Saturday, April 4, 2009

வாழ்த்துச்செய்தி!



வாழ்த்துச்செய்தி!

இது நான் முதன் முதலாக எழுதியது,கல்லுரியில்
மூன்றாமாண்டு
படிக்கும்போது ,முதலாமாண்டு படித்த ஒரு பெண்ணின் பிறந்தநாளுக்காக எழுதினேன்,என் உடன் பயின்ற மற்ற நண்பர்கள் வாழ்த்து அட்டைகளை வாங்கி கொடுத்தார்கள் ஆனால் அன்று என்னிடம் காசில்லாததால் ஒரு வெள்ளை காகிதத்தில் ஒரு கவிதையாக எழுதி கொடுத்தேன், இதுதான் நான் முதன்முதலாக எழுதிய கவிதைபோன்ற ஒன்று!

இதில் வேடிக்கையான விஷயம் அந்த பெண்ணிற்கு தமிழ் படிக்கத்தெரியாது,
நானே படித்துச்சொன்னேன்,அந்த அனுபவம் அன்று வித்தியாசமாக இருந்தது எனக்கு.


அந்த பெண்ணோ ரொம்ப நன்றாக இருக்கிறது என்று சொன்னார்,


பெண்ணே ! வாழ்க்கை நமக்கு
கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம்

பெண்ணே வாழ்வில் மறக்கமுடியாத
நாட்களில் பிறந்தநாளும் ஒன்று!
மற்ற நாட்களைக்காட்டிலும்
இந்த நாள் இனிய மகிழ்ச்சியான நாள்!

இந்த நாள் மற்றவர்களின் அன்பையும்,
பெரியவர்களின் ஆசியையும்,
உனக்குத்தரும் நாள்!

பதினேழில் பருவமடைந்து
பக்குவப்பட பதினெட்டைத் தொடுகிறாய்!

வருடங்கள் செல்லச்செல்ல வயதும் ஏறும்
வயதிற்கு ஏறுகிற சக்திதான் உண்டு
இறங்குகிற சக்தி கிடையாது!

வருடங்களும் வயதும் செல்லச்செல்ல
நீ உன் அறிவையும் ஆற்றலையும்
வளர்த்துக்கொள்ளவேண்டும்
அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும்!

எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது முக்கியமல்ல
என்ன செய்தாய் என்பதுதான் முக்கியம்!
வாழ்வில் நீ சாதிக்கவேண்டியவை நிறைய இருக்கிறது

வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை கடந்து
இலட்சியமே குறிக்கோளாயக் கொண்டு
இலட்சியப்பாதையில் பயணம் செய்!

அடுப்புதும் பெண்களுக்கு படிப்பெதற்கு
என்ற காலங்கள் மாறி
அக்னி ஏவு கணையையே
தயாரிக்கும் காலமிது!

மறந்துவிடாதே மறந்தும்
இருந்துவிடாதே உன் இலட்சியத்தை!

வாழ்வில் நீ தாய் தந்தையரின் அன்பையும்,
பெரியவர்களின் ஆசியையும்,
நல்ல நண்பர்களின் துணையையும் பெற்று
வாழ் உன்னை வாழ்த்துகிறேன்!

உன் இனிய பிறந்தநாள்
இன்று (25-10-99) இனிதே அமைய
இறைவனை வேண்டுகிறேன்!

என்றும் அன்புடன்










No comments: