக்கு கற்றுக் கொடுத்ததா?

எந்த மதமும் இதுபோல்
சொன்னதாக எனக்கு
தெரியவில்லை!

மதம் மனிதனுக்காக அன்றி
மனிதன் மதத்திற்காக அல்ல
இதை நீ படிக்க்விலையா?

உலகமே உன்னை
விரட்டுகிறது நீயும்
ஓடிஓடி ஒழிந்து
கொண்டிருக்கிறாய்

உனது ஓட்டம் நிற்கவேண்டுமானால்
நீ முன்னே வைத்த காலை பின்னே
வைப்பதைத் தவிர வேறு வழியில்லை

மதங்களின் பெயரால்
சண்டையிடுவதை நிறுத்து!
மனிதனை மனிதனாக
மதிக் கற்றுக்கொள்!
உன்னை விரட்டுவதை
உலகம் நிறுத்தும்

மனிதகுலம்
காக்க போரிடு
உலகம் உன்னை போற்றும்!


Inak:-)











ஆறடி நிலம் அன்று!


இரண்டடிகளை கொண்டது
திருக்குறள்!

நான்கு
அடிகளை கொண்டது
வெண்பா!

மனிதனுக்கு
சொந்தம்
ஆறடி நிலம் அன்று!

இன்று
உலகமே சொந்தம்
எனக்கு ஆம்!
எனது
உடலை தானம்
செய்துவிட்டேன்
நான்
நீங்கள்!

Inak:-)



வலிக்கிறது!



எனை எனக்கு
பிடிக்காதபோது கூ
நான் வருத்தப்பட்டது
கிடையாது!

ஆனால்!
எனக்குப்பிடித்த என்னவளுக்கும்
My Baby My Heart அவர்களுக்கும்
எனை பிடிக்கவில்லையே என்பதை
நினைக்கும்போது என் இதயமே
வலிக்கிறது
!

Inak:-)

Saturday, May 16, 2009

இல்லையென்று யார் சொன்னது?



நான் கடவுள் நம்பிக்கை
இல்லாமலிருந்தேன்!

ஆனால் My Baby My Heart
அவர்களின் பிறந்தநாள்
வாழ்த்துச்சொல்ல தூது
அனுப்பினேன் கடவுளை!

முதலில் சோதனைகள்
பல கொடுத்தார் அவர்!

நான் அவரிடம்!
இறைவா நீ கொடுக்கும்
சோதனையையும்,
தண்டனையையும்
ஏற்றுக்கொள்கிறேன் நான்!

அதே நேரத்தில் என்னவளின்
My Baby My Heart அவர்களின்
பிறந்தநாளுக்கு நான் ஏதாவது
செய்யவேண்டும் அதற்கான
வழியை சொல்லிவிட்டு கொடு
என முறையிட்டேன்!

என்ன கருணை உள்ளமவனுக்கு,
வழியையும்
கூடவே வலியையும்
கொடுத்தான் ஆம்!

என்னவள்
My Baby My Heart
அவர்களின் பிறந்தநாளுக்கு
பரிசு வாங்க காசை கொடுத்த அவர்
கூடவே என் காலில்
நாய் கடியையும் கொடுத்தார்

என்னவளை இன்பமாக்க
வழிகேட்டால் நமக்கு
இம்சை கொடுக்கிராரேவென
மனதிற்குள் எண்ணினேன்


ஆனால் எனக்கு நாய் கடி
பெரிதாக தெரியவில்லை!
என்னவளுக்கு ஏதாவது
செய்ய வேண்டுமென்றுதான்
தோன்றியது!

இருந்தபோதிலும்
ஏதோ செய்தேன்!

பிறகுதான் தெரிந்தது
அவர் கொடுத்தது இம்சையல்ல

இம்சை எனும் எனது தோழி
மூலம் இன்னுமொரு பரிசையும்
கொடுத்திரு
க்கிராரென்று

ஆம்!
என்னவள்
My Baby My Heart
அவர்களை
மூன்று
மாதங்களுக்குப்பிறகு

இன்று (16/05/09)11 மணி 30 நிமிடங்கள்
என்னவளுடன் My Baby My Heart
அவர்களுடன் இருக்கச்செய்தாரே

இந்நாள்
(16/05/09) என் வாழ்வில்
மறக்கமுடியாத நாள்

இம்சையின் மூலம் என்னவளை
My Baby My Heart அவர்களை
சந்திக்கவைத்த கடவுளை
இல்லையென்று யார்
சொன்னது?

Inak:-)































Monday, May 4, 2009

வாய்மை!

இதை நான் இரண்டு வருடங்களுக்கு முன்னாள் எழுதி துண்டு பிரசுரமாக நான் வசித்த பகுதியில் ஒட்டினேன்,காரணம் அந்த பகுதிக்கு 20 வருடகாலமாக பட்டா வழங்கப்படாமல் இருந்தது அதை எப்படியாவது அவர்களுக்கு நினைவு படுத்த்வேண்டும்போல் தோன்றியது அன்று நான் பயன்படுத்தியது பேனாவும் வெள்ளைப்ப் பேப்ப்ரும்தான் ஒரு வருத்தப்படவேண்டிய விஷயம் இன்றும்
பட்டா கிடைக்கவில்லை.


வாய்மை!

ளிகைக்டைக்குச்சென்று
காய்கறி வாங்கினேன்
கடைக்காரர் சில்லறை
இல்லையென்றார்

சில்லறைக்கேற்றவாறு
சிறு பச்சை மிளகாயை
வாங்கிக்கொண்டேன்

இரண்டு சக்கர வாகனத்தை
சரிசெய்து வந்தேன் ஒரு வாரத்தில்
மீண்டும் பழுதடைந்தது
அதே மெக்கானிக்கிடம் கொடுத்து
கொடுத்த பணத்திற்குள்ளேயே
சரி செய்தேன்

எனது மனது கேட்கிறது
சில்லரைகளை சேமித்த நீ
சில இலட்சங்களை இழந்து
கொண்டிருக்கிறாயேயென்றது
புரியவில்லையென்றேன்

நீ வசிக்கும் வீட்டின்
நில மதிப்பைவிட அதிகமாக
வரி செலுத்துவது உனக்கு
தெரியவில்லையா? என்றது

பழுதடைந் வண்டிக்கு காரணம்
நேற்று போட்ட சாலை
இன்று குண்டும் குழியுமாக
ஆனதை நீ அறியவில்லையா?

ஓட்டுப்போடுகிறாய்
ஒழுங்காக வரியும் கட்டுகிறாய் இவற்றை
கேட்கும் உரிமை இல்லையா?உனக்கு
அல்லது வாய்மை இல்லையா?

எனக்கு புரியவில்லை
உங்களுக்கு?

Inak:-)

Sunday, May 3, 2009

என்ன நடக்கிறது இங்கு!

இந்திராகாந்தியை
படுகொலை செய்த
ஒரு சிக்கிய்ர் இந்ததேசத்தின்
பிரதமமந்திரி

ராஜிவ்காந்தியை
படுகொலை செய்த
தமிழனுக்கு சிறைவாசம்

தமிழனுக்காக குரல்
கொடுத்தால் தே பா சட்டம்
என்ன நடக்கிறது இங்கு!

Inak:-)