Wednesday, July 22, 2009

எது மனிதநேயம்?


கண்முன் நடந்திராத உயிர் இழப்பிற்கும்,கடல் தாண்டி நடந்த ஒருசில இயற்கை
சீர்றங்கலுக்க்காகவும் அஞ்சலி செலுத்துவதும் உண்ணாவிரதமிருப்பதும் மட்டுமே மனித நேயமா?

நமது தினசரி நடைமுறை வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பார்க்கும் பலகுபோரிடம் வரவேண்டும் அதுதான் உண்மையான மனித நேயமாகும்

நமக்காக ஒருசிலவை

நமது பக்கத்து வீட்டுக்காரரின் மறக்கிலையோ அவரது வீட்டு கழிவு நீரோ நமது வீட்டை தாண்டி போகும்போதோ? படும்போதோ நம்மில் எத்தனைபேர் பேசாமல் இருந்திருக்கிறோம்?


நமது தெருவிலோ அல்லது நமது உடன் பணியாற்றியவரின் உறவினர் இறப்பிற்கு நம்மில் எத்தனைபேர் முழுமனதுடன் இரங்கல் தெரிவித்திருக்கிறோம்?

இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது அவசர ஊர்தி வரும்போது எத்தனை பேர் ஓரமாக போகிருக்கிறோம்?

பேருந்தில் செல்லும்போது பக்கத்தில் நின்றிருப்பவரின் கையோ காலோ பட்டபோது எத்தனை பேர் சத்தம்போடாமல் சண்டைபோடாமல் இருந்திருக்கிறோம்?

பேருந்திலோ இரயில் வண்டியிலோ பயணம் செய்யும்போது எத்தனை பேர் மற்றவர் அமர இடம் கொடுத்திருக்கிறோம்?

இங்கெல்லாம் வராத ஒரு
உணர்வுபூர்வமான நேயம் எங்கோ நாம் போகிராத பார்த்திராத இடத்தில் நடந்ததிற்காக செய்வது மனிதநேயமா?

எனக்கு தெரியவில்லை....
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் தெரிந்து
கொள்கிறேன்.

Inak:-)