Thursday, March 26, 2009

மூன்று மணிநேரம்

திரைப்படம் இது
வெறும் திரையில் ஒடக்கூடி
ஒரு படமா? அல்லது
ஒரு பொழுதுபோக்கு ஊடகமா?

இல்லை!

மூன்று காலங்களையும்
மூன்றே மணிநேரத்தில்
உதாரனங்களோடு
சொல்லக்கூடிவன்!

எனைப்பொருத்தவரை
ஜோதிடம் சொல்பவரைவிட
இவனையே நான் நம்புகிறவன்!

விடுதலைப்போரட்டக்க்காலத்தில்
மக்களிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்தியவன்

தியாகிகளையும் தலைவர்களையும்
கண்முன் நிறுத்தியவன் இவன்தான்!

கருவிலிருந்து கல்லறைவரை
மனித உறவுகளை பல்வேறு
கோணங்களில் சொல்பவன் இவன்தான்!

காதலைப்பற்றியும்,காதலுக்கு
பல்வேறு கோணங்களில் புதுப்புது
அர்த்தங்களை கொடுத்தவனும்,
கொடுப்பவனும் இவன்தான்!

இளைய சமுதயாத்திற்கு
என்றுமே இளமை இவன்!
அதேசமயத்தில் நல்ல விஷயத்தை
எடுத்துக்
கொள்ளாதது
இளைய சமுதாயத்தின் தவறு!

அரசியலையும்,அரசியல்வாதிகளின்
அட்டுழியத்தையும் அச்சமில்லாமல்
சொல்பவன் இவன் ஒருவன்தான்!

இவனொரு பொழுதுபோக்கன் மட்டுமல்ல!
பலபேருடைய கஷ்டங்களை போக்குபவன்,
பலரை உலகிற்கு அடையாள காட்டியவன்,
அதேசமயத்தில் பலபேருக்கு கஷ்டங்களை
கொடுத்தவனும் இவன்தான்!

இவ்வளவு விஷயங்களை
மூன்றே மணிநேரத்தில் சொல்கிற
இவன் உங்களுக்கு எப்படியோ?

(குறிப்பு)
மனபுக்கத்திலிருந்து விடுபட நான்ழுதிய
ஒரு பொழுதுபோக்கு தொகுப்பு .

Inak:-)




No comments: