நன்றிசொல்ல உனக்கு
வார்த்தைகளில்லை!
நன்றிபல சொல்ல உனக்கு
வார்த்தைகளில்லை!
ஆம்!
கருவறையில் கருத்தரித்த
உயிர்க்கு உருவத்தை
கொடுத்தாய்!
என்பெயரை தெரியாத எனை
உலகிற்கு அடையாளம்
காட்டினாய்!
மழலையில் நான் நடக்க
நீ பல அடிகளை வாங்கினாய்!
என் அறிவு கண்ணை திறக்க
நீ உன் தூக்கத்தை தொலைத்தாய்!
பலபேர்செய்யும் வேலைகளை
நீ ஒருவனே செய்து எனக்கு
புகழை பெற்றுகொடுதாய்!
நான் மனபுழக்கதிலிருந்தபோது
மற்றவர்முன்
உன்முகத்தை மலரச்செய்து
என்மான்ம் காத்தாய்!
தாயின் கருவறையில் கருத்தரித்தது
தெரியாது எனக்கு! ஆனால்
உனைநான் பூமித்தாயின் கருவறைக்கு
அனுப்புகிறேன் ஆம்!
என் வாழ்நாளுடன் வந்துகொண்டிருக்கும்
உனக்கு எப்படி நன்றிசொல்வது?
உன்னை நானின்னமும்
கஷ்டப்படுத்த விரும்பவில்லை!
இதுவரை என்பெயருக்கும்
என்பெரை சார்ந்தோருக்கும்
நீ செய்த உதவிகள் எராளம்!
எனை மன்னித்து விடு உடலே!
நானிதுவரை நல்லவனாக
வாழ்ந்திருந்தால் நாளை
என்பெயரிருக்கும் சரித்திரத்தில்!
அதே சமயத்தில்
உன் உருவத்தைசெதுகுபவர்கள்
உன்னை சிதைதுவிடுவார்கலோவென
பயப்படுகிறேன்!
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment