Tuesday, October 25, 2016

ஹலோ சார்/மேடம் ஒரு நிமிடம்!



ஒரு நிமிடம் ஒதுக்கிய அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது நம்மில் பெரும்பாலானோர் புது துணி எடுத்திருப்போம் பலகாரம் செய்து வைத்திருப்போம் பட்டாசு வாங்கி வைத்திருப்போம் புது துணியும் பட்டாசும் அவரவர் வசதிக்கேற்றவாறு இருக்கும் எல்லாம் தயாராக வைத்து தீபாவளிக்காக காத்திருக்கிரோம் இதுதானே உண்மை,

இவை எங்கு நடக்கிறது பெரும்பாலும் பண்டிகைகளை நகர மக்களும் புறநகர் மக்களும்தான் முழுமையாக கொண்டாடுகிறார்கள் இதுதான் எதார்த்த உண்மை

அரசாங்க ஊழியர்களுக்கு அரசு போனஸ் கொடுக்கிறது தனியார் நிறுவனங்களில் ஒரு சில நிருவனங்கள் போனஸ் கொடுத்திருக்கும் நகரத்தை பொறுத்தவரை போனஸ் வாங்கியவரும் வாங்காதவர்களும் எப்படியோ கடனை வாங்கியாவது தாங்கள் பிள்ளைகள் சந்தோசத்திற்காக பண்டிகையை கொண்டாடுகிறார்கள்

சரி இது ஒருபுறம் இருக்கட்டும் இதற்கு பின்னால் ஒரு மூன்று பேர் இருக்கிறார்கள் அவர்களை நாம் நினைத்திருக்கிரோமா?
புது துணி – நெசவாளன்
பலகாரம் – விவசாயி
பட்டாசு  - தொழிலாளி

இந்த மூன்று பேரின் பங்கு அதிகம் இதில் மற்ற சிறு பெரு வியாபார தொழிலார்களும் உள்ளனர்.

நமது தேசத்தின் முதகெலும்பு விவசாயம் என்று சொல்கிறார்கள் ஆனால் அந்த வியாசாயிக்கு இந்த இந்திய அரசு என்ன செய்திருக்கிறது?

விவசாயி வாங்கிய கடனை பெயரளவிற்கு தள்ளுபடி செய்திருக்கிரது
கோடி கணக்கில் வங்கியில் கடன் வாங்கியவனை சும்மா விட்டுட்டு விவசாயத்திற்கு வங்கியில் அதிக பட்சம் ஒரு இலட்சம் கடன் வாங்கின விவசாயியை காவல் துறை கொண்டு கைது செய்கிறது.

ஒரு வியாசாயிக்கு தேவை தள்ளுபடி அல்ல தண்ணீறும்
தான் அறுவடை செய்த பொருளுக்கு நான் விலை நிர்ணயம் செய்யவேண்டும் அதை எந்த அரசாவது காதில் வாங்கியதா?


எந்த கிராமத்திலாவது அடிப்படை வசதியை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறதா?

எந்த கிராமத்திலாவது அந்த கிராமத்தில் படிக்கும் பிள்ளைகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு போக பேருந்து வசதி இருக்கிறதா?

இன்னும் எத்தனையோ கிராமங்களில் அடிப்படை சுகாதார வசதி நல்ல குடிநீர், கழிப்பிடம்,மருத்துவம், தார்சாலை,போக்குவரத்து,மின்வசதி இல்லை அதே நேரத்தில் அந்த கிராம மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்,பஞ்சாயத்து தலைவர்,நகர்மன்ற உறுப்பினர்,மாநகராட்சி மேயர்,   சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் பாராளமன்ற உறுப்பினரின் வீடு மற்றும் அவர்கள் குடியிருக்கும் பகுதியில் எல்லா வசதியும் இருக்கிறது இதுதான் நமது சுதந்திர இந்தியா.

ஒருபுறம் தண்ணிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள் இன்னொருபுறம் பணத்தை தண்ணீராக செலவு செய்துகொண்டிருக்கிறார்கள்,

இன்றும் காவிரியும் வரவில்லை முல்லையும் வரவில்லை.ஆனால் தீபாவளி வந்துவிட்டது.இதுதான் நாம் காணும் வேற்றுமையில் ஒற்றுமை.

நிறைய சொல்லவேண்டும் என்று தோன்றியது ஆனால் உங்களை ஒரு நிமிடம்தான் இருக்கச்சொன்னேன் அதனால் இது போதும் யோசியுங்கள்.