Friday, April 24, 2009

நன்றிகள்!



பொய்யொன்று
சொன்னேன்
உண்மையை மறைக்க!

உண்மையை
மறைக்க
பொய்யொன்று சொன்னேன்!

பொய்யை உண்மையாக்க
பொய்மையுடன் நடந்தேன்!

பொய்யை உண்மையாக்க
பொய்மையுடன் நடந்தேன்!

ஆனால் பொய்மையும்
பொய்த்துவிட்டது!

உண்மையை
மறைக்கமுடியாதென்பதை
உண்மையுடன் உணர்ந்துகொண்டேன்!

உண்மையை உணர்த்திய
பொய்மைக்கு நன்றிகள்!

Inak:-)



No comments: