Friday, April 3, 2009

வழக்கு!

வழக்கொன்று விசாரணைக்கு
வந்திருக்கிறது ஆனால்
வாதிடயாருமில்லை

ஜயா வழக்கொன்று
விசாரணைக்கு வந்திருக்கிறது!
வாதிடயாருமில்லை!

அப்படியென்ன குற்றமெய்தான்?
ஏன்
வாதிடயாருமில்லை!

உண்மயில் அவன் குற்றவாளியல்ல
நீதி கேட்டு வந்திருக்கிறான்

(நீதிபதி கேட்கிறார்)

என்ன பிரச்சனையப்பா

யா இதுநாள்வரை
எங்களினத்தவ்ர் யாரும்
உங்களினத்தவர்களுக்கு
எந்த பிரச்சனையும்
கொடுத்ததில்லை ஒர்சிலரைத்தவிர!

ஆனால் உங்களினத்தவர்கள்
எங்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்

இதற்கு நீதி வேண்டும்
இனி இதுபோல் நடக்காமலிருக்க
பாதுகாப்பு வேண்டும்!

(நீதிபதி)

என்ன சொல்கிறாய்!
கொலை செய்துள்ளனரா?

ஆமாம் யா! ஆமாம்
ஒவொரு ஞா
யிரன்றும்
பல இல்ச்ச்க்கணக்கானவர்களை
கொன்று குவிக்கின்றிர்கள்

அதுமட்டுமல்லாமல்
பண்டிகை,திருவிழாக்களின்போது
எங்களை ப்ழியிடுகின்றிர்கள்
இது எந்த விதத்தில் நியாயம் ?

யா! எங்களுக்கும் உணர்வுகள் உண்டு
இதற்கு ஒரு நியாயம் வேண்டும்!

சிபி மன்னன் வாழ்ந்த மண்ணில்
நீதி கேட்டு வந்திருக்கிறேன்!

(நீதிபதி)

எங்களது வழக்கே நிறைய
நிலுவையில் உள்ளது
இதில் உனக்கு நீதிவேண்டுமா?

யாரப்பா அங்கே இந்த
ஆட்டை கொண்டுபோய்
விலங்குகள் காப்பகத்தில் விடுங்கள்!

வரும்
ஞாயிறு இந்த
ஆடு தப்பித்துக்கொண்டது!




































No comments: