Monday, April 27, 2009

இளமை ஏற்கட்டும் தலைமை!



இளமை ஏற்கட்டும் தலைமை!


இது நான் இரண்டாவதாக எழுதிய ஒன்று, அதே நேரத்தில் நான் கலந்துகொண்ட முதல் கவிதைப்போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசை பெற்றுத்தந்த்து,


இதில் இன்னொரு முக்கியமான விஷயம் அன்றைய தேதி ஆம் Nov 15 1999
நான் முதன்முதலில் எனது Baby My Heart அவர்கள் வீட்டிற்குச்சென்றதும் Nov
15 ஆனால் வருடம் வேறு,

இந்த கவிதையை நான் எழுதியதை என்னால் மறக்கமுடியாது காரணம் அப்போது எனக்கு எழுதவே
தெரியாது ஆனால் கொடுத்திருந்த தலைப்பு என்னை எழுத தூண்டியது,

ஒரு வாரத்திற்கு முன்பே தலைப்பை கொடுத்தார்கள் அன்றிலிருந்து எனக்குள் ஒரு வெறி வந்தது எப்படியாவது எழுதவேண்டுமென்று, ஆனால் எப்படி எழுதவேண்டுமென தெரியவில்லை,

நாட்கள் நெருங்கநெருங்க வெறி அதிகமானது அதே சமயத்தில் எப்படி எழுத்ப்போகிரோமென ஒரு பயமும் கூடவே வந்தது,மாலை 03:30
மணிக்கு ஆரம்பிக்கப்போகிறது போட்டி, என்ன செய்வதென்று
தெரியவில்லை எனக்கு அன்று மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு Tensen இன்னும் அதிகமாகியது இன்னும் மூன்று மணிநேரமே உள்ளது என்னசெய்வதென்று தெரியவில்லை, இடையில் ஒரு பிரிவு ஆசிரியர் வந்துவிட்டார் இன்னும் Tensen அதிகமாகியது எப்போது அவர் போவார் என காத்திருந்தேன்,

ஒருவழியாக போய்விட்டார் எடுத்தேன் paper பேனாவை எழுத ஆரம்பித்ததுதான் தெரியும் எனக்கு அது என்னவென்று நீங்களே படித்துப்பாருங்கள்!




இளமை ஏற்கட்டும் தலைமை!
இதுதான் நீங்கள் கொடுத்திருக்கும்
தலைப்போ?

வெறும் தலைப்பை கொடுத்துவிட்டு
கவிதை எழுதச்சொன்னால்
எப்படி முடியும்?

கவிதையைப்பற்றி
வழிமுறைகள் சொன்னிர்களா?
அல்லது கவிதை எழுத

பாடம்தான் எடுத்திர்களா?

நான் ஒன்று கேட்கிறேன்
எந்தவித வழிமுறைகளையும்
சொல்லாமல்

இளமை ஏற்கட்டும் தலைமை
என்ற தலைப்பை மட்டும்
கொடுத்தால் எப்படி ஏற்பது தலைமை?

இளமை தலைமை ஏற்கவேண்டுமானால்
ஒரு வழிமுறை வேண்டும்
அந்த வழிமுறையை சொல்ல
ஒரு சிறந்த வழிகாட்டி வேண்டும்!

அந்த ஒரு சிறந்த வழிகாட்டி
இல்லாமல் எப்படி எதற்கு
யார் முன்னிலையில் தலைமை ஏற்பது?

கல்வியில் முதலிடம் பெரும்
மாணவனுக்கு வழிகாட்டி
ஒரு ஆசிரியர்!

ஒரு விளையாட்டு வீரனுக்கு
உடற்பயிற்சி ஆசிரியர்!

கப்பலுக்கு வழிகாட்டி
ஒரு காந்த்மாணி!

வானவூர்திக்கு ரேடார்
கூடவே ஒரு கட்டுப்பாட்டறை!

இதுபோல் ஒவ்வொன்றிற்கும்
ஒரு வழிகாட்டி இருக்கும் போது
எனது இளமைக்கு மட்டும்
ஏன் இல்லை வழிகாட்டி?

வழிகாட்டி இல்லாமல்
எப்படி தலைமை ஏற்பது?


அப்படியே தலைமை ஏற்றாலும்
இந்த முதியோர் சமுதாயம்தான்
சும்மா இருக்குமா?

எந்தவித வழிகாட்டியும் இல்லாமல்
இளமை ஏற்கட்டும் தலைமை
என்று சொல்லிவிட்டிர்கள்

எதற்கு ஏற்பது?
எப்படி ஏற்பது?

சொல்லுங்கள் எதற்கு
தலைமை ஏற்பது?

எனக்கு நானே வழிகாட்டியாக

இருந்து எனது இளைய
சமுதாயத்தை நல்வழிப்படுத்த
நான் ஏற்கிறேன் தலைமை!

எனது இளமை தலைமை
ஏற்றால் உலகையே
பசுமையாக மாற்றுவேன்!

ஆனால் நான் ஒரு சிறந்த
வழிகாட்டியை எதிர்ப்பார்த்து

இறுதியில் நானே வழிகாட்டியாக
மாற நினைக்கும்போது

என்னிடம் இல்லை இளமை

இருந்தது முதுமை மட்டுமே!


இந்த கவிதை முரண்பாடான கவிதை என தேர்வு குழுவால் தேர்வுசெய்யப்பட்டு
எனக்கு இரண்டாம் பரிசை பெற்றுத்தந்தது

திரு.லேனா தமிழ்வாணன் அவர்களிடம் இதற்கான பரிசைப்பெற்றேன்.

Inak:-)












1 comment:

Aravind Thiagarajan said...

A good Effort, Really nice one