போருக்குபோய்வா என்று சொல்லிய
தாயை காணவில்லை!
குடும்பதைக்காக்காமல் சுதந்திரத்தைக் காத்த
குடும்பத்தலைவனைக் காணவில்லை!
உயர்த்தியாகம் செய்த தலைவர்களின்
காலடிசுவடுகளைக் காணவில்லை!
சிறந்ததலைவர்களின் கொள்கைகளை
காணவில்லை!
சிறந்த கொள்கைகளை கொண்ட
கட்சிகளைக் காணவில்லை!
தொண்டுள்ளம் கொண்ட
அமைப்புகளைக் காணவில்லை!
துடிப்புமிக்க இளைஞனை
காணவில்லை!
தன் மனைவியைம்ட்டும் நேசித்த
கணவனைக் காணவில்லை!
மருமகளை வா வா என்றழைத்த
மாமியாரைக் காணவில்லை!
கூட்டாக இருந்த குடும்பங்களை
காணவில்லை!
மக்களிடம் ஒற்றுமையை
காணவில்லை!
நாட்டில் ஜானானாயகத்தை
காணவில்லை!
மொத்தத்தில் பல தியாகிகள்
போராடி பெற்றுத்தந்த
சுதந்திரத்தையும் காணவில்லை!
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment