Thursday, March 26, 2009

அனாதை!

ஒரு மனிதன் எப்போது
கவிஞனாகிறான்?
எப்போது ஞானியாகிறான் ?

காதலிக்கும்போது
கவிஞனாகிறான்
! அதே காதல்
கசக்கும்போது ஞானியாகிறான்!

அப்படியானால்
இடைப்பட்டவர்கள்?

மனைவியை காதலிப்பவன்
கவிஞனாகிறான்
!
மனித இனத்தை காதலிப்பவன்
ஞானியாகிறான்!

அப்படியானால்
மனமுடிகாதவர்கள்?

அறிவைக்காதலிப்பவன்
ஆசிரியனாகிறான்!
அதே அறிவைகாயப்படுதுபவன்
ஆண்டியாகிறான்!

அப்படியானால்
மற்றவர்கள் ?

செய்யும் தொழிலை காதலிப்பவன்
முதலாளிகிறான்!
அதே தொழிலை தொலைத்தவன்
தொலைந்தே போகிறான்!

அப்படியானால்
இன்னுமற்றவர்கள்?

நட்பை காதலிப்பவன்
தன்னை
தூக்கிச்செல்ல
நான்குபேரை பெறுகிறான்!

அதே
நட்பை தொலைத்தவன்
கிடத்தயாருமில்லாமல்
அனாதையாகிறான்!

Inahk:-)














No comments: