காணவில்லை !
நிலவிடம் குளுமையை
காணவில்லை !
மேகத்திடம் மழையை
காணவில்லை !
அரசனிடம் ஆட்சித்திறமையை
காணவில்லை!
அதிகாரியிடம் அன்பை
காணவில்லை!
காவல்துறையிடம் கடமையை
காணவில்லை!
சட்டத்திடம் குருட்டுத்தன்மையை
காணவில்லை!
மக்களிடம் ஒற்றுமையை
காணவில்லை!
காணமல் போனது
இவைகள்மட்டுமல்ல
மனிதனின் குணமும்தான்!
எந்தன் மனமும்தான்!

No comments:
Post a Comment