Tuesday, August 31, 2010

ஆறறிவு!


விதை
காற்றடித்தால்
பறந்துபோகும்,

அது
விதைக்கப்பட்டாலோ
அல்லது தானாக
விதையிடப்பட்டாலோ

ஒரு செடியாக,
வாசனை
தரும் மலராக,
பூ மாலையாக,
கனியாக,
நிழல் தரும் மரமாக,
வனமாக,வனவிலங்குகளின்
புகலிடமாக, மழை தரும்
இயற்கை அரணாக
விளங்குகிறது,

ஆறடி உயரமும்
ஆறறிவும் படைத்த மனிதன்
மதம்,இனம்,மொழி,
சாதி,தீவிரவாதம்,
பயங்கரவாதம் என பிரிந்து
தானும் அழிந்து
பல அப்பாவிகளையும்
கொன்று குவித்து

அறிவியலெனும் பெயரால்
இயற்கையையும்
அழிக்கிறான்.

விதைக்கு இருக்கும்
அறிவு கூ ஆறறிவு
படைத்த மனிதனுக்கில்லையே!

Saturday, August 28, 2010

நவீன புத்தர்!


புத்தர்
ஊருக்கு வெளியே இருந்த அரச மரத்தடியில் தியானத்தில் இருந்தார்

ஒரு பெண் தனது ஐந்து வயது மகனுடன் வந்தார்

ஐயா எனது மகனுக்கு பள்ளியில் இடம் கிடைக்க வில்லை தாங்கள்தான் சிபாரிசுசெய்யவேண்டும் என்று சொன்னார்


புத்தர் என்னமா சொல்கிறாய் பாரதி கண்ட கனவு நினைவாகி விட்டது ஆனால்உனது மகனுக்கு பள்ளியில் இடம் கிடைக்க வில்லை என்று சொல்கிறாய்? அதற்கு நான் சிபாரிசு செய்ய வேண்டுமா?

பெண்மணி ஐயா பாரதியின் எந்த கனவு நிறைவேறியிருக்கிறது?
தெருவெங்கும் பாடசாலைகள் அமைப்போம் என்று சொன்னார்,இன்றுதெருவெங்கும் பாடசாலைகள் இருக்கிறது ஆனால் அவைகள் கல்வியை ஒருசேவையாக செய்யவில்லை அதை ஒரு வியாபாரமாக செய்கிறார்கள்


சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொன்னார், இன்று அந்த சாதியால் தான் எனது மகனைபள்ளியில் சேர்க்க முடியவில்லை


மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையை போக்குவோம் என்று சொன்னார்
இன்றோ பெண்களை ஒரு காட்சி பொருளாகவும் காமத்தை துண்டும் ஒருபொருளாகவும் பயன் படுத்துகிறார்கள்


இதுதான் பாரதி கண்ட கனவா ஐயா?

பெண்ணே இதற்கு நவீன பாரதிதான் பதில் சொல்ல வேண்டும் சரி உனது பிரச்சணையை சொல்,

பெண்மணி ஐயா எனது மகனுக்கு சாதி சான்றிதழ் இல்லை அதைகொண்டுவந்தால்தான் சேர்ப்போம் என்று சொல்லிவிட்டனர்

சரி பெண்ணே அதற்கு காலதாமதமாகும்,முதலில் நீ உன் மகனை பள்ளியில்சேர்த்துவிட்டு வா அவர்களிடம் இன்னும் ஓரிரு நாட்களில் தருகிறேன் என்றுசொல் என்று சொன்னார்,

அதன்படி அந்த பெண்மணி தனது மகனை பள்ளியில் சேர்த்துவிட்டு வந்தார்


ஐயா தாங்கள் சொன்னபடி நான் எனது மகனை ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டேன்இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் ஐயா என்றாள்

புத்தர் பெண்ணே நான் சொல்வதை கவனமாக கேள் அதன்படி இருவரைஅழைத்து வா அப்படி நீ அழைத்து வந்தால் கண்டிப்பாக உனது பிரச்சனை ஒருமுடிவுக்கு வந்துவிடும்,

சொல்லுங்கள் ஐயா செய்கிறேன் என்றாள்

பெண்ணே எவரொருவர் வீட்டில் தான் அல்லது எனது குடும்பம் இந்த சாதி எனஎந்தவித சான்றிதழும் வாங்காமல் இருக்கிறாரோ அவர்களில் ஒரே ஒருவர்


மற்றும் புறத்தால் எவரொருவர் இன்ன மதம் இன்ன இனம் (பார்வையில்இந்து,கிருத்துவர்,இஸ்லாமியர்,
சீக்கியர்,கறுப்பர்,வெள்ளையர்)என எளிதில்
கண்டு கொள்ள முடியாமல் சொல்ல முடியாமல் இருக்கிறாரோ

அவரை அழைத்து வா என்று சொன்னார்.

பெண்மணி ஐயா இவர்களை நான் எங்கு போய் தேடுவது?

இந்த உலகம் முழுக்க எங்கு வேண்டுமானாலும்
போய்
தேடி அழைத்துவா என்றார்.

சிறிது நாட்கள் கழித்து பெண்மணி வந்தாள்
என்னமா அழைத்து வந்தாயா?
ஐயாஎனது நீங்கள் சொல்லியது போல் எவரும் இல்லை


பெண்ணே இதுதான் நீ வசிக்கும் இன்றைய உலகம்

உனக்கு அடிபட்ட போதுதான் நீ வலிக்கிறது என சொல்கிறாய்

அதையே அங்கு போகாதே அதை செய்யாதே என மேதைகளும் மகான்களும்சொன்னபோது கேட்கமருத்து விட்டாய்

இப்போது நீயே சொல்கிறாய் பாரதி கண்ட கனவு வேருவிதமாகத்தான் நிறைவேறியிருக்கிறது என்று


ஏன் உனக்கு தோன்றவில்லை நாம் ஒரு விதையாக மாறக்கூடாதென்று,
அப்படி நீ எண்ணியிருந்தால் உதவி கேட்டு என்னிடம் வந்திருக்க மாட்டாய்


ஐயா அப்படியென்றால் முடிவு என்ன?

இதற்கு என்னால் முடிவு சொல்ல முடியாது ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகசொல்லமுடியும் மனிதன் இயற்கையாய் அழிவதை விடசாதியாலும்,இனத்தாலும், மதத்தாலும் சண்டையிட்டு அழியபோவது உண்மை.

குறிப்பு:

இது வெகு காலமா எனது மனதில் ஓடிக்கொண்டிருந்த ஒன்று

புத்தரை பற்றி நான் இரண்டாம் வகுப்பில் படித்திருக்கிறேன் அதில் சொல்லப்பட்ட ஒரு விஷயம் என்னை சிந்திக்க வைத்தது ஆம் அதில் ஒரு பெண் தனது இறந்த மகனின் சடலத்தை புத்தரிடம் கொண்டு வந்து
ஐயா எனது மகனை உயிர்பித்து கொடுங்கள் என்று சொல்வார் அதற்கு புத்தர்
பெண்ணே சாவேதும் அறியாத வீட்டில் இருந்து சிறு கடுகேனும் கொண்டுவா உன் மகனை நான் உயிர்த்தெழ செய்கிறேன் என்று சொல்லுவார்

அந்த பாடல் வரி இன்னும் உயிரோடு இருந்திருக்கிறது எனது உள்ளத்தில் அதுதான் இன்று நவீன புத்தராக வந்திருக்கிறது இதில் இன்னும் சொல்ல நினைத்தேன் ஆனால் இதுவே போதுமென தோன்றியது

உங்கள் கருத்துக்கள் அவசியம் தேவை.

Friday, August 27, 2010

நவீன தமிழ் பாட்டு !



செந்தமிழ் நாடெனும்
போதினிலே துன்பம்
தேடி வருது தன்னாலே!

எங்கள் தந்தையர்
நாடெனும் பேச்சினிலே
தமிழ் மானம் போகுது ஈழத்திலே!

காவிரி தென்பெண்ணை
பாலாறு தமிழன் கை
ஏந்த வைத்த பெரு நதி

என மேவிய ஆறு பல
ஓடியும் வறண்டு கிடக்குது
தமிழ்நாடு!

Monday, August 23, 2010

Hai!

இதை நான் எழுதி 10 வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் இன்று வரை கொடுக்க வில்லை எனது காதலியிடம் என்னிடம்தான் இருக்கிறது பத்திரமாக
உங்கள்
பார்வைக்காக .
இன்று அந்த பெண் எங்கு இருக்கிறார்களோ தெரியவில்லை,ஆனால் இன்றும் என் இதயத்தில் இருக்கிறார்.

Hai! 03-02-2000
My Dear Friend xxxx

How are You I hope you are fine,though you are not thinking about me,
i am always thinking about you, you are not speaking to me because of some reason,
and I know that you will not say to me that reason.

Eventhough our friendship was there Only for a short period 2 months at least at this Juncture,i would like to get a true openion about me thats is your Likes and dislikes inme,so I kindly request you to give me an autograph in this dairy.

"Love is great" but the bond of "Love called friendship"that exists between us is much more greater than Love" Please don't spoil it.


Endrum Anbudan
Inak:-)

Thursday, August 19, 2010

நாளைய வரலாறு!

வரலாற்று புத்தகத்தில்
கதிரவன் மறையாத

நாடு என்று ஒன்று

இருந்ததை நான்

படித்திருக்கிறேன்!


இது நான் படித்த வரலாறு


இன்று கதிரவன்

மறையாத ஒரு இனம்

இருக்கிறதென்றால்

அது உலக செம்மொழியாம்

தமிழை பேசும்

நம் தமிழினம்தான்!

இது நாளைய வரலாறு!

இது என் சந்ததியினர்

படிக்கவிருக்கும் வரலாறு.










Thursday, August 12, 2010

கடன்!


வீட்டு மனை வாங்கவும்,
வீடு கட்டவும்
வீடு கட்டியபின்
பைக், கார் வாங்கவும்
இன்று நிறைய வங்கிகள்
கடன் தருகின்றன

நாளை விவசாயம்
செய்வதற்கு நிலத்தை
எந்த வங்கி கடனாக
தரப்போகிறதோ?
தெரியவில்லை!

Monday, August 9, 2010

உலக நாயகன்!


பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள்
பத்து வேடங்களில் நடித்து
உலக நாயகனானார்

அவர் ஒரு படத்தில் பத்து
வேடங்களில் நடித்தார்

நானே எனது வாழ்க்கையில்
பல வேலைகளை செய்திருக்கிறேன்
எனவே என்னையும்
உலக நாயகன் என்று சொல்வதில்
தவறில்லை என நினைக்கிறன்

இதை கொஞ்சம் பாருங்கள்.

Saturday, August 7, 2010

முக்குரோடு!


கடவுளுக்கும்
கற்சிலைதான்!

கடவுள் இல்லையென்று
சொன்னவர்க்கும்
கற்சிலைதான்!

கடவுளின் சிலை
தினந்தோறும்
குளிப்பாட்டப்படுகிறது

இவரோ மழை
பெய்தால் குளிக்கிறார்

கடவுளுக்கு நெய்யாலும்
பாலாலும் அபிஷேகம்
செய்யப்படுகிறது

இவருக்கு பறவைகளின்
எச்சம்தான்!

கடவுளுக்கு
தினந்தோறும் மாலை
அணிவிக்கப்படுகிறது

இவருக்கு பிறந்தாநாள்
மற்றும் நினைவுநாளின்
போது மட்டுமே!

கடவுளின் சிலை விலை உயர்ந்த
பொருட்களால் செய்யப்படுகிறது

இவருக்கோ அதிக பட்டசம்
வெண்கலம்

கடவுளின் சிலை
மூலஸ்தலம்!

இவரோ முக்குரோடு!

Thursday, August 5, 2010

எது வாழ்க்கை! (06-06-02)


வாழ்க்கை!
பிறந்தோம் வருகிறோம்
இறக்கிறோம் இதுதான்
வாழ்க்கையா?

வாழ்க்கை
வெறும் மனிதனுக்கு மட்டும்தான்
உரியதா? அல்லது மற்ற
ஜீவராசிகளுக்கும் பொருந்துமா?
தெரியவில்லை எனக்கு

இது ஒரு புறமிருக்க
மனிதனை பற்றியும் அவனது
பிறப்பின் இரகசியங்களைப்பற்றியும்
ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது

கடவுள்தான் இப்புவியில்
மனிதனை படைத்தானென்று
சொல்லிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்

இதில் எது உண்மை!
இது ஒருபுறமிருக்க

ஒரு செல்தான் மூலக்காரணமென்று
அறிவியல் சொல்கிறது

இல்லை இல்லை
எங்கள் கடவுள் தான்
நம்மை படைத்தானென்கிறது
ஒரு கூட்டம்!

இப்படியே காலங்கள்
நகர்ந்து கொண்டிருக்கிறது

இது ஒரு புறமிருக்க

மனித மூளை
அதிக சக்தி வாய்ந்தது போலும்
மற்றவைகளைப் பார்த்து
தன்னை வளரத்துக்கொண்டான்
இன்னும் வளர்த்துக்கொண்டு தான்
இருக்கிறான்

பூமியை ஆராய்ந்தான்
அதன் வடிவத்தை
கண்டுபிடித்தான்
பூமிக்கு ஒரு துணைக்கோளென
சந்திரனை கண்டறிந்தான்
அதில் தனது கால் தடத்தையும்
பதித்தான்

அப்போதும் அவனது தாகம்
தணியவில்லை இன்று
செவ்வாயில் காலடி பதிக்க
முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறான்

இவைகளனைத்தும்
வாழ்க்கையெனும் பாதையில்
இப்புவியில் நடந்து
கொண்டிருக்கின்றன

உண்மையில் வாழ்க்கை என்றால்
என்ன? விடை.....

மனித யுகத்தில்
வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை
எத்தனையோ கோடிகள் ஆனால்
அதில் இன்னும் வாழ்ந்து
கொண்டிருப்பவர் ஒரு சிலரே!

எங்கோ போகிறான்
தோ செய்கிறான்
எதையோ பெறுகிறான்
அதற்குத்தான் மரியாதையும்
தருகிறான்

அதையே உயர்வாகவும்
அதை பெற்றிருப்பவரே
பெரியவரென்றும் சொல்கிறான்
இன்றைய மனிதன்!

அதற்காக ஏமாற்றுகிறான்,
பொய் சொல்கிறான்,
திருடுகிறான்,கொலை செய்கிறான்

அது வேறுதுவுமில்லை
வெறும் வெற்றுக் காகிதத்தில்
அச்சிடப்பட்டுள்ள பணம்

அடே மனிதா
ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தாயா?
உனது வாழ்க்கை தரத்தை

உனது முன்னோர்களின்
வரலாற்றையாவது படித்தாயா?
இல்லையே ஏன்?

நீ உன்னுடைய அதி புத்தியால்
இயந்திரமாயமாக்கப்பட்டுவிட்டாய்
காலத்தைவிட வேகமாக
இயங்கிக்கொண்டிருக்கிராய்

அடே மனிதா
இப் பிரபஞ்சத்தில்
ஒரு பால்வெளித்திரனில்
ஒரு சூரிய குடும்பத்தில்
இந்த புவியில் நீ இருப்பது
மிகப்பெரிய விஷயம்

ஆனால் உன்னுள்தான்
எத்தனை வகைகள்

ஒருபுறம் சுயநலவாதி,
ஒருபுறம் அரசியல்வாதி,
ஒருபுறம் மதவாதி,
ஒருபுறம் தீவிரவாதி,
ஒருபுறம் பயங்கரவாதி

மனிதனே
இப்புவி தோன்றியதற்கு
வரலாறு உண்டு

பல அறிய உயிரினங்கள்
வாழ்ந்ததற்கு வரலாறு உண்டு
அதே உயரினம் அழிந்ததற்கும்
வரலாறு உண்டு

நீ வந்ததற்கு வரலாறு உண்டு
ஆனால் நீ வாழ்ந்ததற்கு வரலாறு
வேண்டுமா?வேண்டாமா?
இயற்கையாய் சாகப் போகிறாயா?

அல்லது பலவிதங்களில் சண்டை போட்டு
ஒட்டு மொத்த மனித இனத்தையே
அழிக்கப்போகிறாயா?
நீயே முடிவு செய்து கொள்

எது வாழ்க்கையென்று?

Wednesday, August 4, 2010

நடந்துகொள்! (05-02-02)

நான் தெய்வ நம்பிக்கை
இல்லாதவன் இல்லை!

கடவுள் இல்லையென்று
சொல்லும் நாத்திகனும் இல்லை!

ஆனால்
மனித குலத்திற்கு அப்பாற்பட்ட
சக்தி ஒன்று இருக்கிறது

அது
கல்லை விநாயகர் என்றும்,
மரத்தை சிலுவை என்றும்,
நிலவை பிறை என்றும்
வணக்குகிறது இந்த உலகம்!

இந்த கல்லும்,மரமும்
பிறையும் மனிதனை
நல்வழிப்படுத்துவதர்க்காகத்தான்
உருவாக்கப்பட்டன!

ஆனால் இன்று
இவைகளின் பெயரை சொல்லி
மனித குலத்தை
நாசப்படுத்திக்கொண்டிருக்கிறது
ஒரு கூட்டம்

மனிதனே
மீண்டுமொருமுறை சொல்கிறேன்

மதங்கள் மனிதனுக்காக அன்றி
மனிதன் மதத்திற்காக அல்ல!

இதை உணர்ந்து நடந்து கொள்!

Inahk:-)