Monday, March 30, 2009

கடைசி ஆசை!

பெண்ணே!
நீ பேசுவாய்யென
காத்திருந்தேன்!

காலங்கள்தான் கடந்தது
உன்னிடமிருந்து இதுவரை
எந்த அழைப்பும் வரவில்லை!

நான் அழைத்தலோ நீயும்
பேசமறுக்கிறாய்!

நான் வைத்திருந்த உன்
புகைப்படங்களையும்
அழித்துவிட்டாய்!

உன்னைபிடித்த எனை
உனக்கு பிடிக்காதபோது நான்
இருக்கவிரும்பவில்லை!

ஆனால் எனதுள்ளத்தில் உள்ள
உன் நினைவுகளை
உன்னால் அழிக்கமுடியாது

அதுவும் உனக்கு
பிடிக்காத்தென்பதால்
இந்த முடிவு

இதனால் நீ மனநிம்மதி அடைவாய்

நானிறந்தபிறகு
என்னுடலை பார்க்க வருவாயா?
என்னுடலுக்கு மாலை போடுவாயா?

அந்த செலவையும் நானுனக்கு
வைக்கவிரும்பவில்லை

காரணம் உனது செல்போனுக்கு
நான் ஏற்கனவே Top Up செய்துள்ளேன்!

ஒருசொட்டு கண்ணிராவது
சிந்துவாயா?கண்ணிரில்
கஞ்சத்தனம் காட்டாதே!

அழுதால் உடலுக்கு நல்லது!
இதை நான் சொல்லவில்லை
மருத்துவம் சொல்கிறது


எனது கடைசி ஆசை
நீ உனது செல்போனிலிருந்து
எனது செல்போனுக்கு
ஒருபோதும் அழைக்காதே!

காரணம் உனக்காக
நான் வைத்திருக்கும்
அழைப்பு சத்தம் எனை மீண்டும்
உயிர்த்தெழசெய்து விடும்!

அதுவே உனக்கு மீண்டும்
தொல்லையாகிவிடும்!

இனி எனது தொல்லையில்லாமல்
நிம்மதியாக இருக்கலாம்!

உனது நிம்மதிதான்
எனது மகிழ்ச்சி!
Inak:-)




























No comments: