Thursday, August 27, 2009

இயற்கை!


விரும்பியதும் தேடியதும்
விரும்பியபோதும்
தேடியபோதும்
கிடைக்காதபோது

அதை நாம் வெறுத்து
மறந்தபோது நம்மை
தேடிவரும் இது இயற்கை!

அதை ஏற்றுக்கொள்கிறோமா?
இல்லையா? என்பதுதான்
வாழ்க்கை!

Inak:-)

சுத்தம்!


நாம் சாப்பிடும் தட்டை
சுத்தம் செய்யாமல் இருக்கலாம்
காரணம் அது நாம் சாப்பிடும்
இடத்தைப் பொருத்தது!

ஆனால் நாம் வேலை
செய்யும் இடத்தை
சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

காரணம் அந்த சாப்பாடு
நாம் செய்யும் வேலையின்
மூலமாகத்தான் கிடைக்கிறது!

எனவே நாம் வேலை
செய்யும் இடத்தை
சுத்தமாக வைத்திருப்போம்!

Inak:-)

Wednesday, August 26, 2009

வயது14!


இது ஒரு பழைய பாடல் அதை எழுதியவர் யார் என்று எனக்கு இன்னும்தெரியவில்லை ஆனால் அதன் வரிகளை மாற்றி எழுதியிருக்கிறேன், அந்த பாடலின் உண்மையான வயது எனக்கு தெரியவில்லை இதன் வயது 14,

ஆம்! இதுதான் நான் முதன் முதலாக எழுதிய ஒன்று 1995 ஆம் வருடம் நான்பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது எழுதினேன் அப்போது ஒருமுறைபள்ளியில் பாடியிருக்கிறேன் அதன் பிறகு இதுவரை பாடவில்லை,இரண்டுவருடத்திற்கு முன்னாள் சென்னையில் உள்ள ஒரு சில FM நிலையங்களில்வாய்ப்பு கேட்டு சென்றேன் ஆனால் கிடைக்கவில்லை பரவாயில்லை அன்றுபாடியிருந்தாலும் சென்னை மட்டுமே கேட்டிருக்கும் ஆனால் இன்று உலகத்தில்உள்ள தமிழர்கள் படிப்பார்கள் அந்த பாடல் இதுதான்

அடிக்காதே தம்பி பிட்டை அடிக்காதே!
அடிக்காதே தம்பி பிட்டை அடிக்காதே
பரிட்சையை நினைத்து பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

அடிக்காதே தம்பி பிட்டை அடிக்காதே!

சிந்தித்துப்பார்த்து செய்கையை மாற்றி
ஒழுங்கா படிக்கோ கத்துக்கோ
பாடத்தை முறைய படிக்க கத்துக்கோ
தெரிந்து தெரியாம அடிச்சிருந்தா
அத திரும்பவும் அடிக்காம பாத்துக்கோ!

அடிக்காதே தம்பி பிட்டை அடிக்காதே!

திட்டம்போட்டு அடிக்கிற கூட்டம்
அடித்துக்கொண்டே இருக்குது
பிட்டை அடித்துக்கொண்டே இருக்குது!
அதை சட்டம் போட்டு தடுக்குற ஸ்குவாடும்
தடுத்துக்கொண்டே இருக்குது
ஸ்குவாடும் தடுத்துக்கொண்டே இருக்குது!
அடிப்பவனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால்
பிட்டு அடிப்பவனாய் பார்த்து திருந்தாவிட்டால்
பிட்டை ஒழிக்கமுடியாது!

அடிக்காதே தம்பி பிட்டை அடிக்காதே!

படிக்குற காலம் நெருங்குவதால்
இனி அடிக்குற அவசியம் இருக்காது!
இனி அடிக்குற அவசியம் இருக்காது
பாடம் கவனிப்பதேல்லாம் போதுவாய்ப்போனால்
பாடம் கவனிப்பதேல்லாம் போதுவாய்ப்போனால்
திரும்ப படிக்குற வேலையும் இருக்காது!

எடுக்குற நோக்கம் உறுதியாகிட்டால்
மார்க்கு எடுக்குற நோக்கம் உறுதியாகிட்டால்
இரவில் தூக்கம் வராது
மனம் உள்ளம் என்றும் தூங்காது!

அடிக்காதே தம்பி பிட்டை அடிக்காதே!

Inak:-)

Monday, August 24, 2009

தாஜ்மகால்!


தாஜ்மகால்!
காதலர்களின் சின்னம்
இதை உலகமறியும்!

அதனில் இருக்கும்
உண்மையை யாரறிவார்?

ஆம்?

உண்மையான காதலை
வெறும் வார்த்தைகளால்
வர்ணித்துவிட முடியாது!

உண்மையான காதலை
சொல்ல வார்த்தைகளும்
கிடையாது!

காதல் ஒரு கலை
அந்த கலையை
கலை நுணுக்கத்துடன்
ஒரு அழகிய சிற்பமாக
உலக அதிசயமாக
செதிக்கியுள்ளார் ஷாஜகான்!


Inak:-)

Saturday, August 22, 2009

ஊனம்!

னம்!
பிறக்கும்போது
நான் னமாக பிறக்கவில்லை!

நான் வாழும்போது
னமானேன்!
ஆம்!

பார்வையற்றவர்
பாதையை
கடக்கும்போது அவருக்கு உதவாமல்
நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததால்
குருடனானேன்!

பெற்றோரின் அறிவுரையை
கேட்காமல் போனபோது
செவிடனானேன்!

சாலையில் சென்றபோது
கண்முன் எதிர்பாராமல்
நடந்த விபத்தின்போது
ஓடிச்சென்று உதவாமல் போனபோது
நானும் னமானேன்!

எனது ஐம்புலன்கள்
ஆரோக்கியமாக இருந்தும்
நான் னமானேன்!

நீங்களும் என்னைப்போல்தானா?

Inak:-)

Friday, August 21, 2009

ஆடித்தள்ளுபடி


ஆடித்தள்ளுபடி!
பல பொருட்கள்
பல்லாயிரம் விலை
தள்ளுபடி செய்து தருகிறார்கள்

ஒருவரும் உணவை
மட்டும் தள்ளுபடி
செய்து தருவதில்லையே?


சின்ன உதாரணம் நமக்காக:
ஒரு இட்டிலி சாப்பிட்டால் முன்று இட்டிலி இலவசம்,
ஒரு முழு சாப்பாடு வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம்,
ஒரு டி வாங்கினால் ஒரு டி இலவசம்


Inak:-)

Tuesday, August 11, 2009

நமது சொத்து!


நமது சொத்து!
எது நமது சொத்து?
எங்கிருக்கிறது?

நாம் வாங்கினோமா?
அதன் விலை என்ன?
நாம் இன்றும் அதை
பயன்படுத்திக்கொண்டிருக்கிறோமா?
நம்மிடம்தான் அது இருக்கிறதா?

அந்த சொத்து?......... சிரமத்திற்கு மன்னிக்கவும்

தொடரும்........

விமானம்!

மனிதன்
தூரத்தை எளிதில்
கடக்க விமானத்தைக்
கண்டுபிடித்தான் அன்று!


தூரத்தைக் கடக்கிறானோ
இல்லையோ பல நோய்களை
பல நாடுகளுக்கு எளிதில்
கடத்துகிறான் இன்று !

இதுதான் விஞ்ஞான
உலகமோ?

Inak:-)







Tuesday, August 4, 2009

நான் எதிர்பார்த்தது!


மன்னிக்கவும்
நான் எதிர்பார்த்தது என்று சொல்லியதற்கு,
எதிர்பார்க்கிற அளவிற்கு நான் ஒன்னும் சிறந்தவனில்லை
இருந்தபோதிலும் மனது சொல்ல நினைத்ததை சொல்லுகிறேன்

இது விஜய் தொலைகாட்சியில் நடந்து முடிந்த ஒரு
கலந்துரையாடலைப் பற்றியது

இரண்டு நிகழ்ச்சிகள்
முதல்
கலந்துரையாடல் நாடகத்தன்மை தேவையா தேவையில்லையா?

இதில் தேவையில்லை என்று பேசிய ஒருவர்
என்னால் எந்த ஒரு கம்பெனியிலும் ஆறு மாதத்திற்கு மேல் நிரந்தரமாக வேலை செய்யமுடியவில்லை காரணம் அங்கு தேவைப்படுகிறது நாடகம் என்று சொன்னார் அவரை நான் பாராட்டுகிறேன்

அதே சமயத்தில் அவர் அடுத்த நிறுவனத்திற்கு வேலைக்கு மனு போடும்போது அவருடைய Bio Data வில் என்ன காரணம் சொல்லி நிரப்புவார்?
கண்டிப்பாக அதில் எதாவது ஒரு பொய்யை சொல்லித்தான் நிரப்பவேண்டும் அதுதான் நாடகம் இந்த நாடகம் அவருக்கு ஒரு வேலையை தருகிரதுதானே?
இதை அன்று யாரும் கேட்கவில்லை.

இரணடாவது ஆடம்பர திருமணம் தேவைதானா?

நிறைய பேர் நன்றாகவே பேசினார்கள்
நான்
எதிர்பார்த்தது ஆடம்பர திருமணத்தை இப்படியும் செய்யலாமே!

இன்று நமது நாட்டில் நிறைய காப்பகங்கள் இருக்கின்றன,எத்தனையோ பேர் நோய்வாய் பட்டு சிகிச்சைக்கு பணமில்லாமல் சரியான நேரத்தில் சிகிச்சை செய்ய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,
திருமண நாளன்றோ அல்லது அதற்கு முதலோ இவர்களில் யாருக்காவது செய்யலாமே,
திருமணம் ஆடம்பரமாக செய்யவேண்டும் அதற்கு நிறைய பணம் செலவு செய்யவேண்டும் அந்த பணத்தை இதுபோல் செலவு செய்யலாமே நிறைய பேர் அதன் மூலம் பயன் பெறுவார்களே!

இவற்றைத்தான் நான் எதிர்பார்த்தேன்

இதில் ஏதேனும் தவறு இருப்பின் தயவு செய்து சொல்லுங்கள்!


Inak2721@yahoo.com

Inak:-)

சொல்ல விரும்பிய விஷயங்கள்!




சொல்லிக்கொண்டிருக்கிறேன்...............

Sunday, August 2, 2009

பொறுமை!


நாம்
மிகப்பொறுமையுடன்

கேட்போமேயானால் சிறு
குழந்தைகளிடமிருந்து
எவ்வளவோ விசயங்களை
கற்றுக்கொள்ளமுடியும்!

இது மகாத்மா காந்தி சொன்னது

அதுபோல்!

நாம் மிகப்பொறுமையுடன்
பழகுவோமேயானால்
வீட்டு விலங்குகளிடமிருந்தும்
நல்ல விசயங்களை
கற்றுக்கொள்ளமுடியும்!.

Inak:-)