Saturday, April 4, 2009

விரும்புகிறேன்!


தன் பிள்ளைக்கு ஊட்டினால் போதுமென
நினைக்கும் தாயை வெறுக்கிறேன்!

தன் மகனுக்கு இடம்கிடைத்தால் போதுமென
சேர்க்கும் தந்தையை வெறுக்கிறேன்!

மதிப்பெண்ணை மதிக்காமல் சேர்க்கும்
கல்வி கூடங்களை வெறுக்கிறேன்!


பெற்றோரை மதிக்காமல் போகும்
பிள்ளையை வெறுக்கிறேன்!

இளமையை வீணடிக்கும்
இளைஞனை வெறுக்கிறேன்!

வரதட்சனை கேட்கும் இனத்தை
வெறுக்கிறேன்!

மனைவியை வேலைக்காரியாய்
நடத்தும் கணவனை வெறுக்கிறேன்!

மருமகளை மாடாய் படுத்தும்
மாமியாரை வெறுக்கிறேன்!


தானாண்டால் போதுமென நினைக்கும்
அரசனை வெறுக்கிறேன்!

முறையற்ற அரசுக்கு ஆதரவு தரும்
மக்களை வெறுக்கிறேன்!

சாதி எனும் சாக்கடையை கிளரும்
அன்பனை வெறுக்கிறேன்!


தீயவற்றை பார்க்கும் என்

கண்களை வெறுக்கிறேன்!

வாரி வழங்க மறுக்கும் என்
கைகளை வெறுக்கிறேன்!

ஊனமுள்ளவர்க்கு உதவாமலிருக்கும்
என் கால்களை வெறுக்கிறேன்!

இதயமற்று பேசும் என்
இதயத்தை வெறுக்கிறேன்!

இறந்தும் உதவாமல் போகும்
என் உடலை வெறுக்கிறேன்!

இவைகள் இருப்பதைவிட
இறப்பதையே விரும்புகிறேன்!


Inahk:-)









































No comments: